CATEGORIES
Kategoriler
பவர்ஃபுல் கோனா என் கார் ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு
புது தில்லி, ஏப்.28 அதிசெயல்திறன் மிக்க கோனா என் கார் மாடலை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனம் விரைவில் அறிமுகம்
புது தில்லி, ஏப்.28 சியோமி நிறுவனம் 200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட் போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேமரா சென்சார் கொண்டிருக்கும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜூலை 31 வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, ஏப்.28 ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
கார்மின் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம்
புது தில்லி, ஏப்.28 இந்திய சந்தையில் கார்மின் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட் 375 வாட்சை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இரண்டு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி வழங்கியது
புது தில்லி, ஏப்.28 வங்கி சாரா நிதி நிறுவனமான, அரோஹன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் மற்றும் முன்னணி பால் நிறுவனமான, டோட்லா டெய்ரி ஆகியவை, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, செபி அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மார்ச் காலாண்டில் ரூ.603 கோடியாக நிகர லாபம் ஈட்டியது
தூத்துக்குடி, ஏப்.28 தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.603.33 கோடியை நிகரலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கோவிட் மருந்து மற்றும் ஆக்ஸிஜன்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கு கட்டணம் ரத்து: அதானி போர்ட்ஸ்
மும்பை, ஏப்.28 கோவிட் மருந்து மற்றும் ஆக்ஸிஜன்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கு கட்டணம் ரத்து செய்யப்படும் என அதானி போர்ட்ஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனம் உதவி: டிம் குக்
புது தில்லி, ஏப்.28 கோவிட் தொற்றின் 2ம் பரவல் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆப்பிள் நன்கொடை அளிக்க ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
1.50 கோடி கோவிட் தொற்று தடுப்பூசிகள் தமிழக அரசு கொள்முதல் செய்ய உத்தரவு
சென்னை, ஏப்.28 முதல் கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் ஜூலை மாத இறுதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக அச்செய்தியில் தெரியவந்துள்ளது.
மார்ச் காலாண்டில் டெக் மஹிந்திராவின் லாபம் 17.4 சதம் வீழ்ச்சி
இந்திய ஐடி துறையில் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் வருமானத்தில் கணிசமான உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில் லாபத்தைப் பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது
மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும், தேர்தல் முடிவுக்குப் பின்னரும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று அதிகரிப்பால் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு வாரம் மூடல்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எம்ஜி மோட்டார்ஸ் இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் தவித்து வந்த நிலையிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுத் தற்போது தவிர்க்க முடியாத நிறுவனமாக உயர்ந்துள்ளது.
புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் தீபாவளி பண்டிகையில் அறிமுகம்?
புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ப்ரீமியம் ஸ்கூட்டர் வருகிற தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பியோ ஜியோ தெரிவித்துள்ளது. இது குறித்து பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டைகோ கிராஃபி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மாதவிடாய் காலத்திலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்: சுகாதாரத்துறை
கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன் தங்கள் வீடுகளிலேயே முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிராணவாயு டேங்கர்களின் பற்றாக்குறையை போக்க 20 கிரையோஜெனிக் டேங்கர்களை மத்திய அரசு இறக்குமதி செய்தது
நாட்டில் ஏற்பட்டுள்ள பிராணவாயு டேங்கர்களின் பற்றாக் குறையை எதிர்கொள்வதற்காக, 10 மெட்ரிக் டன் மற்றும் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 கிரையோஜெனிக் டேங்கர்களை மத்திய அரசு இறக்குமதி செய்து, மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது.
நாட்டில் கோவிட் 2ம் அலை பரவல் எதிரொலி வெளிநாடுகளுக்கு சில சேவைகளை மாற்ற ஹெச்சிஎல் முடிவு
தற்போது நாட்டில் கோவிட் பரவல் அதிவேகம் எடுத்திருக்கும் நிலையில், தொழில் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐடி உள்ளிட்ட சில துறைகளில் வீட்டில் இருந்து பணியாற்றுவது வழக்கமாக மாறியுன்னது. எனினும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சில வாடிக்கையாளர் சேவைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் தொற்று தடுப்பூசி விலையை குறைக்க சீரம், பாரத் பயோடெக்கிடம் அரசு வேண்டுகோள்
கோவிட் தடுப்பூசி விலை நிர்ணயம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றின் விலையை குறைக்குமாறு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கோவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பியது ரயில்வே
கோவிட் 2வது அலையில், தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கோவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பும்படி பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ரயில்வேயிடம் கோவிட் சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்ட 4000 ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன. 9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த கோவிட் சிகிச்சை பெட்டிகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
பயணிக்க கூட்டம் அலை மோதுவதால் அமெரிக்கா செல்லும் விமான கட்டணம் அதிகரிப்பு?
வாஷிங்டன், ஏப்.26 இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா-இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவை தற்போது அதிக கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு மார்ச் மாதத்தில் ரூ.89,100 கோடியாக குறைவு
மும்பை, ஏப்.26 கடந்த மார்ச் மாதத்தில் இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடு ரூ.89,100 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையில் வார நாட்களில் கூடுதலாக 21 மின்சார ரயில்கள் இயக்கம்
சென்னை, ஏப்.26 கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால் ஏற்கனவே சென்னையில் குறைந்த அளவிலான மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா முடிவு
புது தில்லி, ஏப்.26 கோவிட் தொற்று தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள், உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி
சென்னை, ஏப்.26 தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கிட அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்ஸின் தடுப்பூசி பயன்பாட்டு காலத்தை அதிகரிக்க டிசிஜிஐயிடம் பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை
புது தில்லி, ஏப்.26 கோவாக்ஸின் தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 24 மாதங்களாக அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
புது தில்லி, ஏப்.26 நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
உற்பத்தியில் 1.9 கோடி யூனிட்களை கடந்தது வெஸ்பா
மும்பை, ஏப்.26 இத்தாலி நாட்டு இருசக்கர நிறுவனமான வெஸ்பா நிறுவனம் உற்பத்தியில் 1.9 கோடி யூனிட்களை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் கப்பல்களை யூனியன் பிரதேச தீவுகளுக்கு அனுப்பியது இந்திய கடற்படை
புது தில்லி, ஏப்.26 கோவிட்-19க்கு எதிரான பேராட்டத்தின் ஒரு பகுதியாக, தெற்கு கடற்படை கட்டுப்பாடு மண்டலத்தில் உள்ள இந்திய கடற்படை கப்பல்கள், லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்துக்கு உதவ ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' திட்டத்தை மேற்கொண்டன.
140 மெட்ரிக் டன் திரவ பிராணவாயுவை கொண்டு செல்கிறது ரயில்வே
புது தில்லி, ஏப்.26 போர்க்கால அடிப்படையில், இந்திய ரயில்வே, அடுத்த 24 மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிராணவாயுவை விநியோகிக்கவிருக்கிறது.
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்
புது தில்லி, ஏப்.23 கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது.