CATEGORIES
Kategorier
வக்ஃப் மசோதா கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், நிர்வாகிகள் ஆஜர்
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் வக்ஃப் நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆஜரானதால், பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்
கரும்பு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 'பாதம் பாதுகாப்போம்' திட்டம்
சர்க்கரை நோயாளிகளுக்கான 'பாதம் பாதுகாப்போம்' திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மருத் துவக் கல்லூரி மருத்துவம னைகள், அரசு மருத்துவமனைகளில் தொடங்குவதற்கான அரசாணை திங்கள்கிழமை (அக்.28) வெளியிடப்பட்டது.
நாகை மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கூட்டுறவு நிறுவன பட்டாசு விற்பனை இலக்கு ரூ.20 கோடி
கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பட்டாசு கடைகளின் விற்பனை இலக்கு ரூ.20 கோடியைத் தாண்டும் என்று அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு?
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நம்பிக்கையுடன் இந்தியாவை நோக்கும் உலக நாடுகள்
இந்தியாவின் குரலை மிகுந்த முக்கியத்துவத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் உலக நாடுகள், புதிய நம்பிக்கையுடன் நமது தேசத்தை உற்றுநோக்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பேரவைத் தேர்தலில் வெற்றி பெற புதிய உத்திகள்
கட்சிப் பார்வையாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
நல்லதோர் வீணை நலங்கெடலாகாது
சமீபத்தில் சென்னை கல்லூரி மாணவர்களிடையே ‘ரூட் தல’ யார் என்ற மோதலின் விளைவாக ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரிப்பு
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கீழ்ப்பாக்கம் மன நல காப்பகம் தனியார்மயமாகாது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
நவ.28-இல் சென்னை திரும்புகிறார் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை முடித்து விட்டு நவ. 28-இல் தமிழகம் திரும்புகிறார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பசும்பொன்னில் தொடங்கியது தேவர் குருபூஜை விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை லட்சார்ச்சனை, யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழா தொடங்கியது.
பசும்பொன்னில் தொடங்கியது தேவர் குருபூஜை விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே யுள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை லட்சார்ச்சனை, யாக சாலை பூஜைளுடன் ஆன்மிக விழா தொடங்கியது.
தவெக மாநாடு: வி.சாலையில் 3 டன் குப்பை அகற்றம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் முடிவில் 3 டண் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே குளத்தில் மூழ்கி, சகோதரிகளான இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
ரூ.1 கோடி இழப்பீடு கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு: கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
தன்னை சட்டவிரோத தடுப்புக் காவலில் வைத்து காவல் துறையினர் மனித உரிமைகளை மீறியதால் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்கள் விரைவாக மாற வேண்டும்
அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திருச்சி ஐஐஎம் இயக்குநர் அறிவுரை
ஸ்ரீரங்கம் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த ஊஞ்சல் உற்சவ விழா திங்கள்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இன்றுமுதல் கடற்கரையிலிருந்து வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை
தண்டவாளம் அமைக்கும் பணியால் கடந்த ஓராண்டுகாலமாக சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து இயக்கப்பட்ட வேளச்சேரி பறக்கும் ரயில்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் கடற்கரையிலிருந்து இயக்கப்படவுள்ளன.
440 அரசுப் பள்ளிகளில் ரூ.745 கோடியில் பணிகள்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.745 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிரிப்டோ காயின் மோசடி: 6 பேர் கைது
பணத்தை கிரிப்டோ காயினாக மாற்றித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பணியிடத்தில் நேர்மை அவசியம்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி
பக்கவாத பாதிப்புகளுக்கு நவீன கேத் லேப் தொடக்கம்
பக்கவாத பாதிப்புகளுக்கான அதி நவீன இடையீட்டு ஆய்வகத்தை (கேத் லேப்) சென்னை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது.
மன்னிப்பு கோரினார் முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர்
திருவேற்காடு கோயில் ரீல்ஸ் வீடியோ விவகாரத்தில், கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர் க.வளர்மதி மன்னிப்பு கேட்டு அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொளத்தூரில் ‘முதல்வர் படைப்பகம்’: நவ.4-இல் திறந்துவைக்கிறார் முதல்வர்
கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.4-ஆம் தேதி திறந்து வைப்பார் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை
ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து மோடி தொடங்கி வைத்தார்
வயநாட்டின் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு இன்னும் உதவவில்லை
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு இன்னும் உதவவில்லை என்று கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.