CATEGORIES
Categories
9 – பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மெத்தனாலை சட்ட விரோதமாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து
சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
'புல்டோசர்’ நடவடிக்கை சட்ட விரோதம்
'குற்றச் சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதி களை மீறியதாகக் கூறி, புல்டோசர் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் புதன்கிழமை (நவ.13) தீர்ப்பளித்தது.
தங்கம் பவுனுக்கு ரூ.1,080 சரிவு
சென்னையில் தங் கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ. 56,680-க்கு விற்பனையானது.
மருத்துவ அறிவியல் விநாடி வினா: இராமச்சந்திரா மாணவர்கள் முதலிடம்
மருத்துவ அறிவியல் தொடர்பான சர்வதேச விநாடி வினா போட்டியில் போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அணியினர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
சாலை பள்ளத்தில் சிக்கியது குப்பை லாரி
போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகா ரட்சி குப்பை அள்ளும் லாரி சிக்கியது.
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா இரு நாள்கள் கொண்டாட்டம்
சென்னை, நவ. 12: கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, வரும் டிச.31, ஜன.1 ஆகிய இரு நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மண் விளக்கு வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை மண்விளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டடங்கள்
தமிழகத்தில் 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
ரூ.1.60 கோடியை டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது
சென்னை, நவ.12: ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 60 லட்சத்தை நீதிமன்ற பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில்லறை பணவீக்கம் 14 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்தன.
முக்கிய வெளிவிவகாரப் பதவிகளில் சீன எதிர்ப்பாளர்கள்
தனது புதிய அரசில் முக்கிய வெளிவிவகாரப் பதவிகளான வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிகளுக்கு, சீனாவுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட மார்கோ ரூபியோ மற்றும் மைக் வால்ட்ஸை அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்க கெடுவை மீறியது இஸ்ரேல்
பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. பிரிவு குற்றச்சாட்டு
சென்னையில் நவ. 22, 25-இல் ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று
சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (எஃப் ஐபிஏ) இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் ஆசிய தகுதிச் சுற்று போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வரும் நவ. 22, 25 தேதிகளில் நடைபெறவுள்ளது.
மினாரை வீழ்த்தி மீண்டார் மெத்வதெவ்
ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் முதல் வெற்றியை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தார்.
கானுக்கு கொலை மிரட்டல்
ராய்பூர் வழக்குரைஞர் கைது
'நம்பர் 1': சின்னர், சபலென்காவுக்கு கோப்பை
நடப்பு டென்னிஸ் காலண்டரை, உலகின் நம்பர் 1 வீரராக இத்தாலியின் யானிக் சின்னரும், நம்பர் 1 வீராங்கனையாக பெலாரஸின் அரினா சபலென்காவும் நிறைவு செய்தனர். இதற்கான கௌரவக் கோப்பை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வங்கதேசத்துடனான ஒருநாள் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் சாம்பியன்
வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
உலகத் தமிழர்களின் தொழில்முனைவு வாய்ப்புகளை கோலாலம்பூர் பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும்
உலகத் தமிழர்களின் தொழில்முனைவு மற்றும் பொருளாதாரத்தை கோலாலம்பூரில் நவ.15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும் என்று அந்த மாநாட்டு அமைப்புத் தலைவரும் நிறுவனத் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 3-2 கோல் கணக்கில் தென் கொரியாவை செவ்வாய்க்கிழமை வென்றது.
மாநில நிதியமைச்சர்களுடன் டிச.21,22-இல் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
மாநிலங்களின் நிதியமைச்சர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற டிச.21, 22 ஆகிய தேதிகளில் சந்தித்து பட்ஜெட்- 2025 குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளார்.
நடிகர் ஷாரூக் கானுக்கு கொலை மிரட்டல்
பாலிவுட் நடிகர் ஷாரூக் கானிடம் ரூ. 50 லட்சம் கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரைச் சேர்ந்த வழக்குரைஞரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
வக்ஃப் வாரியத்தில் மாற்றங்களைச் செய்ய இதுவே உகந்த நேரம்
அமைச்சர் அமித் ஷா
நாட்டை ஆளப் பிறந்ததாக நினைக்கிறது சோனியா குடும்பம்
தங்கள் நாட்டை ஆட்சி செய்யப் பிறந்தவர்கள் என்பதே காங்கிரஸ் அரசு குடும்பத்தின் (சோனியா காந்தி குடும்பத்தை குறிப்பிடுகிறார்) மன நிலை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.
மணிப்பூர்: 2 முதியவர்களின் உடல்கள் மீட்பு
மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தின் போரோபெக்ரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் தீவிர வாதிகள் தீ வைத்து எரித்த கடைகளுக்குள் சிக்கி உயிரிழந்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்த 2 முதிய வர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
தொலைதூர தரை இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
தொலைதூரம் சென்று தரை இலக்கை தாக்கும் ஏவுகணையின் முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட பேரவைத் தேர்தல்
43 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு