இந்த நிலையில் கல்லீரலை முறையாக பராமரிக்காவிட்டால், அது பாதிப்படைந்து ஒருகட்டத்தில் கெட்டுப்போய்விடுகிறது. இந்நிலையில்தான் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அந்தவகையில், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை குறித்தும், கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை சிறப்பு மருத்துவர் மெட்டு ஸ்ரீனிவாச ரெட்டி.
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை என்றால் என்ன… எந்த சூழலில் மாற்று தேவைப்படுகிறது..
பொதுவாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உலகளவில் 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாகத்தான் செய்யப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் உள்ள தேர்ந்த சிகிச்சை முறையால், தற்போது, இந்தியா கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே 3 -ஆவது இடத்தில் உள்ளது. முன்பெல்லாம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தால், நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அந்த நிலைமாறி, வெளிநாட்டவர்கள் இந்தியா வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்தளவிற்கு நாம் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் முன்னேறியிருக்கிறோம்.
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானதாகும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குதல், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், மது அருந்துதல், ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி போன்ற வைரஸ் தொற்றுகளாலும் கல்லீரல் பாதிப்படைகிறது. கடந்த பத்து ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மது அருந்துவதனால் ஏற்படும் கல்லீரலில் பாதிப்பே அதிகமாக உள்ளது.
Denne historien er fra July 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!
ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை.
நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.
மண்ணீரல் குறைபாடு...உஷார்!
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும்.
எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!
சமீபகாலமாக நான்கில் ஒரு ஆணும், சா இரண்டில் ஒரு பெண்ணும் எலும்பு வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) பிரச்னையில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?
இன்றைய சூழலில், பலரும் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!
காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா”. என்று பல காரும் இன்றைக்கு \"மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.
ரேபீஸ் தவிர்ப்போம்!
சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்
ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்
இந்திய திரையுலகில் மிகவும் பிர பலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர்.
சத்தான சாத வகைகள்!
பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக் காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!
அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.