CATEGORIES
Kategorier

ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் ரூ. 5,000 கோடி கட்டுமானப் பணிகள் பாதிப்பு
வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரசு ஒப்பந்ததாரர்கள் முடிவு
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்தது
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
முதலீட்டுக்கு இருமடங்கு தருவதாக மோசடி: தனியார் நிறுவனத்துக்கு சீல்; 14 பேர் கைது
சேலத்தில் முதலீட்டுக்கு இருமடங்கு தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன நிர்வாகிகள் 4 பேர், முகவர்கள் உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.

திருவேற்காட்டில் ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால் பணி
திருவேற்காட்டில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணியை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

நாட்டின் மத நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதல்
'அடிமை மனப்பான்மை கொண்டவர்கள், அந்நிய சக்திகளின் ஆதரவுடன் நாட்டின் மத நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதல் நடத்துகின்றனர்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடுகடத்தப்பட்ட 12 இந்தியர்கள் தில்லி வருகை
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடுகடத்தப்பட்ட 12 இந்தியர்கள், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தடைந்தனர்.

தமிழகம்-காசி இடையே தனித்துவ பிணைப்பு!
தமிழகம்-காசி இடையிலான பிணைப்பு தனித்துவமானது என்று காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தெலங்கானா சுரங்க விபத்து: தண்ணீர், சேறு, இடிபாடுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேறு, தண்ணீர், இடிபாடுகள் காரணமாக அவர்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.

டிரம்ப், மோடி பேசினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதா?
இடதுசாரிகளுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி கண்டனம்

மண் சாலையாக மாறிய ராயபுரம் நெடுஞ்சாலை
ராயபுரம் எண்ணூர் விரைவுச் சாலையில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மீண்டும் மூடப்பட்டு முறையாக சாலை அமைக்காததால் அந்தச் சாலை மண் சாலையாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உக்ரைனில் அமைதி நிலவ பதவி விலகவும் தயார்: அதிபர் ஸெலென்ஸ்கி
உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் அதிபர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று அந்நாட்டு அதிபர் வொலொதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்
மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், ரஷியாவின் இளம் வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா சாம்பியன் கோப்பை வென்றார்.

அதிமுகவில் நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என அந்தக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத்தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ்: கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு; 7 காவலர்கள் படுகாயம்
கிழக்கு பிரான்ஸில் உள்ள சந்தையில் அல்ஜீரியாவைச் சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 7 காவலர்கள் காயமடைந்தனர்.

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

டிரம்ப் ஆதிக்கத்தால் அதிரும் உலகம்!
டிரம்ப்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். சட்ட விரோத குடியேறிகள் வெளியேற்றம் என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் வேதனையளிக்கும் விஷயம்,
பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி
பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல்வர் மருந்தகம் திட்டம் இன்று தொடக்கம்; 36 மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது
மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் 'முதல்வர் மருந்தகம்' திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது.
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே முதல் முறையாக நேரடி வர்த்தகம்
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே நேரடி வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தானின் குவாஷிம் துறைமுகத்தில் இருந்து அரசு ஒப்புதலுடன் 25,000 டன் அரிசி வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மோகன் பகான் சாதனை சாம்பியன்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் 1-0 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
நாட்டுப்பற்றை தமிழர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டாம்: சீமான்
நாட்டுப்பற்றை தமிழர்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிங்கார சென்னை அட்டை இருப்புத்தொகை விரைவில் கைப்பேசியில் அறியலாம்
மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்

மகா கும்பமேளாவில் புனித நீராடிய காஞ்சி சங்கராசாரியர்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினார்.

இலங்கை வசமுள்ள மீனவர்களை விடுவிக்க வலுவான தூதரக முயற்சி அவசியம்
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
ஒகேனக்கல் அருவிக்கு வாரவிடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் வந்தனர்.
கண்டிப்பது குற்றமல்ல!
பணி இடங்களில் ஓர் ஊழியரை அலுவலகப் பணிகளுக்காக முதுநிலை ஊழியர்கள் கண்டிப்பதை, வேண்டும் என்றே செய்யப்படும் அவமானமாகக் கருதி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

கடவுப் பாதையில் சிக்கிய டிராக்டர் மீது ரயில் மோதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சம்பவம்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்?
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என்று வன்னியர் சங்க மாநாட்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

சீகன்பால்கு நினைவு தினம்: தரங்கம்பாடியில் அனுசரிப்பு
தரங்கம்பாடியில் சீகன்பால்குவின் 306-ஆவது நினைவு தினம் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.