CATEGORIES
Kategorier
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.
நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !
மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு
தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந் தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.
ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடர்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாரணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!
துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.
2-ஆவது டி20: மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
ராகுல், ஜடேஜா நிதானம்: 'ஃபாலோ-ஆன்' தவிர்த்தது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது.
மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் வழிபாடு
பிகார் மாநிலம் கயை மாவட்டத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழைமையான மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக செவ்வாய்க்கிழமை வழிபட்டார்.
ஹாமில்டன் டெஸ்ட் | அபார வெற்றியுடன் நியூஸிலாந்து ஆறுதல்
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.
அதிக பெண் மருத்துவர்கள்: இந்தியா வளர்ந்த சமூகமாகிறது
மருத்துவத் துறையில் அதிக அளவிலான பெண்கள் ஈடுபட்டு வருவதும் அவர்களது குறிப்பிடத்தக்க சேவையும் இந்தியா வளர்ந்த சமூகமாக உருவெடுத்து வருவதை நிரூபிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
ஆள்மாறாட்டத்தை தடுக்க ‘டிஜி-தேர்வு முறை’
போட்டித் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தை தடுக்க 'டிஜி-தேர்வு முறை' அறிமுகம், கணினி மூலம் இணையவழித் தேர்வு, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்புடன் கூடிய தேர்வு மையங்கள், கிராமப்புற பகுதிகளிலும் தேர்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தேர்வுகள் சீரமைப்புக் குழு மத்திய அரசிடம் கடந்த மாதம் சமர்ப்பித்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: தேர்தல் செயல்முறையை மேம்படுத்தும்
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு நாட்டின் தேர்தல் செயல்முறையை மேம்படுத்தும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
'வெற்றி தினம்': பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேச அரசின் சட்ட ஆலோசகர் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிரான போர் 'வெற்றி தினம்' தொடர்பாக சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுக்கு, வங்கதேச இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கண்டனம் தெரிவித்தார்.
பிப்ரவரியில் பாஜக புதிய தலைவர் தேர்வு
பாஜகவின் புதிய தேசிய தலைவர் வரும் பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்
தேர்தல் ஆணையர்களை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்யும் நடைமுறையை கைவிட்டு, தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவருமான உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.
பாலஸ்தீனத்தை தொடர்ந்து வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கோரி ‘பை’யுடன் வந்த பிரியங்கா
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கைப்பையுடன் வந்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நீதி கோரும் வாசகங்கள் அடங்கிய பைக்களுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தது தற்காலிகமானது: நிர்மலா சீதாராமன்
நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது தற்காலிக நிகழ்வு; அடுத்தடுத்த காலாண்டுகளில் மீண்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அதிகரிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கொலீஜியத்தில் ஆஜராகி விளக்கம்
விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் உச்சநீதிமன்ற கொலீஜியம் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகள் இன்று பேச்சு
கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இரு தரப்பு உறவுகளை மீட்டெடுக்கவும் நோக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் புதன்கிழமை (டிச. 18) நடைபெறும் இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பங்கேற்கிறார்.
உணவு விநியோக நிறுவனங்களால் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம்
நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் உணவு விநியோக நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்': தேவையை உருவாக்கியது காங்கிரஸ்
கடந்த காலங்களில் பல மாநில அரசுகளை கவிழ்த்த காங்கிரஸின் செயல்பாடுகளே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டுவர வேண்டிய தேவையை உருவாக்கியது என்று மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழு தலைவரான ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.
அரசமைப்புச் சட்டத்தை தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸ்
'அரசமைப்புச் சட்டத்தை தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸின் ஒரு குடும்பம், ஆட்சியில் நீடிக்க அதில் திருத்தங்களை மேற்கொண்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளுக்கு காங்கிரஸே காரணம்
\"மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளுக்கு காங்கிரஸே முக்கியக் காரணம்\" என பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.
கணினி சார்ந்த தேர்வு மையங்கள் அமைக்க மாநிலங்களின் ஆதரவு தேவை
உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளை நடத்துவதற்காக கணினி சார்ந்த தேர்வு மையங்களை அமைக்க மாநில அரசுகள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.