CATEGORIES
Kategorier
ஐ.மு.கூட்டணி ஆட்சியில்தான் அதிக மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐமுகூ) ஆட்சியில்தான் அதிக சதவீத மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்தார்.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பை நீக்க வேண்டும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீது திமுக தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது, திமுக அமைப்புச் செயலர் தொடர்ந்த வழக்கை, மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரம்பூரில் ரூ.428 கோடியில் ரயில் முனையம்
சென்னையின் நான்காவது ரயில் முனையத்தை பெரம்பூரில் ரூ.428 கோடியில் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
புகழேந்தியின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு காண தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக அந்தக் கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி அளித்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காணுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கள்ளச்சாராய வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராமதாஸ் வரவேற்பு
கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரிக்கத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இக்னோ பல்கலை.யில் இணைய வழியில் ஜனவரி பருவ சேர்க்கை
இக்னோ பல்கலைக்கழகத்தில் 2025- ஜனவரி மாதத்துக்கான சேர்க்கை இணைய வழியில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஏஐ' தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலை
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சிறைத் தண்டனை ரத்து கோரி ஹெச்.ராஜா மேல்முறையீடு
பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் கனிமொழி எம்.பி.க்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவு செய்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ. 1.65 கோடி ஆன்லைன் மோசடி
சென்னையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.1.65 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக, கம்போடியா மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீனவ கிராமங்களுக்கு முழுமையான மின் வசதி
சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள 13 மீனவ கிராமங்களுக்கும் முழுமையாக மின் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல்
அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் பல்லவன் இல்லம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெட்ரோ ரயிலில் ஆன்லைன் பயணச்சீட்டு விநியோகம் திடீர் முடக்கம்
சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு விநியோகம் செய்யும் தொழில்நுட்பம் செவ்வாய்க்கிழமை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
டிச.21 முதல் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து டோக்கன் பெறலாம்
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிச. 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக (எம்டிசி) மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எண்ம முறையில் மட்டும் பணப் பரிவர்த்தனை
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் வெளி மாநில நோயாளிகளும், புறநோயாளிகள் பிரிவில் ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனை செய்பவர்களும் இனி எண்ம (டிஜிட்டல்) முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎஃப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது
‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ஐசிஎஃப்) தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவு பணிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பேரிடர்கள் மீது பழிபோடுவதை தவிர்த்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்
நாம் எதையும் செய்யாமல் இயற்கைப் பேரிடர் மீது பழி போடுவதில் அர்த்தம் இல்லை.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விவாதத்துக்குப் பின்னர், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சிறப்பு செஸ் அகாதெமி
தமிழகத்தில் இருந்து அதிக அளவு செஸ் வீரர்களை உருவாக்க சிறப்பு அகாதெமி உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேருவின் கடிதங்களை சோனியா காந்தி ஒப்படைக்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு எழுதிய கடிதங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
மசூதியில் ‘ஜெய் ஸ்ரீராம்' முழக்கம் எவ்வாறு குற்றமாகும்?: உச்சநீதிமன்றம்
‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வெற்றிக்கு இமாலய இலக்கு
ஹாமில்டன், டிச. 16: நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 658 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம்
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம் கொடிமரத்துக்கு நடைபெற்ற பூஜை.
குடிலைவிட்டு வெளியே வந்த திருச்செந்தூர் கோயில் யானை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது (படம்).
ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் மார்ச் மாத ஒதுக்கீடு நாளை வெளியீடு
திருப்பதி, டிச.16: ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் மார்ச் மாத ஒதுக்கீடு டிச.18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்
கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு, புதுமைப் பெண் திட்டங்களால் மாணவர்கள் மத்தியில் விளைந்த பலன்களை மாநில திட்டக்குழு ஆய்வு செய்துள்ளது.
புதிய உச்சம் தொட்ட தங்கம் இறக்குமதி
புது தில்லி, டிச. 16: கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.