CATEGORIES
Kategoriler
அடல் ஓய்வூதிய நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்தது
தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 13 ஆண்டுகளுக்குப்பிறகு நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்து விட்டதாக ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம் அறிவித்தது.
மெட்லைஃப் நிறுவனத்தை வாங்கியது பார்ம்ஈஸி
புது தில்லி, மே 26 மெட்லைஃப் நிறுவனத்தை மும்பையை சேர்ந்த பார்ம்ஈஸி நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மெட்லைஃப் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் மருந்து விற்பனை சிறப்பைப் பெறுகிறது பார்ம்ஈஸி நிறுவனம்.
வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஐந்தாவதாக இருக்கும்: எஸ்பிஐ ஆய்வு
மும்பை, மே 26 கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் பொரு ளாதாரம், 1.3 சதம் வளர்ச்சி காணும் என எஸ்பிஐ அறிக்கை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், ஐந்தாவதாக இந்தியா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்தவித தயக்கமும் தேவையில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்
பிரஸ்சல்ஸ், மே 26 பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கோவிட் தொற்று தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2 கோடி டோஸ் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் இலக்கு
புது தில்லி, மே 26 நாட்டில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை தற்போது அதிகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து பாரத் பயோடெக், சிரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா ஆகிய மருந்து நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை தயாரித்து விநியோகித்து வருகின்றன.
நடப்பு ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும்: ஆய்வறிக்கையில் தகவல்
புது தில்லி, மே 25 நடப்பு ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என முதலீட்டு தகவல் மற்றும் கடன் தரநிர்ணய முகமையான இக்ரா தனது ஆய்றிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவாக்ஸின் அவசரகால பயன்பாட்டுக்கு கூடுதல் தகவல் தேவை: உலக சுகாதார அமைப்பு
அவசர கால பயன்பாட்டுக்கான தடுப்பூசி பட்டியலில் கோவாக்ஸின் தடுப்பூசியை சேர்க்க, பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கூடுதல் தகவல் தேவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சீனாவுக்கான பொறியியல் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 128 சதம் அதிகரிப்பு
புது தில்லி, மே 25 கடந்த நிதியாண்டில், சீனாவுக்கான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 128 சதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆக்ஸிஜன் சிகிச்சைக்கும், மியூகோர்மைகோசிஸ் பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை - எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா
புது தில்லி, மே 25 கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடையும் நோயாளிகளுக்கு பொதுவாக ஏற்படும் பூஞ்சை தொற்றுகளில் மியூகோர் மைகோசிஸ்-ம் ஒன்று. இந்த பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் இது தொற்று நோய் அல்ல. இது கொவிட்-19 போல், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மத்திய தொழிலாளர் அமைச்சகம் தகவல்
நாடுமுழுவதும் கோவிட் தொற்றின் 2-வது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
ஸ்புட்னிக் உற்பத்தி ஆகஸ்ட்டில் தொடங்கப்படும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தகவல்
கோவிட் தொற்று தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக் உற்பத்தி இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தவிர தற்போது 2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பைசர் பயோஎன்டெக் தடுப்பூசி 2ம் டோஸ் 88 சதம் செயல்படுகிறது: பிரிட்டன் தகவல்
லண்டன், மே 24 தற்போது இந்தியாவில் வேகமாக பரவும் கோவிட் மற்றும் பிரிட்டனில் காணப்படும் வகையை எதிர்ப்பதில் இரண்டு டோஸ் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது என பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சமுத்திர சேது திட்டத்தின் கீழ் கோவிட் நிவாரண பொருட்கள் கடற்படை கப்பல்கள் கொண்டு வந்தது
சமுத்திர சேது-2 திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ் த்ரிகண்ட், ஜலஸ்வா ஆகிய இரு போர்க்கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்து கொவிட் நிவாரண மருத்துவ பொருட்களை இன்று இந்தியா கொண்டு வந்தன. சமுத்திர சேது -2 திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து கொவிட் நிவாரணப் பொருட்களை இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் தாய்நாடு கொண்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு ஜூன் 1 முதல் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்?
