試す 金 - 無料
எதிர்காலத்தை ஒளிமயமாக்க விளக்குகள் அணைப்பு
Tamil Murasu
|March 25, 2025
இயற்கைச் சமநிலை சீர்குலைந்ததன் விளைவுகளை உலகம் நேரடியாக உணரத் தொடங்கியுள்ளதாக, உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF Singapore) சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதி சனிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சியில் பேசியபோது, அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த இருபது ஆண்டுகளாக, உலக வனவிலங்கு நிதியம் சிங்கப்பூர் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்துக்கு மின்விளக்குகள் அணைக்கப்படும்.
இந்த ஆண்டு, இந்நிகழ்ச்சி மார்ச் 22ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை 'செந்தோசா சென்சரிஸ்கேப்' (Sentosa Sensoryscape) பகுதியில் நடைபெற்றது.
நீடித்த நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை வெளிக்காட்டும் வகையில், மரினா பே சாண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்குகளை அணைத்தன.
このストーリーは、Tamil Murasu の March 25, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Tamil Murasu からのその他のストーリー

Tamil Murasu
ஆகஸ்ட் 4ல் குற்றத்தை ஒப்புக்கொள்ள இருக்கும் ஓங்
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்புடைய வழக்கில், ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங் (படம்) குற்றத்தை ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
July 29, 2025

Tamil Murasu
2025ல் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் சாத்தியம்: ஆய்வாளர்கள்
இந்த ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று உள்ளூர் ஆய்வாளர் குழு அதன் வருடாந்தர புகைமூட்ட நிலைமை பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
புதுப்பிக்கப்படும் எம்ஆர்டி தளமேடைத் தடுப்புக் கதவுகள்
நிலத்துக்கு அடியில் இருக்கும் 15 எம்ஆர்டி நிலையங்களின் தளமேடைத் தடுப்புக் கதவுகள் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் படிப்படியாகப் புதுப்பிக்கப்படும்.
1 min
July 29, 2025
Tamil Murasu
மின்சிகரெட் பழக்கம்: ஆலோசனை உதவியை நாடும் ஆணையம்
மின்சிகரெட் உள்ளிட்ட புகைப் பழக்கங்களைக் கைவிட உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆலோசனைச் சேவை வழங்கக்கூடியோரின் உதவியை சுகாதார மேம்பாட்டு ஆணையம் நாடுகிறது.
1 min
July 29, 2025
Tamil Murasu
நிலமீட்புப் பணி சாங்கி கடலோரப் பகுதிகளுக்கு மக்கள் செல்வதைப் பாதிக்காது: அதிகாரிகள்
சாங்கி ஏவியேஷன் பார்க் விரிவாக்கத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள நில மீட்புப் பணிகள் பிரபலமான கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைப் பாதிக்கமாட்டா என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.
1 min
July 29, 2025

Tamil Murasu
12,000 வேலைகளைக் குறைக்க டிசிஎஸ் நிறுவனம் முடிவு
இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தனது ஊழியரணியில் இரண்டு விழுக்காட்டை, அதாவது கிட்டத்தட்ட 12,000 வேலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
தஞ்சோங் காத்தோங் புதைகுழி நிரப்பப்பட்டது
தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் ஏற்பட்ட புதை குழி நிரப்பப்பட்டுவிட்டது.
1 min
July 29, 2025
Tamil Murasu
தடுப்பூசி வழக்கு: மருத்துவரின் வாக்குமூலம் செல்லுபடியாகும்
போலி கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜிப்சன் குவா 37, என்ற மருத்துவர் காவல் துறையினரிடமிருந்து எவ்வித மிரட்டலும் இல்லாமல்தான் தனது வாக்குமூலங்களைத் தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
புதிய அத்தியாயத்தின் முதல் படி
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு கொண்டாட்டம் சூழ்ந்திருக்க, ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா உருமாற்றத்தை மீண்டும் தழுவுகிறது - பொழுதுபோக்குக்கு மறுவுருவம் அளித்ததிலிருந்து புதிய அதிசயங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.
2 mins
July 29, 2025
Tamil Murasu
இயல்புநிலையில் கம்போடியா, தாய்லாந்துக்கான எஸ்ஐஏ சேவை
சிங்கப்பூர்-கம்போடியா, சிங்கப்பூர்-தாய்லாந்து சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சேவைகள் இயல்பாகச் செயல்பட்டு வருகின்றன.
1 min
July 29, 2025