CATEGORIES
Kategorier
55 சதவீதம் அதிகரித்த காபி ஏற்றுமதி
இந்திய காபிக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.
இம்ரான் கான் மனைவி ஜாமீனில் விடுவிப்பு
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி புஷ்ராபீபி (படம்), ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இஸ்ரேல் தாக்குதலில் 3 லெபனான் ராணுவத்தினர் உயிரிழப்பு
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டு ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இராக், சிரியாவில் துருக்கி வான்வழித் தாக்குதல்
ஆயுத தொழிற்சாலை தாக்குதலுக்குப் பதிலடி
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: நியூஸி.யை வென்றது இந்தியா
நியூஸி லாந்து மகளிர் அணிக்கு எதி ரான முதல் ஒருநாள் கிரிக்கெட் டில், இந்திய மகளிர் அணி 59 ரன் கள் வித்தியாசத்தில் வியாழக்கி ழமை வெற்றி பெற்றது. இதைய டுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை கண்டது.
உலக சாம்பியன் ஜெர்மனியை வெற்றி கண்டது இந்தியா
நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனிக்கு எதிரான 2-ஆவது ஹாக்கி ஆட்டத்தில் இந்தியா 5-3 கோல் கணக்கில் வியாழக்கிழமை வென்று அசத்தியது.
வாஷிங்டன் சுந்தர் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வயநாடு வேட்பாளர் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத 'செபி' தலைவர்: கூட்டம் ஒத்திவைப்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவர் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிர்த்தார்.
பாகிஸ்தானில் ஜாகீர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக், கிறிஸ்தவ மதத்தை நிந்தித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்கள் அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
எல்லையில் இயல்பு நிலையை மீட்பதில் இந்தியா-சீனா கருத்தொற்றுமை
இந்திய-சீன எல்லையில் இயல்புநிலையை மீட்டெடுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே பரந்த கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: நிதின் கட்கரி
போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது
அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
கேரளத்தில் ஜிஎஸ்டி மோசடி: சோதனையில் 104 கிலோ தங்கம் பறிமுதல்
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நகை உற்பத்தியாளர்களிடம் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.75 கோடி மதிப்பிலான 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை
உத்தர பிரதேசத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டி யிடப்போவதில்லை என்று காங்கிரஸ் வியாழக்கிழமை அறிவித்தது.
முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் பிருத்விராஜ் சவான், நானா படோல் போட்டி
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை வெளியிட்டது.
கரையைக் கடந்தது 'டானா' புயல்
'டானா' புயல் ஓடிஸாவின் திரபாரா மாவட்டத்தின் பிதர்க னிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமு கம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்
முதல்வர் இல் லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்திய ஜம்மு காஷ் மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் நடவடிக்கைக்கு முன் னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்ப ரம் கண்டனம் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு துரோகம் இழைத்தது கனடா: இந்திய தூதர்
ஜனநாயக நாடாக கருதப்படும் கனடா இந்தியாவுக்கு துரோகம் இழைத்ததுடன், தவறான முறையில் நடத்தியது என கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் தேர்தல்: முதல்வர் ஹேமந்த் சோரன், மனைவி வேட்புமனு தாக்கல்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மாநில முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் ஆகியோர் வியாழக்கிழமை (அக்.24) வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் 17 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பு: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பை முடித்தவர்கள், தமிழகத்தில் சித்த மருத்துவர்களாகச் செயல்படுகிறார்களா? என்பது குறித்து தமிழக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளருடன் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
வயதை தீர்மானிக்கும் ஆவணம் இல்லை ஆதார்!
வயதை தீர்மானிக்கும் ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
பகுதிநேர பொறியியல் படிப்புகள்: காலியிடங்கள் விவரம் வெளியீடு
பகுதிநேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ராமேசுவரம் மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சோழர்கள் காலத்திலிருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அகற்றப்பட வேண்டும்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வள்ளலார் சர்வதேச மைய விவகாரம்: அறநிலையத் துறைக்கு உத்தரவு
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவுள்ள நிலத்தை வகை மாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய உத்தரவுகளைப் பெற இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.