ஐதராபாத், மே 24 ஐதராபாத்தை சேர்ந்த இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு உறுப்பினர்களுடன் பாரத் பயோடெக் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் ரச்சஸ் எல்லா வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் ஐபோன் 12 முதலிடம் பிடித்தது: ஆய்வு
புது தில்லி, மே 24 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் சர்வதேச சந்தையில் புது அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.
எம்எஸ்எம்இ நிறுவன வேலைவாய்ப்புக்கான இணையதளத்தில் 4.7 லட்சம் பேர் விண்ணப்பம்
புது தில்லி, மே 22 எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை MSME SAMPARK வாய்ப்புக்கான இணையதளத்தில் 707 பணியிடங்களுக்கு 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்து காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நான்காவது காலாண்டில் எஸ்பிஐ வங்கி லாபம் 80 சதம் உயர்வு
மும்பை, மே 22 பாரத ஸ்டேட் வங்கி நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 80 சதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்காள தேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவை முந்தியது
புது தில்லி, மே 22 இந்தியாவில் தனிநபர் வருமானம் 1,947 டாலராக இருக்கும் நிலையில், வங்காளதேசத்தில் 2,227 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்தை தயாரிக்க 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி
புது தில்லி, மே 22 கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருந்தைத் தயாரிப்பதற்கான உரிமத்தை மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
45 லட்சம் பயணிகளின் தரவுகள் கசிந்தது ஏர் இந்தியா நிறுவனம் தகவல்
புது தில்லி, மே 22 ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணம் செய்த பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பத்து வருட வாடிக்கையாளர் தரவு கசிந்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவிட் நிவாரண நிதி ரூ.10 கோடி வழங்கியது ஹுண்டாய் நிறுவனம்
தமிழகத்தில் கோவிட் தொற்றை எதிர்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களை ஹூண்டாய் பவுன்டேசன் நிதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு சலுகை நிசான் அறிவித்தது
கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ.75 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குவதாக நிசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவற்றில் ரூ.20 ஆயிரம் தள்ளுபடி, ரூ.50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ.5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1 வரை மட்டுமே எஸ்பிஐ வங்கி செயல்படும்
வரும் மே 31ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே எஸ்பிஐ வங்கி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த ஏப்ரலில் 2493.26 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி
கடந்த மாதம் உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் அறிக்கை மத்திய அரசு வெளியிடப் பட்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவை அடுத்த வருடம் நிறுத்தம்: மைக்ரோசாப்ட்
தனது பிரவுசர் சேவைக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் கோவிட் தடுப்பூசியை தயாரிக்க பையாலாஜிகல்-இ-ஜான்சன் & ஜான்சன் இடையே ஒப்பந்தம்
ஹைதராபாத்தை மையமாக கொண்டு கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதலாவதாக பாரத் பையாடெக் பார்மா நிறுவனம் கோவாக்ஸின் தடுப்பூசியை தயாரித்தது.
கோவிட் நிவாரணத்துக்கு அமெரிக்காவின் பங்களிப்பு இந்தியாவிற்கு உதவி ரூ.7500 கோடியை எட்டுகிறது
நாட்டில் கோவிட் தொற்று சவாலை சமாளிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவி இம்மாத இறுதிக்குள் ரூ.7500 கோடியை எட்டும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
கிளாக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிகல்ஸ் 4வது காலாண்டில் ரூ.14.33 கோடி லாபம் ஈட்டியது
முன்னணி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டில் ரூ.14.33 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: 2020-21வது நிதியாண்டின் ஜனவரி மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.813.75 கோடியாக இருந்தது.
5ஜி அலைக்கற்றைக்கும், கோவிட் பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: தொலைத்தொடர்பு துறை விளக்கம்
5ஜி செல்பேசி கோபுரங்களின் சோதனையால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவியிருப்பதாக தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதாக தொலைத் தொடர்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இது குறித்து தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: