CATEGORIES
Kategorier
சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி இன்று பலப்பரீட்சை
முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு
பிகாரின் முஸாபர்பூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞர் உயிரிழந்தார்.
பன்னூன் கொலை முயற்சி சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும்
சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல முயற்சித்த சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பு ஏற்கப்படாத வரை, தமக்கு முழு திருப்தி ஏற்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தொழிலக எரிசாராயத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம்
தொழிலக எரிசாராய உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
‘டானா’ புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்
ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது
'எந்த பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீர்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது' என்று 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 7,000 வீடுகள்
மணிப்பூரில் இனக் கலவரத்தால் மாநிலத்துக் குள் இடம்பெயர்ந்த மக்களுக்கு 7,000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக முதல்வர் பிரேன் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அமைச்சருடன் தர்மேந்திர பிரதான் சந்திப்பு
ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர் ஜேசன் கிளேரை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை சந்தித்து கல்வித்துறையில் மேலும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மகாராஷ்டிரம்: சரத் பவார்- உத்தவ் - காங்கிரஸ் தலா 85 தொகுதிகளில் போட்டி
மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவார்), சிவசேனை கட்சிகள் தலா 85 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷாவுடன் ஒமர் சந்திப்பு: ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து குறித்து பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறு: காங்கிரஸ் எம்.பி. மீது குற்றச்சாட்டு பதிவு
கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் சஹாரன்பூர் காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஜார்க்கண்ட்: 35 வேட்பாளர்களை அறிவித்தது ஜேஎம்எம்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி புதன்கிழமை வெளியிட்டது.
வக்ஃப் மசோதா கூட்டத்தில் விதிகளை மீறவில்லை
நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்தே தான் பொது வெளியில் பேசினேன் என்றும், விதிகளை மீறி அந்தக் கூட்டத்தின் அலுவல்களை பொதுவெளியில் வெளியிடவில்லை என்றும் அக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார்.
ரயில்வே இடஒதுக்கீடு: முறையாக பராமரிக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்
ரயில்வே துறையின் அனைத்து (17) மண்டலங்களுக்கும் அதன் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பட்டியலின (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவுகளின் ரோஸ்டர் இடஒதுக்கீடு விதிகளை முறையாக பராமரிக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்வு
பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகம்: பாஜகவில் இருந்து விலகிய எம்எல்சி காங்கிரஸில் இணைந்தார்
கர்நாடகத்தில் பாஜகவில் இருந்து விலகி, சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியை ராஜிநாமா செய்த சி.பி.யோகேஸ்வர் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு வியாழக்கிழமை (அக். 24) ஆலோசனை நடத்துகிறார்.
சிறைத் துறை டிஐஜி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
வேலூர் மத்திய சிறையில் கைதி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில், சிறைத் துறை டிஐஜி உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு
புழுங்கல் அரிசி, பட்டை தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சர் மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், 'சீறாப்புராணம்' இயற்றிய உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேறு கால இறப்புகளைத் தவிர்க்க புதிய திட்டம்: பொது சுகாதாரத் துறை
பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து அவர்களது பிரசவ சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மர்மக் காய்ச்சல்: தேர்வறையில் மயங்கி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு
பவானியில் மர்மக்காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளிக்கு தேர்வு எழுதச் சென்றபோது மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தார்.
ஆவடியில் 496 பேருக்கு ரூ.14 கோடியில் நலத் திட்ட உதவிகள்
ஆவடியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 496 பயனாளிகளுக்கு ரூ.14.53 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் புதன்கிழமை வழங்கினார்.
தீபாவளி: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
தீபாவளியை யொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.
திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!
திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
சில நிமிஷங்களில் விற்றுத் தீர்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்
தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
தீபாவளி பண்டிகை: சுயஉதவிக் குழு தயாரிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்
பண்டிகை காலங்களையொட்டி, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை மக்கள் வாங்க ஊக்குவிக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.
வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் தயாரிக்க முயற்சி
சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிக்க முயன்றதாக 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறந்த நகரமாக மாறும்
சென்னை நகரம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
ரூ.25 லட்சம் பணத்துக்கு பதிலாக வெள்ளை காகிதம்: ராஜஸ்தான் நபர் கைது நகைக்கு பதிலாக பணத்தை கொடுத்தபோது மோசடி
சென்னையில் ரூ.25 லட்சம் நகைக்காக கொடுத்த பணத்தில், வெள்ளை காகிதத்தை கொடுத்து மோசடி செய்ததாக ராஜஸ்தான் நபர் கைது செய்யப்பட்டார்.