CATEGORIES
Kategorier
நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு? எடப்பாடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
பதவி சுகத்துக்காக கரப்பான்பூச்சி போல ஊர்ந்து செல்லும் உங்கள் பெயரையா வைப்பது எனவும் காட்டமாக கேள்வி
லஞ்ச பணத்துடன் சொந்த ஊருக்கு சென்றபோது ஊட்டி நகராட்சி ஆணையர் காரில் ₹11.70 லட்சம் பறிமுதல்
13 மணி நேரம் விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு
பிரபல நடிகைகளுக்கு தினமும் போதை பொருள் விற்பனை
சென்னை,நவ.11: பப்புகள் மூலம் அறிமுகமான ஆண் நண்பர் உதவியுடன் போதை பொருட்களை பெற்று பிரபல நடிகைகளுக்கு வாட்ஸ் அப் உதவியுடன் விற்பனை செய்து வந்த தாக கைதான துணை நடிகை மீனா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மூத்த திரைக்கலைஞர் \"டெல்லி\" கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் பாதிப்பு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை : ஒன்றிய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
ஜனவரி முதல் சுற்றுப்பயணம் அதிமுக கூட்டணியில்தான் இன்று வரை இருக்கிறோம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி
தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
வேளாண் கல்லூரி மாணவர்களை தவிர்த்து வேறு அமைப்பு மூலம் டிஜிட்டல் பயிர் சர்வே - அன்புமணி வேண்டுகோள்
சென்னை, நவ.11: டிஜிட்டல் பயிர் சர்வேயை வேறு அமைப்புகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேட்டூர் உள்ளிட்ட 4 அணைகளை மேம்படுத்த அறிக்கை தயாரித்து பணிகளை விரைவில் தொடர திட்டம்
சென்னை,நவ.11: மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகளை மேம்படுத்துவதற்காக அறிக்கை தயாரித்து விரைவில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் பல்வேறு சங்கத்தினர் நன்றி
சென்னை, நவ.11: தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர், காவிரி - வைகை கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பள்ளிக்கு வராமல் வேறுநபர்களை அமர்த்தி முறைகேடு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை, நவ.11: பள்ளிக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி முறைகேடு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக். மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் 6 மாதமாக மாற்றம்
சென்னை, நவ.11:சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்து வரும் மாணவர்கள் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு கோடைகால பயிற்சிக்கு (சம்மர் இன்டர்ன்ஷிப்) செல்கிறார்கள்.
சுரங்கம் தோண்டும் பணியில் வாயு கசிவு? மயிலாப்பூர் கச்சேரி சாலையில் கொய்வின்றி பணி - மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல்
சென்னை, நவ.11: கச்சேரி சாலையில் சுரங்கம் தோண்டும் பணியில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் இருப்பினும் சுரங்கம் தோண்டும் பணிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 9 விமானங்கள் திடீர் ரத்து - பயணிகள் கடும் அவதி
மீனம்பாக்கம், நவ. 11: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
5 லட்சம் பேர் பங்கேற்பு வயது வந்தோர் கல்வி அடிப்படை எழுத்து தேர்வு
சென்னை, நவ.11:வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு தமிழகத்தில் அடிப்படை எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.
போலீசாரின் கைதுக்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு நடிகை கஸ்தூரி தப்பி ஓட்டம்
தலைமறைவானவரை பிடிக்க தனிப்படை அமைப்பு
2 நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் 15ம் தேதி வரை கனமழை
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துவரும் நிலையில் 2 நாட்களில் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பட்டாசு ஆலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பட் டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயி ரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்று விரு துநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் தார்.
வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரி தற்போது மழைநீர் தேங்காத இடமாக மாறியது எப்படி?
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. அன்றைய நாளிலேயே பெரிய அளவில் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றெல்லாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மழை வந்தது.
மணலி நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து
மணலி நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் காயம் அடைந்தார். திண்டிவனத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (43).
வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரி மழைநீர் தேங்காத இடமாக தற்போது மாறியது எப்படி?
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது.
111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகரின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் குறித்த பொய்களில் இருந்து பாக். விலக வேண்டும்
ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கூறும் பொய்கள் உண்மைகளை மாற்றாது என்றும் பொய்களில் இருந்து பாகிஸ்தான் விலக வேண்டும் என்றும் ஐநாவில் இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
இமாச்சலில் சூடுபிடிக்கும் 'சமோசா' சமாசாரம்
முதல்வருக்கு ஆன்லைனில் பா.ஜ ஆர்டர்
ஆந்திராவில் சோதனை ஓட்டம் நீர் வழித்தட விமானத்தில் சந்திரபாபு நாயுடு பயணம்
2025 மார்ச் பயன்பாட்டிற்கு வருகிறது
வரும் 20ம் தேதி முதல் 28 வரை கோவாவில் 55-வது சர்வதேச திரைப்பட விழா
ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 55-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
பேக் டு பேக் சென்சுரி அடித்து சஞ்சு சாம்சன் அமர்க்களம்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
ஒன்-நைட் ஸ்டாண்ட் முறையை ஒப்புக் கொண்ட நடிகர், நடிகைகள்
சல்மான் கான் முதல் சன்னி லியோன் வரை ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ குறித்து ஒப்புக் கொண்ட பிரபலங்கள் குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது
சங்ககிரி அருகே டூவீலர் மீது மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் உயிரிழந்தார்.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மலையேற்ற திட்டத்தை கைவிட கோரி வழக்கு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற பயண திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 2.153 போலீசாருக்கு பணியிட மாறுதல்
தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.