CATEGORIES
Kategorier
நீதிமன்றுக்கு வருகிறது சுஜீவவின் வாகனம்
முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனத்தைக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
10ஆம் இலக்கத்தால் பதுளையில் பதற்றம்
பதுளையில் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோவின் தேர்தல் பிரசாரத்தினை பொலிஸார் தடுக்க முயன்றதைத் தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டது.
“உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்"
மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன்.
"பழைய அரசியலை கைவிட்டு புதிய அரசியலுக்கு வருவோம்”
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது.
“பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியத்தை இழக்க முடியாது”
கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாகப் பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது எனவே அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
லொஹான் பிணை மனுத் தாக்கல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரசாரக் கூட்டத்தில் அழுத ரோஹித்
களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உரையாற்றிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
“கோட்டா, ரணிலின் வழியில் அனுரவும் பயணிக்கிறார்”
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பாதையிலேயே இந்நாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பயணிக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தள்ளார்.
மௌன காலம் ஆரம்பமானது
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பிரசாரத்திற்கான மௌன காலம் திங்கட்கிழமை (11) நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
வியாழன், வெள்ளி பூட்டு
பொதுத்தேர்தல் வாக்களிப்பு தினமான வியாழக்கிழமையும் (14) போயா தினமான மறுநாள் வெள்ளிக்கிழமை (15) சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழர்களிடம் இனப்பெருக்கம் இல்லை”
தமிழர்களிடம் இனப்பெருக்கம் இல்லை, கல்வியும் இல்லை, பொருளாதாரம் இல்லை, சமூக கட்டமைப்பும் இல்லை.
2 நாட்களில் 40 பேர் பலி
6 கடந்த 2 நாட்களில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக, லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஸ்தூரி தலைமறைவு?
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவு ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புல் ஏற்றிச் சென்ற ட்ரகின் பின் ட்ரெய்லர் கவிழ்ந்தது
கொழும்பு துறைமுகத்திலிருந்து அம்பேவெல கால்நடை பண்ணைக்கு புல் ஏற்றிச் சென்ற கொள்கலன் ட்ரக் வண்டியின் பின் ட்ரெய்லர் வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் நுவரெலியாகம்பளை பிரதான வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
முதல் முறையாக சந்திப்பு
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி, வாஷிங்டனில் பதவியேற்கவுள்ளார்.
விபத்தில் 38 பேர் காயம்
குஜராத்தில் சொகுசு பஸ் உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூசிலாந்தை வென்றது இலங்கை
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.
சக்கர கதிரையில் வந்தவரிடம் 'குஷ்'
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சக்கர கதிரையில் பயணித்த \"கிரீன் சேனல்\" ஊடாக வெளியேற முற்பட்ட வயோதிப பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (09) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் புகுந்த பஸ்
பதுளை -மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று பலகொல்லை பத்தலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதிலை கவிழ்த்து விபத்துக்குள்ளான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
வெள்ளத்தில் தத்தளித்தது
நாட்டில் அவ்வப்போது அடைமழை பெய்யும்போது வெள்ளப் பெருக்குகளும் மண்சரிவுகளும் ஆங்காங்கு ஏற்படுவதுண்டு அந்தவகையில் மத்திய மாகாணத்தின் அக்குறனை நகரம் வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
“14க்குப் பின்னரே எமது போராட்டம்”
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் சனிக்கிழமை (09) உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் தமது போராட்டம் ஆரம்பமாகும் என்றார்.
“திரிபோஷüவை மூடுவதற்கு சதி"
தாம் பாட்டாளி சாதாரண மக்கள் வர்க்கத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாகும், சாதாரண மக்களின் துன்பங்களை அறிவதாகும் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வாரத்திற்கு முன்னரே திரிபோஷ தொழிற்சாலையை கலைத்து மூடும் சதியில் ஈடுபட்டுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார், இது குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு எதிரான சதியாகும்.
பாதுகாப்பு பணியில் 90,000 பேர்
இம்முறை பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக 90,000 பாதுகாப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
“சிலிண்டர்களை அனுப்பாவிடின்; முட்டைகளின் விலை கூடும்”
எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக யானை சின்னத்திலும் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பவிட்டால் முட்டையின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமென ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொட்டக்கலை சி.எல்.எப்பில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு
நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
“உடன் நடவடிக்கை எடுக்கவும்”
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸாரால் இளந்தாயொருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கணவனும், சனிக்கிழமை (09) இரவு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் கவலையடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“அரசியல் கைதிகளை விடுவிப்போம்”
வவுனியாவில் ஜனாதிபதி அனுரகுமார வாக்குறுதி
துப்பாக்கி சூட்டில் தம்பதி பலி
காலி வீதி, அம்பலாங்கொடை - உரவத்த பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுன்னாகம் பொலிஸார் அட்டகாசம்
சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் சாரதி அனுமதி பத்திரம், வாகன ஆவணங்களை கேட்டிருந்தனர்.
காஷ்மீரில் 5,000 பேருக்கு டெங்கு
காஷ்மீரில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.