CATEGORIES
Kategorier
மறுமலர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ. 23: அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கியவர் கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசுப் பேருந்துகளில் தினமும் 57 லட்சம் மகளிர் கட்டணமின்றி பயணம்: தமிழக அரசு
சென்னை, நவ. 23: மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாள்தோறும் 57 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி செயல்பாடுகள்: நவ.28, 29-இல் ஆய்வுக் கூட்டம்
சென்னை, நவ. 23: பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நவ.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கட்டமைப்பைப் பார்வையிட்ட உத்தரகண்ட் அமைச்சர்
சென்னை, நவ. 23: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தன்சிங் ராவத் பார்வையிட்டார்.
230 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உபகரணங்கள்
மணலி சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 66 லட்சம் மதிப்பில் 230 மாற்றுத்திறனாளிகளுக்கான 409 சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்
தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை
4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசம்: வயநாட்டில் ராகுலை விஞ்சினார் பிரியங்கா
வயநாடு, நவ. 23: கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, 4.10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி அபாரம்
பாஜக பின்னடைவு
மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அமோகம்
மும்பை, நவ. 23: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' உணர்வு அவசியம்
திரௌபதி முர்மு வலியுறுத்தல்
சாத்விக்சாய்ராஜ்/சிராக் இணை காலிறுதியில் வெற்றி
ஷென்ஸென், நவ. 22: சீனாவில் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: இந்தியாவை வென்றது கத்தார்
சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில், கத்தார் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
பும்ரா எழுச்சி; ஆஸ்திரேலியா அதிர்ச்சி
பெர்த் டெஸ்டில் பேட்டர்கள் தடுமாற்றம்; பௌலர்கள் ஆதிக்கம்
ரெப்கோ வங்கியில் அமைச்சர் ஆய்வு
இந்திய அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியில் மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு
புதாபெஸ்ட், நவ. 22: போர் குற்றச் சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா: அட்டர்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ
வாஷிங்டன், நவ. 22: தனது புதிய அரசின் அட்டர்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டர்னி ஜெனரலாகப் பணி யாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை
மாஸ்கோ, நவ. 22: தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை: தவறான கருத்துகளைப் பரப்புகிறது காங்கிரஸ்
புது தில்லி, நவ. 22: மணிப்பூர் வன்முறை குறித்து தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளை காங்கிரஸ் பரப்புவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
வெளிப்படையான விசாரணைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பொது மக்களை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
மும்பை ரயிலில் இருக்கைக்காக மோதல்: இளைஞரை குத்திக் கொன்ற சிறுவன்
மும்பை,நவ.22:மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில், இருக்கைக்காக ஏற்பட்ட மோதலில் 16 வயது சிறுவன் கத்தியால் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், 5-ஆவது துணை குற்றப் பத்திரிகையை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
நிஜ்ஜார் கொலையில் பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சதியில் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக வெளியான ஊடக செய்தியை கனடா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு
இம்பால், நவ.22: மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
மணிப்பூர் வன்முறையில் 258 பேர் உயிரிழப்பு
இம்பால், நவ. 22: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 258 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்த மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கேஜரிவாலைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி
புது தில்லி, நவ. 22: தில்லி முதல்வர் அதிஷி தனது முன்னோடியான அரவிந்த் கேஜரிவாலைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வெள்ளிக்கிழமை கூறினார்.
சமாஜவாதி வெற்றிக்கு எதிராக மேனகா காந்தி மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
புது தில்லி, நவ. 22: மக்களவைத் தேர்தல் தன்னை எதிர்த்து சமாஜவாதி வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
'ரீல்ஸ்' மோகம்: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு
கொல்கத்தா, நவ.22: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கைத்துப்பாக்கியைக் கொண்டு ரீல்ஸ் விடியோ எடுக்க முயன்ற போது எதிர்பாரா விதமாக அதிலிருந்து தலையில் குண்டு பாய்ந்ததில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாசகங்களுடன் ரூ.30 கோடி ரொக்கம் மாற்றம்
பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு
அப்துல் கலாமின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.கான் மறைவு: பிரதமர் இரங்கல்
புது தில்லி, நவ.22: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் செய்தித்தொடர்பு செயலாளரும் ஓய்வுபெற்ற இந்திய தகவல் சேவைகள் (ஐஐஎஸ்) துறை அதிகாரியுமான எஸ்.எம். கான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வு கோரி மனு
புது தில்லி, நவ.22: ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட பகுதியில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வுக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு மசூதி நிர்வாக குழுவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.