CATEGORIES
Kategorier
அம்பத்தூரில் மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது
அம்பத்தூரில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் மருத்துவமனை நடத்தி, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
இணையதளம் மூலம் ரூ.1 கோடி மோசடி: வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது
இணையதளம் மூலம் ஒரு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சிறந்த மருத்துவராகும் குறிக்கோள் மாணவர்களுக்கு அவசியம்
துணைவேந்தர் கே.நாராயணசாமி அறிவுரை
சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி: பொறியாளர் கைது
அம்பத்தூரில் தனியார் நிறுவன அலுவலரிடம் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், பொறியாளரை ஆவடி இணையவழி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை, நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை
தீபாவளி பண்டிகையை யொட்டி, சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணம் மேற்கொண்டதாலும், பொருள்களை வாங்க கடைக்கு ஏராளமானோர் சென்றதாலும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பம் வரவேற்பு
சமுதாய நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நவ.5 முதல் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - பரிசுத் தொகை ரூ.70 லட்சம்
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது.
திருச்சி வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்
திருச்சிராப்பள்ளி கோட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முருகன் கோயிலில் நவ 2-இல் கந்த சஷ்டி விழா தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் வரும் சனிக்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.
பட்டாசு வெடிக்காத வேடந்தாங்கல் கிராம மக்கள்
மதுராந்தகம் அருகே புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ள வேடந்தாங்கலில் கிராம மக்கள் பட்டாசுகளை வெடிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை
அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ. பதிவு
15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.31) 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியா-சீனா படை விலக்கல் நிறைவு - விரைவில் ரோந்துப் பணி
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா படைவிலக்கல் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் ரோந்துப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
மீனவர்களுக்கு எதிராக படை பலத்தைத் தவிர்க்க வேண்டும் - இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
மீனவர்களுக்கு எதிராக எந்தச் சூழ்நிலையிலும் படை பலம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியது.
வி.சாலை மாநாடு வெற்றிச் சாலை மாநாடானது
'வி.சாலை மாநாடு, வெற்றிச் சாலை மாநாடாக மாறியது' என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
பார்வைத்திறனுக்காக கான்டேக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள், அதனைக் கழற்றாமல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், கண்களை கண்ணாடிகளை பாதுகாக்கும் அணிந்து கொண்டு வெடிகளை வெடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெங்களூரு 'த்ரில்' வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் தபங் டெல்லி கே.சி.யை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் வெற்றி கண்டது.
மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டாரில் 27 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது.
கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம்
கேரள மாநிலம், நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்தனர்.
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செப்டம்பரில் வீழ்ச்சி கண்ட பிண்ணாக்கு ஏற்றுமதி
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த செப்டம்பரில் 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
364 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இரண்டாவது நாளாக லாபத்தில் முடிந்தது.
ஹிஸ்புல்லா படைக்கு புதிய தலைமை
லெபனானின் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக மதகுரு நயீம் காஸிம் (71) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: போலியோ தடுப்பு ஊழியர்கள் சிறைபிடிப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாமிலிருந்து சுகாதாரப் பணியாளா்களை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா்.
நியூஸி.யுடன் ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் சாம்பியன்
நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
அயோத்தியில் இன்று தீபோற்சவம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குகளுடன் எட்டாம் ஆண்டு தீபோற்சவ நிகழ்வு புதன்கிழமை (அக்.30) நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு - சத்தீஸ்கர் ஆட்டம் 'டிரா'
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு - சத்தீஸ்கர் அணிகள் மோதிய ஆட்டம், செவ்வாய்க்கிழமை 'டிரா'-வில் முடிந்தது.
முதல் சுற்றிலேயே தோற்ற முக்கிய வீரர்கள்
பிரான்ஸில் தொடங்கியிருக்கும் பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், அண்ட்ரே ரூபலேவ், டாமி பால், ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சிலர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
ஆளும் மார்க்சிஸ்ட் தலைவர் திவ்யா கைது
கண்ணூர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் நவீன் பாபு தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் திவ்யாவை கேரள காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.