CATEGORIES
பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு, அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது, என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி
சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
100 போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் குண்டு மழை
ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து 100 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறி உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் விமான பாதுகாப்பு படிப்பு அறிமுகம்
சென்னை ஐ.ஐ.டி. பிரவர்தக், பிரெஞ்சு பல்கலையுடன் இணைந்து, ‘ஏவியேஷன் சேப்டி மேனேஜ்மென்ட்’ என்ற விமான பாதுகாப்பு தொடர்பான படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் இன்று பரிசு
கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, தலைமைக்கழகத்துக்கு 100 பேச்சாளர்களை உருவாக்கித்தர வேண்டும் என்கிற வகையில், ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்த திமுக இளைஞர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விஷம் வைத்து தெரு நாய்களை கொன்றவர் கைது
திரு வேற்காடு அடுத்த பெருமாளகரம் புளூட்டோ தெருவை சேர்ந்தவர் மோகன் (53).
பண மோசடி செய்த பெண் தலைமறைவு
திருவாலங்காடு ஒன்றியம், தாழ்வேடு இருளர் காலனியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் திருத்தணி டிஎஸ்பி கந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
சிந்தலகுப்பம் பகுதியில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மி டிப்பூண்டி அடுத்த சிந்தலக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையிலிருந்து சென்னை செங்குன்றம் செல்லும் கனரக லாரி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு தீர்வு
நுண்துளை அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் லைப்லைன் மருத்துவமனையின் தலைவர் ராஜ்குமார், உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் அனிருத் ராஜ்குமார் இருவரும், அவர்களுடைய பல் நோக்கு மருத்துவக் குழுவுடன் இணைந்து லைப்லைன் மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் இரண்டிற்கும் சிறந்த தீர்வாக லேப்பராஸ்கோப்பி என்ற நுண்துளை அறுவை சிகிச்சை அளிக்கிறார்கள்.
மதுராந்தகம் நகராட்சியில் வியாபாரிகளுக்கு சிறிய உணவக கிச்சன் பாக்ஸ்
மது ராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் தெரு ஓரங்களில் இட்லி, வடை, தோசை சமைத்து விற்பனை செய்யும் பெண்களை நகராட்சி நிர்வாகம் கணக்கீடு செய்து, வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் மூலம் நவீன சமையல் உபகரணங்களுடன் சுகாதாரமான முறையில் சமைத்து வழங்கக்கூடிய சிறிய உணவகம் நடத்துவதற்கான கிச்சன் பாக்சை 19 பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ₹35 லட்சம் வசூல்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் என நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
மதுராந்தகம் எம்எல்ஏவின் மாமனார் உடல் நலக்குறைவால் மரணம்
மது ராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேலின் மாமனார் கே. சுப்பிரமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
காதலன் பிரிந்து சென்றதால் விரக்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு திருநங்கை தற்கொலை
மாங்காடு அருகே காதலன் பிரிந்து சென்றதால், விரக்தி அடைந்த திரு நங்கை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மாடுகளை பராமரிக்க புதிதாக 12 இடங்களில் மாட்டு தொழுவங்கள்
சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
நடுவானில் கர்ப்பிணிக்கு பிரசவம் செங்கல்பட்டு ஆண் செவிலியருக்கு அமைச்சர் சா.மு.நாசர் பாராட்டு
நடுவானில் ஆந்திர கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த செங்கல்பட்டை சேர்ந்த ஆண் செவிலியருக்கு சிறு பான்மையினர் அமைச்சர் சா.மு.நாசர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த பதிவாளருக்கு 4 ஆண்டு சிறை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை பத்திரப்பதிவுத் துறை மாவட்ட முன்னாள் பதிவாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலியல் தொழில் செய்வதாக மிரட்டி மசாஜ் சென்டரில் பணியாற்றும் இளம் தெரப்பிஸ்ட் பலாத்காரம்
மதுரவாயல் பகுதியை சேர்ந்த வர் ராணி (32, பெயர் மாறியுள்ளது). இவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது:
ராயபுரம் பகுதியில் த தவெக பேனர் வைப்பதில் இரு தரப்பினர் மோதல்
ராயபுரம் புது காமராஜர் நகர் 4வது தெருவை சேர்ந்த வர் புவனேஷ் குமார் (29), ஆட்டோ டிரைவர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்து பீர் பாட்டிலால் மாணவன் மண்டை உடைப்பு
கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் 3ம் ஆண்டு மாணவனை, சீனியர் மாணவர்கள் மது போதையில் அழைத்து ராகிங் செய்து, பீர் பாட்டிலால் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீபாவளியை முன்னிட்டு காட்டன் ஹவுஸில் சலுகை விற்பனை
திருவான்மியூர் சிக்னல் அருகே, ஆர். வேணுகோபால் நிறுவிய காட்டன் ஹவுஸ் கடையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் புகழ்பெற்ற உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக பெற்று, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கமலா ஹாரீசை முந்துகிறார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபரான டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஆஸ்திரேலிய பெண் எம்பி எதிர்ப்பு கடந்த காலத்தை யாராலும் மாற்ற முடியாது
கடந்த காலத்தை யாராலும் மாற்ற முடியாது என்று காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மன்னர் சார்லஸ் பேசினார்.
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் போல்ட்டர்
டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை கேத்தி போல்ட்டர் தகுதி பெற்றார்.
இந்தியா 156 ரன்னில் சுருண்டது
நியூசிலாந்து அணி யுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அஜித் படப்பிடிப்பிலிருந்து வெளியேறினாரா திரிஷா?
'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பிலிருந்து திரிஷா வெளியேறியதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் சந்திப்பு
முதலீடு செய்வதற்கு இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை என்று பிரதமர் மோடி ஜெர்மனி தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீரில் தொடர் வன்முறை மோடி அரசு முற்றிலும் தோல்வி
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
மதுரையில் வரலாறு காணாத மழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் முதல் மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சொன்னது பலிக்குமாம்...திடீர் ஜோசியரான எடப்பாடி
சேலம் மாவட்டம், இடைப்பாடி ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், சித்தூரில் நேற்று நடந்தது.
சி.வி.சண்முகம் திடீர் கைது
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் சி.வி. சண்முகம் எம்பி நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிப்பதற்காக வந்திருந்தார்.