CATEGORIES
Kategorier
பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா
520 பேருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பட்டம் வழங்கினார்
பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் ஏராளமானோர் சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றதால் மாநகர மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவ் ஜாமீன் மனு தள்ளுபடி
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்தளித்து கௌரவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட 1,050 பேருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்
சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
மாநகராட்சி கால்பந்து மைதானத்துக்கு இனி கட்டணம்
சென்னை மாநகராட்சியின் 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டு திடலாக மாற்றி ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள்
சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் வெள்ளச் சேத தடுப்பு திட்டங்கள் முழுமை பெறவில்லை தமிழிசை குற்றச்சாட்டு
சென்னையில் வெள்ளச் சேத தடுப்பு திட்டங்கள் முழுமை பெறவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினார்.
மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி
சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்கக் கணினிகளை மேயர் ஆர். பிரியா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
மருத்துவர்கள் வலியுறுத்தல்
70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு
‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
‘டிஸ்லெக்சியா' விழிப்புணர்வு: சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்த ‘இந்தியா கேட்'
கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் ஆகியவை திங்கள்கிழமை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.
ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியா-சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷிய தூதர் தகவல்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, இரு தரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழப்பு
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழந்ததாகவும் மொத்தமாக 209 இந்திய மீனவர்கள் சிறைக் காவலில் உள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி (98) காலமானார்
ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி (வயது 98) உடல்நலக் குறைவால் காலமானார்.
சொந்த கட்சி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மகளிரணித் தலைவர் வலியுறுத்தல்
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் பாஜக வேட்பாளர் சீதா சோரனை அவதூறாக பேசிய அந்த மாநில காங்கிரஸ் அமைச்சர் இர்ஃபான் அன்சாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மகளிரணித் தலைவர் அல்கா லம்பா திங்கள்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் 107 போலி வழக்குரைஞர்கள்: பட்டியலில் இருந்து நீக்கிய பார் கவுன்சில்
தில்லி வழக்குரைஞர் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞர்களை இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் (பிசிஐ) நீக்கியுள்ளது.
இந்திய பொருளாதாரம் 7% வளரும்; மத்திய நிதியமைச்சகம்
நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி நலன்களைக் காக்க செபி தலைவர் சூழ்ச்சி
தொழிலதிபர் அதானியின் நலன்களைக் காக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச் பங்குச்சந்தையில் சூழ்ச்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
மணிப்பூர்: ஆளுநர் மாளிகை அருகே கையெறி குண்டு கண்டெடுப்பு
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகைக்கு 100 மீட்டர் தொலைவில் ஜி.பி.பெண்கள் கல்லூரி வாயிலில் ஒரு கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டது.
அரசியல் சாசனத்தை சீர்குலைக்கிறது பாஜக: வயநாட்டில் பிரியங்கா காந்தி பிரசாரம்
அரசியல் சாசன மதிப்பீடுகளை மத்திய பாஜக அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிர முதல்வர், துணை முதல்வர் வேட்புமனு தாக்கல்
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி-பச்பக்காடி தொகுதியிலும், துணை முதல்வர் அஜீத் பவார் பாராமதி தொகுதியிலும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர்: திகார் சிறையில் சரணடைந்தார் பாரமுல்லா எம்.பி.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீதின் இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததை அடுத்து திகார் சிறையில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
வக்ஃப் மசோதா கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், நிர்வாகிகள் ஆஜர்
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் வக்ஃப் நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆஜரானதால், பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்
கரும்பு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 'பாதம் பாதுகாப்போம்' திட்டம்
சர்க்கரை நோயாளிகளுக்கான 'பாதம் பாதுகாப்போம்' திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மருத் துவக் கல்லூரி மருத்துவம னைகள், அரசு மருத்துவமனைகளில் தொடங்குவதற்கான அரசாணை திங்கள்கிழமை (அக்.28) வெளியிடப்பட்டது.
நாகை மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கூட்டுறவு நிறுவன பட்டாசு விற்பனை இலக்கு ரூ.20 கோடி
கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பட்டாசு கடைகளின் விற்பனை இலக்கு ரூ.20 கோடியைத் தாண்டும் என்று அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.