CATEGORIES
Kategorier
மின்சார ரயிலில் சூட்கேஸில் எடுத்து வந்த சடலம் மீட்பு நெல்லூர் பெண் 7 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது அம்பலம்
துண்டு துண்டாக அறுத்து சூட்கேஸில் அடைப்பு. தமிழ்நாட்டில் வீசிவிட்டு தப்பிச்செல்ல முயற்சி. தந்தை, மகளை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை
வளி மண்டல சுழற்சி தமிழ்நாட்டில் 9ம் தேதி வரை மழை பெய்யும்
தமிழகத்தில் 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செயலி மூலம் போதைப்பொருட்கள் விற்பனை பிரபல தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடியாக கைது
தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடையே செயலி மூலம் (APP) போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா, 94 எல்எஸ்டி ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தங்கம் விலையில் தொடர் மாற்றம் 5 நாளில் சவரன் ₹800 குறைந்தது
தங்கம் விலை கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. அதே நேரத்தில் தினம், தினம் புதிய உச்சத்தையும் கண்டு வந்தது.
ஆசிரியர் பயிற்சித் தேர்வு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு
ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் நகல்கள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
பொது நலன் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து எல்லா சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது
புதுடெல்லி: ‘பொது நலனுக்காக எனக் கூறி அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தி விட முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு அமெரிக்காவின் புதிய அதிபர் யார்?
கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் இழுபறி
திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை நேரில் கண்டறிய கள ஆய்வை தொடங்கினார் முதல்வர்
கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு. ரூ158 கோடியில் தொழில்நுட்ப பூங்காவையும் திறந்து வைத்தார்
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவால் மாணவர்கள் மயக்கம்
திருவொற்றியூர், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் நேற்று விஷவாயு கசிந்ததால் சில மாணவிகள் மயக்கம் அடைத்தனர்.
புழல் கதிர்வேடு பகுதியில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு
புழல் கதிர்வேடு பகுதியில் மாநகராட்சி சார்பில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு திறந்து வைத்தார்.
பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் திட்ட பணிகள்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குண்டும், குழியுமான பென்னலூர் சாலை
பென்னலூர் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருப்போரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதியின்றி அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பிய மக்கள் பேருந்து வசதியின்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாறுபட்ட ரத்தப்பிரிவு இருந்தபோதிலும் நோயாளிக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை
36 வயதான நோயாளிக்கு மாறுபட்ட ரத்தப்பிரிவு, அதிகரித்த எதிர்புரத அளவுகள் இருந்தபோதிலும் சிறுநீரக மாற்று சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட 406.55 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அழிப்பு
தீபாவளி கொண்டாட்டித்தின்போது சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டி அழிக்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
கொளத்தூரில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொருட்களை வழங்கியதுடன், மேலும் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
தீபாவளி முடிந்து சென்னை திரும்பியவர்களால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்களால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பீக் ஹவர்சில் கூட்ட நெரிசலை தவிர்க்க மகளிர் இலவச பயணத்திற்காக கூடுதலாக 700 டீலக்ஸ் பஸ்கள்
மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம் உள்துறை அமைச்சர் அமைதியாக இருந்தால் அவரது பதவியை நானே ஏற்பேன்
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் நடக்கிறது. உள்துறை அமைச்சர் அனிதா அமைதியாக இருந்தால், அவரது பதவியை நானே ஏற்பேன் துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி
ஜார்க்கண்ட்,மகாராஷ்டிரா சட்டபேரவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் பாஜவும்,உள்ளூர் நிர்வாகமும் கடைசி நிமிட தில்லுமுல்லுகளை செய்வதை தடுக்க விழிப்புடன் இருக்கிறோம் என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். ஜார்க்கண்ட்,மகாராஷ்டிரா சட்ட பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
அரசு இணைய தளத்தில் ஊட்டி விடுதிகள், ரிசார்ட்கள் விவரம் வெளியிட வேண்டும்
ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து மகாராஷ்டிரா போலீஸ் டிஜிபி இடமாற்றம்
மும்பை போலீஸ் கமிஷனராக பதவி வகித்த ராஷ்மி சுக்லா புனே நகர போலீஸ் கமிஷனராக இருந்த போதும், பின்னர் மாநிலத்தின் புலனாய்வுத் துறையின் கமிஷனராக இருந்த போதும் அரசியல் தலைவர்களின் போன் பேச்சுக்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
பழங்குடிகள் வாக்கு வங்கிக்கு தரும் காங்.இடஒதுக்கீட்டை
ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரசாரம்
அன்னியனாக, அம்பியாக திடீரென மாறுவார் சீமான்
சீமான் திடீரென அன்னியனாகவும், அம்பியாகவும் மாறுவார் என பிரேமலதா கூறியுள்ளார்.
கோவை பிஆர்எஸ் வளாகத்தில் முகாம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முதல்நாளில் 625 பேர் பங்கேற்பு
இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி (பிஆர்எஸ்) வளாகத்தில் நேற்று துவங்கியது.
பாலியல் தொல்லை என பொய் புகார் தண்டனை பெற்றவருக்கு 750 ஆயிரம் இழப்பீடு
பொய் புகாரில் 5 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், புகார் அளித்த சிறுமியின் தாய் மீது போக்சோ வழக்கு பதியவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் ராஜமோகன்.
நூல் விலை கிலோவிற்கு குறைந்தது 10 ரூபாய்
பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.