CATEGORIES
Kategorier
நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூருக்கு பிரதமர் பாராட்டு
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும், எதிா்க்கட்சித் தலைவா் ராகுலுக்கு பதிலளித்த பாஜக எம்.பி. அனுராக் தாக்கூருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா்.
ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேச்சு: அவமானப்படுத்தியதாக ராகுல் குற்றச்சாட்டு
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் பேசியதால் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கடும் அமளி ஏற்பட்டது.
தமிழகத்திற்கு கூடுதலாக 47 டிஎம்சி காவிரி நீர் விடுவிப்பு - காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100-ஆவது கூட்டத்தில் தகவல்
காவிரியில் நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பெற வேண்டிய அளவை விட கூடுதலாக 47 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றுள்ளது என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு: ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலா் உயிரிழந்த நிலையில், அவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநா் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் விதிமீறி 20 சுங்கச் சாவடிகள்: மாநிலங்களவையில் திமுக எம்.பி.
தமிழகத்தில் விதிகளை மீறி 20 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) பரிந்துரையை மீறி சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் குற்றஞ்சாட்டினார்.
எழுத்தாளர் சிவசங்கரிக்கு தேசிய இலக்கிய விருது
நிகழாண்டுக்கான ‘விஸ்வம்பர’ மருத்துவா் சி. நாராயண ரெட்டி நினைவு தேசிய இலக்கிய விருது பிரபல எழுத்தாளரும் சமூக ஆா்வலருமான சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது.
மீட்புப் பணியில் தமிழக குழு; கேரளத்துக்கு ரூ.5 கோடி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மேலும், பாதிப்புக்குள்ளான வயநாட்டுக்கு தமிழக மீட்புக் குழு விரைந்துள்ளது.
ராகுல், பிரியங்காவின் வயநாடு பயணம் ஒத்திவைப்பு
நிலச்சரிவால் பாதித்த வயநாட்டுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் புதன்கிழமை காலை பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
எந்த மாநிலத்துக்கும் நிதி மறுக்கப்படவில்லை - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்துக்கும் நிதி மறுக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கமளித்தாா். ஒரு மாநிலத்தின் பெயரை பட்ஜெட் உரையில் கூறவில்லை என்றால் அந்த மாநிலத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று அா்த்தமில்லை எனவும் அவா் கூறினாா்.
ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள்: மானு பாக்கர் புதிய சாதனை
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் செவ்வாய்க்கிழமை 2-ஆவது வெண்கலப் பதக்கம் வென்றார்.
வயநாட்டில் நிலச்சரிவு: 125 பேர் உயிரிழப்பு - மேலும் பலர் மாயம்; மீட்புப் பணியில் ராணுவம்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 125 பேர் உயிரிழந்தனர். 481 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
2-ஆவது பதக்கத்துக்கு மானு பாக்கர் இலக்கு
ரமிதா, அர்ஜுன் ஏமாற்றம்; பிருத்விராஜ் தடுமாற்றம்
ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறைக்கு புதிய 19 கட்டடங்கள்
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட 19 அலுவலகக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
‘இஸ்ரேல் மீது படையெடுப்போம்' : துருக்கி அதிபர் எர்டோகன்
பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் என்று துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரித்துள்ளாா்.
எந்த நாடும் பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது : சீனாவை குறிவைத்த 'க்வாட்' கூட்டறிக்கை
எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்களுக்கான மாநாட்டில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த ஒரே நாடு இந்தியா
கடந்த பெட்ரோல், ஆண்டுகளில் டீசல் விலை குறைத்த ஒரே நாடு இந்தியா மட்டும்தான் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்புரி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பணியாற்றிய ஹரியாணா இளைஞர் உயிரிழப்பு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த ஹரியாணாவைச் சோ்ந்த 22 வயது இளைஞரான ரவி மௌன் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்துகள் குறித்து அறிக்கை அளிக்க 3 மாதம் அவகாசம்
தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தபோது பணியில் இருந்த காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிறப்பான சமூக சேவை: குமரி மாவட்ட திருநங்கைக்கு அரசு விருது
சிறப்பாக சமூக சேவை செய்துவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு தமிழக அரசு விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இலங்கையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள்-படகுகளுக்கு நிவாரண நிதி உயர்வு
இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பங்கள், படகுகளுக்கான நிவாரண நிதியை உயா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், மீனவா்கள் பிரச்னை தொடா்பாக மத்திய அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரில் சந்தித்து வலியுறுத்துவா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
3 ஆண்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 30,897 பேருக்கு பணியிட மாறுதல்
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மொத்தம் 30,897 பேர் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இளநிலை மருத்துவப் படிப்புகள்: ஆக.14 முதல் கலந்தாய்வு
அடுத்த மாதம் 14-ஆம் தேதிமுதல் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) தெரிவித்தது.
தில்லி பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழப்பு: மேலும் 5 பேர் கைது
தில்லியில் தனியார் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் மழை-வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
ஜார்க்கண்ட் முதல்வர் சோரனுக்கு ஜாமீன்: அமலாக்கத் துறையின் மேல்முறையீடு தள்ளுபடி : உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிகாரில் 65% இடஒதுக்கீடு ரத்து: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பிகாரில் 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்திய மாநில அரசின் அரசாணையை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் சக்கர வியூகத்தை தகர்ப்போம் : மக்களவையில் ராகுல் காந்தி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சக்கர வியூகத்தால் நாடெங்கிலும் அச்சம் மிகுந்த சூழ்நிலை நிலவுகிறது; அந்த சக்கர வியூகத்தை ’இந்தியா' கூட்டணி தகர்க்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஏரிகளை மேம்படுத்த சிஎம்டிஏ திட்டம் விரைவில் பணிகள் தொடக்கம்
சென்னையில் உள்ள ஏரிகளை மேம்படுத்துவதற்காக சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
பேராசிரியர் நியமன மோசடி: கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அண்ணா பல்கலை. நடவடிக்கை
அண்ணா பல்கலை.யின் இணைப்பு கல்லூரிகளில் பேராசிரியா் நியமன மோசடி குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலை. துணை வேந்தா் ஆா்.வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.