CATEGORIES
Kategorier
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு
மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (அக். 29) தொடங்கி வைக்கிறாா்.
இந்தியாவின் சிறந்த வங்கி: எஸ்பிஐ-க்கு சர்வதேச விருது
இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொருளாதார பத்திரிகையான 'குளோபல் ஃபைனான்ஸ்' தேர்வு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர்: ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கு தடுப்புக் காவல்
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏவின் பையில் துப்பாக்கி கிட் தோட்டாக்கள் இருந்ததால் விமான நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன்: ரூ.372 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு வீரவாள் பரிசு
தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய்க்கு பொதுச்செயலர் புஸ்ஸி என். ஆனந்த் வீரவாளை பரிசாக வழங்கினார்.
காலமானார் முன்னாள் எம்எல்ஏ மா.தண்டபாணி
வேடசந்தூர் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மா.தண்டபாணி (படம்) உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
மீனவர்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு: பாமக, தமாகா கோரிக்கை
தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டுமென பாமக, தமாகா ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு
தமிழகத்தில் நிகழாண்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் நலனை தவெக முன்னெடுக்க வேண்டும்
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
ஹரியாணாவுக்கு சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து ஹரியாணா மாநிலம் அம்பாலாவுக்கு திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தொழிலதிபரிடம் கொகைன் பறிமுதல்
சென்னையில் தனியாா் ஹோட்டலில் தங்கியிருந்த தொழிலதிபரிடமிருந்து கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சென்னை முக்கிய ஏரிகளில் 41% நீர் நிரம்பியது
சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 41.29 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது.
'சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி விரைவில் திறப்பு’
சிந்தாதிரிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நவீன மீன் அங்காடி விரைவில் திறக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
ரூ.12,000 கோடி கூடுதல் கடன்
சீனாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவில் மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்தது.
இஸ்ரேல் தாக்குதலை குறைத்து மதிப்பிடக் கூடாது
ஈரான் தலைமை மதகுரு கமேனி
ரஞ்சி கிரிக்கெட்: சத்தீஸ்கர் 500 ரன்கள்
ரஞ்சிகோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ் நாடுக்கு எதிரான ஆட்டத்தில் சத்தீஸ்கர் முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஆள்குறைப்பு இல்லை: மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சர்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 24 பதக்கங்கள்
ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியர்கள் 6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று அசத்தினர்.
மும்பை - ஒடிஸா ஆட்டம் 'டிரா'
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், மும்பை சிட்டி எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது நியூஸி.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
ஜப்பான் ஓபன்: ஜெங் கின்வென் சாம்பியன்
ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், சீனாவின் ஜெங் கின்வென் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
பஞ்சாப்: 105 கிலோ ஹெராயின் பறிமுதல்
துருக்கியைச் சேர்ந்த இருவர் கைது
கிழக்கு லடாக்கில் படை விலக்கலுக்குப் பின் பதற்றம் தணியும்
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு பகுதிகளில் படை விலக்கல் நடைபெற்றுவரும் நிலையில், இந்த நடவடிக்கைக்குப் பின் பதற்றம் தணியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நெரிசல்: 10 பயணிகள் காயம்
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ரயிலில் ஏற முண்டியடித்த பயணிகளால் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
இணையவழி மோசடிகள் குறித்து மக்களிடையே விழிப்பணர்வு அவசியம்
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
ஜார்க்கண்ட்: 32 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் 32 தொகுதிகளில் வெற்றியாளரைத் தீர்மானிப்பதில் பெண் வாக்காளர்கள் முக்கிய பங்காற்ற உள்ளனர்.
பிரிக்ஸ் தலைவர்களுக்கு மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் கைவினைப் பொருள்களைப் பரிசளித்தார் பிரதமர்
பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி அண்மையில் ரஷியா சென்ற பிரதமர் மோடி, அங்கு வெளிநாட்டுத் தலைவர்களுக்கு மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்களை பரிசளித்தார்.
மகாராஷ்டிரத்தில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: காங்கிரஸ் பொதுச் செயலர் போட்டியிட மறுப்பு
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் பொதுச் செயலர் சச்சின் சாவந்த் கட்சித் தலைமை ஒதுக்கிய அந்தேரி மேற்கு தொகுதியில் போட்டியிட மறுத்துள்ளதால் அந்த மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் அமைச்சர் அவதூறு பேச்சு: சீதா சோரன் கண்ணீர்!
ஜார்க்கண்ட் அமைச்சர் இர்ஃபான் அன்சாரி தன்னை அவதூறாகப் பேசியது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜாம்தாரா தொகுதியின் பாஜக வேட்பாளர் சீதா சோரன் கண்ணீர் விட்டு அழுதார்.