CATEGORIES
Kategorier

நகைக் கடன் பெற கட்டுப்பாடு; வைகோ கண்டனம்
வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம்; ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை
சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருமுறை சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு: வரைவு விதிகளுக்கு ஒப்புதல்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை
உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம்
சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொழில்முனைவோருக்கான இ-உச்சி மாநாடு பிப். 28-இல் தொடக்கம்
ஐஐடி இயக்குநர் வி.காமகோடி
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ. 64,600
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
சென்னை யிலுள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
மாயமான 2 இளைஞர்கள் கொன்று புதைப்பு: லாரி ஓட்டுநர் உள்பட இருவர் கைது
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே காணாமல் போன இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் லாரி ஓட்டுநர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீஆட்சீஸ்வரர் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா
அச்சிறுபாக்கம்ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் வைக்கோல் வைத்து பூஜை
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கோல் வைத்து செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சீர்காழி அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது
சீர்காழி அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, செங்கல்லால் கடுமையாகத் தாக்கிய 17 வயது சிறுவனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழிப்பறி வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
சென்னை, அரும்பாக்கத்தில் வழிப்பறி வழக்கில் சுமார் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததன்பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர்.
நாளை இ.பி.எஃப். குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சார்பில், குறைதீர் முகாம் வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுகிறது.

2020, நவம்பருக்குப் பின் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்க உத்தரவு
தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை அமர்நாத் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ரூ.20 லட்சம் வழிப்பறி: மேலும் ஒரு வணிக வரித் துறை அதிகாரி கைது
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பொதுத் தேர்வு அடுத்த வாரம் தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தேர்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது.

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய நபர் மீண்டும் கைது
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி: தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது
சென்னையில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.20 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ரயில் நிலைய பெயர்ப் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாதம் சிறை
ஹிந்தியில் எழுதப்பட்ட ஊர்ப் பெயரை அழிக்கிறோம் என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்ததுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாள்: பிரதமர் மோடி புகழாரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி (பிப். 24) அவரை நினைவுகூர்ந்து, 'கருணை உள்ளம் கொண்ட தலைவர்; தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்' என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப உத்தரவு
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.