நாப்கின்கள் என்னதான் பெரிய பிராண்டுகளின் தயாரிப்பாக இருந்தாலும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்களும், சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களும் அதில் நிறைந்துள்ளன. காரணம், நாப்கின்கள் ஈரத்தை உறிஞ்சுவதற்காக, ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது. எனவே முடிந்த வரை ரசாயனமற்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்துவதே நல்லது.
நாப்கின் பராமரிக்கும் முறை
பொதுவாக, மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை பயன்படுத்தும் போது, 2 முதல் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின்களை மாற்றிவிடுவது நல்லது. இதன் மூலம் நாப்கின்களால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து சிறிதளவேனும் பாதுகாத்துக் கொள்ளலாம். அதிலும் உதிரப்போக்கு அதிகமாக இருப்பவர்கள் இதைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நாப்கின்களை மாற்றும் போது கைகளைக் கழுவுதல் அவசியம். இது நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
மாதவிடாயின் போது அதிகமான உதிரப்போக்கை உணரும் பெண்கள், அடிக்கடி நாப்கினை மாற்றுவதையும், ஆடைகளில் கறை படிவதையும் தவிர்ப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். இது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.
மாதவிடாய் நாட்களில் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யலாம். இதற்காக வேறு திரவத்தை பயன்படுத்தக்கூடாது. மாதவிடாய் நாட்களில் இரண்டு முறை குளிப்பது, உடலை சுத்தமாக வைத்திருப்பதோடு, சுறுசுறுப்பையும் தரும்.
நாப்கின் பயன்படுத்துவது போலவே, அதை அகற்றுவதிலும் கவனம் தேவை. பயன்படுத்திய நாப்கின்களை முறையாக காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் போடவேண்டும். குப்பைத் தொட்டியில் இருக்கும் நாப்கின்களையும் அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
Denne historien er fra April 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra April 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!
ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை.
நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.
மண்ணீரல் குறைபாடு...உஷார்!
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும்.
எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!
சமீபகாலமாக நான்கில் ஒரு ஆணும், சா இரண்டில் ஒரு பெண்ணும் எலும்பு வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) பிரச்னையில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?
இன்றைய சூழலில், பலரும் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!
காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா”. என்று பல காரும் இன்றைக்கு \"மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.
ரேபீஸ் தவிர்ப்போம்!
சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்
ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்
இந்திய திரையுலகில் மிகவும் பிர பலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர்.
சத்தான சாத வகைகள்!
பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக் காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!
அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.