CATEGORIES
Kategorier
இஸ்ரோ, கூடங்குளம் செல்லும் சென்னை பள்ளி மாணவர்கள்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற சென்னை பள்ளிகளைச் சோ்ந்த 50 மாணவா்கள் இஸ்ரோ, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிவியல் சுற்றுலாவாக ஞாயிற்றுக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.
மெட்ரோ ரயில் நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல் 7
வங்கதேசம்: சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு குறைப்பு
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
மத்திய பட்ஜெட் டில் தமிழ் நாட்டு மக்களின் எதிர் பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகம் திரும்பிய 49 மாணவர்கள்
வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சோ்ந்த 49 மாணவா்கள் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை சென்னை அழைத்து வரப்பட்டனா்.
எதிர்க்கட்சிகளுக்கு மக்களவை துணைத் தலைவர் பதவி
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடன் விலகல்
கமலா ஹாரிஸுக்கு ஆதரவு
நேபாள பிரதமர் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
நேபாளத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறாா்.
ஊரடங்கு பிறப்பித்தும் அதிகரிக்கும் உயிரிழப்பு
வங்கதேசம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டும் அங்கு நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாக்கப்படும்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்தால் பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் நிலங்களை பாதுகாக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேற்கிந்தியத் தீவுகள் 457 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 111.5 ஓவா்களில் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 41 ரன்கள் முன்னிலை பெற்றது.
சட்டவிரோத குவாரி வழக்கில் ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ கைது
சட்டவிரோத குவாரி தொடா்பான பணமோசடி வழக்கில் ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தா் பன்வாா் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.
சாலையோர வியாபாரிகளுக்கு ஆண்டு பதிவுக்கட்டணம் ரத்து
சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ ரத்து செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்துக்கு (எஃப்எஸ்எஸ்ஏஐ) மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
நிகழ் கல்வியாண்டில் 5.47 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
நிகழ் கல்வியாண்டில் ரூ. 264.10 கோடியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 லட்சத்து 47,676 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
தமிழகத்தில் ஜூலை 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக கவுன்சிலர் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக கவுன்சிலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடின உழைப்பு, ஒழுக்கத்துடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும்
உலகின் விஸ்வ குருவாக இந்தியா மாறுவதற்கு இளைஞா்கள், கடின உழைப்பு, ஒழுக்கம், அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.
கூட்டுக் குடும்ப முறை குறைந்து வருகிறது
கூட்டுக் குடும்ப முறை தற்போது குறைந்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தாா்.
சமூக மாற்றத்துக்கான அங்கம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
பெண்கள், திருநங்கைகளுக்கான உரிமைகளை நிலை நாட்டியதன் மூலம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சமூக மாற்றத்துக்கான அங்கமாகத் திகழ்கிறது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி .ஒய். சந்திரசூட் புகழாரம் சூட்டினாா்.
இந்தியாவில் விமான சேவை சீரானது
‘மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய விமான சேவை சனிக்கிழமை மீண்டும் சீரானது’ என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
வங்கதேச வன்முறை: தமிழர்களுக்கு உதவ உத்தரவு
வங்கதேசத் தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்முறை, மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அங்குள்ள தமிழர்களுக்கு உதவ அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நீட்: தேர்வு மைய வாரியாக முடிவுகள் வெளியீடு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சனிக்கிழமை வெளியிட்டது.
வங்கதேசம்: தீவிரமடைகிறது மாணவர் போராட்டம் : இதுவரை 53 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் அரசுப் பணி இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹூதிக்கள் தாக்குதல் : ஒருவர் உயிரிழப்பு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வெள்ளிக்கிழமை வென்றது.
மகாராஷ்டிரம்: கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை
மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
அடுக்கடுக்கான பொய்களால் இளைஞர்களை ஏமாற்றுகிறார் பிரதமர்
காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம்
தேச பாதுகாப்பில் அரசின் கூட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்
தேசத்தைப் பாதுகாப்பதில் அரசின் கூட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இணைந்த மாணவர்களுக்கு மடிக்கணினி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் படித்து, மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை காவல் நீட்டிப்பு
ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து கரூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.