CATEGORIES
Kategorier
தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது ஊழலுக்கு வழிவகுக்கும்
தீபாவளி பண்டிகைக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு இயக்குவது தனியார்மயத்துக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பெரம்பலூர் அருகே வேனை வழிமறித்து மேலாளரைக் குத்தி ரூ. 10 லட்சம் கொள்ளை
பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை அதிகாலை வேனை வழிமறித்து, அதிலிருந்த தனியார் நிறுவன மேலாளரைக் கத்தியால் குத்தி ரூ. 10 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
இலங்கையிலிருந்து சட்டவிரோத பயணம்: இளைஞர் உள்பட 2 பேர் கைது
இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் வந்து சட்டவிரோதமாக வேதாரண்யத்தில் தங்கியிருந்த இளைஞர் உள்ளிட்ட இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான ஆர்.வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை செய்தனர்.
லூப் சாலையில் கடை அமைக்க அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் மீன் வியாபாரிகள் மனு
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீன் வியாபாரிகள், வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
குப்பை கொட்டுவோரை கண்காணிக்க 'ஏ.ஐ. கேமரா'
சென்னை மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டுவோரை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமரா விரைவில் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
கடலில் எண்ணெய்க் கழிவு: ரூ.74 கோடி இழப்பீடு வழங்க சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
எண்ணூரில் எண்ணெய்க் கழிவு கடலில் பரவியதற்கு காரணமான சிபிசிஎல் நிறுவனம் ரூ.74 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
குரோம்பேட்டையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஆய்வு
குரோம்பேட்டையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சமூகத்துக்கு சேவையாற்ற இளம் மருத்துவர்கள் முன்வர வேண்டும்
குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று மருத்துவர்களாக உருவெடுப்பவர்கள், இந்த சமூகத்துக்கு பிரதிபலனாக சேவையாற்ற வேண்டும் என்று சண்டிகர் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் விவேக் லால் வலியுறுத்தினார்.
விமானங்களில் நூதன முறையில் தங்கம் கடத்தும் ரகசிய திட்டம் அம்பலம்
வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வரும் கடத்தல்காரர்களின் ரகசிய திட்டம் அம்பலமாகியுள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை
தீபாவளி பண் டிகையை முன்னிட்டு, கட்டண உயர்வு இல்லாமல் ஆம்னி பேருந் துகள் இயக்கப்படும் என உரிமை யாளர்கள் உறுதியளித்துள்ளதா கவும், மீறி கட்டணத்தை உயர்த் தும் ஆம்னி பேருந்துகளின் உரி மையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவ ரத்துத் துறை அமைச்சர் சா.சி.சி வசங்கர் உறுதிபட தெரிவித்தார்.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் நறுவீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வீடு திரும்பினார்.
விழுப்புரம் சங்கர மடத்துக்கு வந்த காஞ்சி மகா பெரியவர் கற்சிலை
சென்னை மயிலாப்பூரில் அமைக்கப்பட்டு வரும் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள மகா பெரியவரின் கற்சிலைக்கு விழுப்புரம் சங்கர மடத்தில் வியாழக்கிழமை பூஜைகள் நடத்தப்பட்டன.
தலைமைச் செயலக கட்டடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறியதால் பரபரப்பு
சென்னை தலைமைச் செயலக கட்டடத்தில் வியாழக்கிழமை டைல்ஸ்கள் திடீரென வெடித்ததால் தரையில் விரிசல் ஏற்பட்டு பெரும் சப்தம் எழுந்தது.
விமானங்களுக்கு மிரட்டல்: பின்னணியில் யார்?
விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தவா்களை கண்டறியும் நோக்கில், இதுகுறித்த தகவல்களைப் பகிருமாறு மெட்டா, எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர்: மீண்டும் பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் இரு ராணுவ போர்ட்டர்கள், 2 வீரர்கள் உயிரி ழந்தனர். 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
மலையேற்றத்துக்கு இணையதள முன்பதிவு திட்டம்
மலையேற்றம் செய்வதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்துக்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார்.
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை
மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கண்மாய்கள், வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம்: 2-ஆவது முறையாக 100 அடியை எட்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்ந்தது.
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 10% குறைந்த முதலீட்டு வரவு
கடந்த செப்டம்பரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு 10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
எஸ்பிஐ லைஃப் வருவாய் ரூ.40,015 கோடியாக உயர்வு
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கீழ் இயங்கிவரும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸின் வருவாய் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.40,015 கோடியாக அதிகரித்துள்ளது.
லாபப் பதிவால் 3-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தது.
டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 42% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 41.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரஷியாவில் வட கொரிய வீரர்கள்; உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
வட கொரிய சிறப்புப் படை வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிபர் தேர்தலில் தலையீடு பிரிட்டன் ஆளுங்கட்சி மீது டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலையிடுவதாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
என்எல்சி நிறுவன சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு தேசிய அளவிலான 5 மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அண்மையில் வழங்கினார்.
முதல்வர் கோப்பை மாநில போட்டிகள் வாலிபாலில் செங்கல்பட்டுக்கு இரட்டை தங்கம்
தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகளில் கல்லூரி மாணவ, மாணவியர் வாலிபாலில் செங்கல்பட்டு இரட்டை தங்கம் வென்றது. சென்னை மாவட்டத்தின் தங்கப் பதக்க எண்ணிக்கை நூறைக் கடந்தது.
மிர்பூர் டெஸ்ட்: வங்கதேசம் 81 ரன்கள் முன்னிலை
மிர்பூர் டெஸ்டில் வங்கதேச அணி 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வெற்றி பெற இந்தியா-நியூஸிலாந்து தீவிரம்
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் வியாழக்கிழமை தொடங்குகிறது.