CATEGORIES
Kategorier
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பாஜக வெற்றியை கொண்டாடும் காங்கிரஸ்
பாஜகவின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்தார்.

வெள்ளம் பாதித்த 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி
கடந்த 2024-ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் ரூ.1,554.99 கோடி கூடுதல் நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் ஜெஸ் ஸிகா பெகுலா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு: இந்தியாவின் உதவியை நாடிய அமெரிக்கா
தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு விசாரணையில், இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.
ம.பி.: 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் காவல் துறையினருடன் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னர் லாரிகள்
பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெடிபொருள்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தன.
காலத்துக்கேற்ப ஐ.நா. மாற வேண்டும்: இந்தியா
உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லிக் கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
தேர்வர்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ
தேர்வர்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு
புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி பொறுப்பேற்பு
செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்: சென்னை நகர அஞ்சல் மண்டலம் சாதனை
செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஜனவரி மாதம் வரை, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கேரளத்துக்கு எதிராக குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.
கொசுவைக் கொன்றால் சன்மானம்!
பிலிப்பின்ஸின் தலைநகர்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து
நால்வர் அசத்தலில் நடப்பு சாம்பியனை வென்றது
லோக் ஆயுக்த தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம் நீதித் துறை சாரா உறுப்பினர்களும் நியமனம்
லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: பரிந்துரைகள் வரவேற்பு
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 குழந்தைகள் வெட்டிக் கொலை; மனைவி, மற்றொரு குழந்தைக்கும் வெட்டு
குடும்பத் தகராறில் தந்தை வெறிச் செயல்

தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம்
தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை
இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்
சட்டப்பேரவைத் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள்
எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் கடும் தண்ணீர் பஞ்சம்: பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வர் வேண்டுகோள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு நிதியுதவி ஏன்?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி
அரசுப் பணியாளர்கள் மீதான ஊழல் புகார்; புதிய நடைமுறை வெளியீடு
அரசுப் பணியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகார்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டது.
உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்
உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சர்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திரிவேணி சங்கம கங்கை நீர் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.
ஓஎன்ஜிசி நிகர லாபம் 17% சரிவு
பொதுத் துறை யைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 17 சதவீத நிகர லாபச் சரிவைப் பதிவு செய்துள்ளது.