CATEGORIES
Kategorier
தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது
நாட்டின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
நாளை 78 வது சுதந்திர தின விழா டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்
அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க பொது குழுக்கூட்டம் EX
தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் 12வது ஆண்டு பொது குழுக்கூட்டம், ஏற்றுமதியாளர்கள் விற்பனையாளர்கள் கூட்டம், தொழில்துறை சட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் என முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீகாமாட்சி மகால் நடந்தது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சேலம் பேர்லேன்ஸ் இந்தியன் வங்கியின் 118 வது தொடக்க விழாவை முன் னிட்டு துணை மண்டல மேலாளர் ரத்தினவேல் தலை மையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பிறந்தநாள் விழா
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கழக அமைப்பு செயலாளரும் MM ராஜன் செல்லப்பா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவருக்கு சிறப்பு பூஜை செய்து மாலை அணிவிக்கப்பட்டது.
காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பேற்பு
புதுச்சேரியில் புதிய டி.ஜி.பி.,யாக ஷாலினி சிங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது
முதல்வரின் வெளிநாடு பயண ஒப்புதல் குறித்து ஆலோசனை
இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த அயலக தமிழர் வாழ் மாணவர்களை வரவேற்ற ஆட்சியர்
தென்காசி மாவட்டம் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, வருவாய் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த அயலக தமிழர் வாழ் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி ஏ.கே. நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா ஆகியோர் முன்னிலையில் வரவேற்று தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காக \"வேர்களைத்தேடி\" என்றொரு பண்பாட்டு பயணத் திட்டத்தை அறிவித்து, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்கள்.
திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 24வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
ஊசுட்டேரி, பாகூர் ஏரியில் கவர்னர் திடீர் ஆய்வு
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், ஊசுட்டேரி மற்றும் பாகூர் ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வேலூர் வட்ட பொதுக்குழு கூட்டம் வேலூர் வள்ளலாரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ராகுல் காந்தியை மீண்டும் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை திட்டம்: விரைவில் சம்மன்
காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பண மோசடி வழக்கில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்பட புதியதாக 4 மாநகராட்சிகள் உதயம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கலசலிங்கம் பல்கலையில் புத்தாக்க பயிற்சி துவக்க விழா
கலசலிங்கம் பல்கலையில் கலை மற்றும் அறிவியல் முதலாண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தாண்டு செயல்பாட்டிற்கு வரும்: அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உறுதி
அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை திட்டம், ரேஷன் கடைகள் மூலம் இலவச வெள்ளை அரிசி இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்
கும்பகோணம் மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் கைது
பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்
3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்
வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள்: பிரதமர் மோடி
நாடு முழுவதும் வருகிற 15ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராக அலெக்சாண்டர் தேர்வு
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு இருந்த துணைத் தலைவராக இளங்கோவன், உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
விழுப்புரம் நகரத்திற்கு வெளியே நான்குபுறமும் சென்று வர அனுமதி
ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு
ஒலிம்பிக் போட்டியை பார்க்க பிரான்ஸ் சென்றார் அமைச்சர் உதயநிதி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்றிரவு 10 மணிக்கு விமானம் மூலம் பாரிஸ் சென்றார்.
பிரதமர் மோடி 10ம் தேதி வயநாடு பயணம்
வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை, வெள்ளரிமலை, புஞ் சிரிமட்டம் ஆகிய மலைக்கிராமங்களை கடந்த மாதம் 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு புரட்டிப்போட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பேருந்துகளை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் துவக்கி வைத்தனர்
விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழுப்புரம் மண்டலத்தின் மூலம் விழுப்புரம் நகராட்சி மைதானம், புதிய பேருந்து நிலையத்தில் காலை 9.30 மணி அளவில் 12 மகளிர் விடியல் பயண புதிய பேருந்துகள் மற்றும் 13 புதிய புறநகரப் பேருந்துகள் துவக்க விழாவினை பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கோவையில் நாளை தமிழ்ப்புதல்வன் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
புதிய கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல்
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதியில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன், போலீசார் சின்னசாமி மற்றும் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை, மேற்கு வங்க, வித்யாசாகர் பல்கலைக்கழகம், மனித உடலியல் உயிரியல் மருத்துவ ஆய்வகம் மற்றும் மேலாண்மை மற்றும் விலங்கியல் துறைகளுடன் இணைந்து 'அல்சைமர் நோய் சிகிச்சை மற்றும் ஆரம்பகால சிகிச்சையின் மூலம் முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் எஸ்இஆர்பி நிதியுதவியுடன் சர்வதேச மாநாடு பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்-மத்திய அமைச்சரிடம் எம்.பி. ஆர்.சுதா மனு
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ரயில் பயணிகளின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா மனு அளித்து வலியுறுத்தினார்.
வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா-அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை அமைச்சர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.