CATEGORIES
Kategorier
நெற் பயிரில் குலைநோய் தாக்குதல் வேளாண் அலுவலர்கள் ஆய்வு
காவிரி ஆற்றுப் பாசனப் பகுதிகளில் அதிக அளவு நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொன்னி, வெள்ளை பொன்னி, அனுஷ்கா உள்ளிட்ட உயர் ரக நெல் ரகங்கள் அதிகளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு இல்லை வேளாண் இணை இயக்குநர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ. முகைதீன் தெரிவித்தார்.
பொங்கல் கரும்பு விற்பனை மந்தம்
நியாய விலைக்கடைகளுக்கு கரும்புகளை அரசு மொத்தமாக கொள்முதல் செய்ததால் விற்பனை மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புதுமைத் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்குகிறது
மாநில வளர்ச்சி கொள்கைக் குழு புகழாரம்
உளுந்து விலை குறைப்பால் விவசாயிகள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து விலையை பாதியாகக் குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அணைகளிலிருந்து 4,000 கன அடி உபரி நீர் திறப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் கீழ் 3ம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,000 ஏக்கர் பாசன வசதி பெறும்.
2 கோடி முட்டைகள் தேக்கம்
பறவைக்காய்ச்சல் பீதியால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 கோடி முட்டைகள் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
8ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி சட்டங்களை ரத்து செய்வதில் விவசாயிகள் உறுதி
புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என தொடர்ந்து மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருவதாலும், அதேவேளையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் பின்வாங்க முடியாது என விவசாயிகள் உறுதியாக இருந்து வருவதாலும் எட்டாம் கட்டப் பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக வலைதளங்களில் குரல் எழுப்புங்கள்
ராகுல் காந்தி வேண்டுகோள்
மழையால் நிரம்பிய சோத்துப்பாறை அணை
பலத்த மழை காரணமாக சோத்துப்பாறை அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக பூண்டி ஏரிக்கு மழை நீருடன் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது.
89 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் 89 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
நீதிமன்றமே வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும்
உச்ச நீதிமன்றம் காட்டம்
நீர்ப்பிடிப்பில் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நெற்பயிரில் கதிர் உறை அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?
தற்போது நிலவும் சூழ்நிலையானது நெற்பயிரில் அதிகளவில் நோய் தோன்றுவதற்கு மிகவும் சாதகமானதாக உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திருவாடனை, ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, நைனார்கோவில், முதுகுளத்தூர், திருப்புல்லானி, கமுதி, கடலாடி வட்டாரப் பகுதிகளில் நெற்பயிரானது சுமார் 1,25,500 ஹெக்டர் பரப்பளவில் மானாவாரியாகப் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது, நெற்பயிரில் கதிர் உறை அழுகல் நோயின் (Sheath rot) தாக்குதல் ஆங்காங்கே பரவலாக தென்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் பருத்தி விளைச்சலும், விற்பனையும் அதிகரிப்பு
திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டை ஒப்பிடும்போது பருத்தி விளைச்சல், விற்பனை அதிகரித்துள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்கள் செயல்படுத்துவதை நிறுத்துக - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பிடிவாதத்தால் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
காரீப் பருவ நெல் கொள்முதல் 533 லட்சம் டன்னாக உயர்வு
நடப்பு காரீப் சந்தைப் பருத்தில் நெல் கொள்முதல் 533 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மக்காச்சோளத்துக்கு நிவாரணக் கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை
அரியலூர் உள்ளிட்ட உள்ளிட்ட மற்ற வட்டாரங்களில் மக்காச் சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போல், செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரும்புகள் வரத்து சரிவால் விலை உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்திற்கு நிகழாண்டில் கரும்புகள் வரத்து சரிவடைந்துள்ளது. இதனால், 10 கரும்புகள் அடங்கிய கட்டு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையானது.
9 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு
உத்தரப் பிரதேசம், தில்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பறவைக்காய்ச்சல் பரவிய மாநிலங்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
மஞ்சள் அறுவடை பணி தீவிரம்
மேலூர் பகுதிகளில் மஞ்சள் அறுவடைப் பணி தீவிரமடைந்து உள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய சோழகங்கம் ஏரி
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி முழு கொள்ளளவை எட்டியது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மணிமுத்தாறு அணை நிரம்பியதால் உபரி நீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
சின்னமனூரில் செங்கரும்பு விற்பனை தீவிரம்
சின்னமனூரில் செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வருவதால், கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நெல் கொள்முதல் 27% அதிகரித்தது
நடப்பு 2020-21ம் ஆண்டு காரீப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.