CATEGORIES
Kategoriler
இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகள் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம்
இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக BSNL செய்திகள் வெளிவந்துள்ளது. ரூ.249 மற்றும் ரூ.298 விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த இரு சலுகைகளிலும் அன் லிமிடெட் வாய்ஸ் கால், குறுந்தகவல் பலன்கள் வழங்கப்படுகிறது.
திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்ல முழு அளவில் தயாராகிறது ரயில்வே
திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வே முழு அளவில் தயாராகி கொண்டிருக்கிறது.
கடந்த 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 23 சதம் உயர்வு
கடந்த 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 22.58 சதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஃபுல் சார்ஜில் 700 கி.மீ. பயணம் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் இக்யுஎஸ்
ஃபுல் சார்ஜில் 700 கி.மீ. பயணம் செய்யும் திறனுடன் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. சொகுசு வாகனங்கள் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ள நிறுவனங்களில் மெர்சிடிஸ் நிறுவனமும் ஒன்று.
தடுப்பூசி உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்களின் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும்: சீரம் கோரிக்கை
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கோவிட் தொற்றுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது.
இந்தியாவில் 85 கோடி டோசுக்கும் அதிகமான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி செய்ய திட்டம்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரயில்சேவையை எந்த மாநிலமும் நிறுத்த சொல்லவில்லை: ரயில்வே அறிவிப்பு
தற்போது எந்த மாநில அரசும் ரெயில் சேவையை நிறுத்துமாறு கூறவில்லை என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா தில்லியில் செய்தியாளாகளிடம் தெரிவித்துள்ளதாவது:
சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் கோவிட் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகலாம்
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக காலை 11 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 என்னென்ன அம்சங்கள் இருக்கு?
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போனை தென்கொரிய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்மார்ட் போனானது 120 ஹெர்ட்ஸ் இன்ஃபினிட்டஓ அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ளஸ் உடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் எலெக்ட்ரிக் ஹைபிரிட் டிராக்டர் ஐடிஎல் அறிமுகப்படுத்தியது
டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஹைபிரிட் டிராக்டர் மாடலை இண்டர் நேசனல் டிராக்டர்ஸ் லிமிடெட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சோலிஸ் யான்மர் சீரிஸில், சோலிஸ் ஹைபிரிட் 5015 புதிய டிராக்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சோலிஸ் ஹைபிரிட் 5015 என்ற பெயரில் இந்த டிராக்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியாக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சர்வதேச சந்தையில் கோடியாக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதலிடம்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. அதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (865 புள்ளி) விராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிகரலாபம் 17 சதம் அதிகரிப்பு
முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் ஜனவரி மார்ச் வரையிலான நான்காவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகரலாபம் மார்ச் காலாண்டில் 17.47% அதிகரித்து, ரூ.5,076 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏப்.23ல் 75 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்
சியோமி நிறுவனம் தனது புதிய Mi QLED TV மாடலை வரும் ஏப்ரல் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்களாவது:
எம்ஜி ஹெக்டார் சீரிஸ் விலை மீண்டும் உயர்ந்தது
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டார் சீரிஸ் மாடல்கள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவிட் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள், ஆன்லைன் முறையில் மே மாதம் முதல் நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சிறப்பு விமான சேவை மத்திய அரசு அறிவிப்பு
புது தில்லி, ஏப்.12 இந்தியா இலங்கை இடையே இரு தரப்பு சிறப்பு சர்வதேச பயணிகள் விமான சேவையை தொடங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
50 கோடி பயனர்களின் தகவல்கள் திருட்டு லிங்க்டுஇன் நிறுவனம் விளக்கம்
புது தில்லி, ஏப்.12 முன்னணி சமுக வலைதளமாக இருக்கும் லிங்க்டுஇன் தளத்தில் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு டார்க் வெப் தளத்தில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஜம்மு, ஏப். 12 கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாட்டில் கோவிட் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை ரெம்டெசிவர் ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
புது தில்லி, ஏப்.12 உள்நாட்டில் ரெம்டெசிவர் ரெம்டெசிவர் ஊசிகளின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பாதுகாப்பான பயணத்திற்கு கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்ற ரயில்வே வேண்டுகோள்
சென்னை, ஏப்.12 தெற்கு ரயில்வே நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது. தற்போது, 75 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட மெயில் / எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களை இயக்குவதோடு, தெற்கு ரயில்வே சென்னை புறநகர் EMU / MEMU சேவைகளையும் இயக்குகிறது.
மின்சார வாகனங்கள் தயாரிப்புக்காக மஹிந்திரா நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு
மும்பை, ஏப். 12 சந்தையில் முன்னிலை பெறுவதற்காக, எலெக்ட்ரிக் வாகன துறையில் பல ஆயிரம் கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்425ஜி இந்திய சந்தையில் களமிறக்கம்
புது தில்லி, ஏப்.12 சாம்சங் நிறவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.398 விலை சலுகையினை நீட்டித்தது
சென்னை, ஏப்.12 பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து வழங்கிய சலுகையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை வழங்க அதானி குழுமம்-பிளிப்கார்ட் இடையே கூட்டு
மும்பை, ஏப்.12 பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம், அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பஜாஜ் டோமினார் பைக் மீண்டும் விலை உயர்வு
மும்பை, ஏப். 10 பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மோட்டார் சைக்கிள்களின் விலைகளை இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நடப்பாண்டில் நேரடி வரி வசூல் 5 சதம் வளர்ச்சி
புது தில்லி, ஏப். 10 நடப்பு 2020-21ம் ஆண்டில் நேரடி வரி விதிப்பின் கீழ் மத்திய அரசு சுமார் ரூ.9.45 லட்சம் கோடி அளவிலான நிதியை வசூல் செய்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது.
ஐசிசி விருது பட்டியல் புவனேஷ்வர் குமார்
மும்பை, ஏப்.10 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
ஐபிஎல் போட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது ஜியோ
மும்பை, ஏப்.10 ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ஐபிஎல் சார்ந்த சிறப்பு Jio சலுகைகளை அறிவித்து இருக்கிறது.