CATEGORIES
Categories
மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிர வாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதலைத் தொடர்ந்து 3 பெண்கள், 3 குழந்தைகள் மாயமாகி உள்ளதை யொட்டி 13 சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் இம்பால் பள்ளத்தாக்கில் புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதித்தது.
புதிய வரத்து தொடங்கியதும் வெங்காயம் விலை குறையும் - மத்திய அரசு தகவல்
காரீஃப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் விரைவில் சந்தைக்கு வரும்.
காஸாவில் போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
காஸாவில் போர் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இரு தரப்பு தீர்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் 'இளவரசர்' சதியில் ஈடுபட்டுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
கர்நாடக முதல்வருக்கு எதிராக புகார் அளித்தவர் மீது வழக்குப் பதிவு
மாற்று நில முறை கேடு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க இடைத்தேர்தலில் வன்முறை: திரிணமூல் தொண்டர் குண்டுவீசிக் கொலை
மேற்கு வங்கத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு வாக்குச் சாவடி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட் முதல்கட்ட பேரவைத் தேர்தலில் 66% வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 66.18 சதவீத வாக்குகள் பதிவாகின.
தஞ்சாவூர் பெரியகோயிலில் தமிழக ஆளுநர் வழிபாடு
தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த ஆளுநர் ஆர்.என். ரவி பெரிய கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
கங்குவா படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி
சூர்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் 5 மடங்கு அதிகரிப்பு
ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்
அவசர சிகிச்சைகள் நடைபெறும் என அறிவிப்பு
இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்
2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது.
திருக்கோயில்களில் ரூ.190 கோடியில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
குழந்தைகளுக்குத் தேவை அன்பும் அறிவியலும்!
இந்திய விண்வெளி வரலாற்றில் 2008 நவம்பர் 14 அன்று நிலவின் தென் துருவத்தில் இந்திய தேசியக்கொடி பதிக்கப்பட்டது.
தேவை அரசுக்கு மனமாற்றம்
அடிக்கடி நாம் காணும் காட்சி, வீதி யோரத்தில் சிலர் அலங்கோலமாக விழுந்து கிடப்பதாகும். பலர் எந்தவித பதைபதைப்புமின்றி, 'அவர் குடித்துவிட்டு கிடக்கிறார்' என்று கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
சபரிமலை செல்ல சிறப்பு ரயில்: ஹூப்ளி – கோட்டயம் இடையே இயக்கம்
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹூப்ளியில் இருந்து கோட்டயத்துக்கு ஜன.14-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனையில் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை!
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக டார்ச்லைட் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
4 நாள்கள் பயணமாக தமிழகம் வருகிறது 16-ஆவது நிதி ஆணையம்
முதல்வருடன் ஆலோசனை - கீழடி செல்ல திட்டம்
மருத்துவருக்கு கத்திக்குத்து: ஆளுநர், தலைவர்கள் கண்டனம்
கிண்டி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடில்லா தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும் என கட்சியின் நூற்றாண்டு விழாவில் வலியுறுத்துவோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
ஓபிஜி குழுமத்தில் அமலாக்கத் துறை சோதனை: ரூ.8.38 கோடி பறிமுதல்
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.8.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக 1,476 குடியிருப்புகள் - அமைச்சர் சேகர்பாபு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக 1,476 புதிய குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
நெரிசல் மிகுந்த சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க முடிவு
சென்னை புறவழிச்சாலை மற்றும் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி பிரிவுகளில் உள்ள நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
பௌர்ணமி, வார விடுமுறை: நவ.15, 16 தேதிகளில் 1,152 கூடுதல் பேருந்துகள்
பௌர்ணமி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, நவ.15, 16 ஆகிய தேதிகளில் 1,152 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொழில் - வணிக கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிப்பு
தொழில், வணிக கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூண்டு விலை உச்சம்: கிலோ ரூ.550!
சென்னையில் பூண்டு விலை உச்சத்தைத் தொட்டு, கிலோ ரூ. 550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ரூ. 763 கோடி முதலீடு
தமிழகத்தில் புதிய தொழில் முதலீட்டை தொடங்குவதற்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட அலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தினர்.