CATEGORIES
Kategoriler
அம்ஃபோடெரிசின் பி மருந்தின் இருப்பை மத்திய அரசு அதிகரிக்க நடவடிக்கை
புது தில்லி, மே 13 கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் மியூ கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோயின் சிகிச்சையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அம்ஃபோடெரிசின் பி என்ற மருந்தின் தேவை ஒரு சில மாநிலங்களில் அதிகரித்துள்ளது.
100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாயிலாக 6,260 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்
புது தில்லி, மே 13 பல்வேறு தடைகளையும் தாண்டி நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய ரயில்வே தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வெளிநாட்டு பேமெண்ட் சேவைக்குள் நுழைந்தது கூகுள் பே
புது தில்லி, மே 12 இந்தியாவின் முன்னணி பேமெண்ட் சேவை தளமாக விளங்கும் கூகுள் பே, நாட்டின் போன்பே, பேடிஎம் ஆகியவற்றுடன் கடுமையாகப் போட்டிப்போட்டு வரும் நிலையில், தனது சேவையை அடுத்த கட்டத்திற்கு விரிவாக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதி மூலம் ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க திட்டம்: உள்துறை விளக்கம்
புது தில்லி, மே 12 ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 18 வயது மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு போதிய அளவில் இல்லாததால் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி கடந்த ஏப்ரலில் 13.71 லட்சம் டன்னாக அதிகரிப்பு
புது தில்லி, மே 12 கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 13.71 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் கூட்டாக தயாரிக்க அமெரிக்கா விருப்பம்
புது தில்லி, மே 12 இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு எதிரான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தாரின் தடுப்பூசியை கூட்டாக தயாரிக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட அனைவரும் இணைந்து நிற்போம்
எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தடுப்பூசி விலை அதிகரிப்பு பெங்களூரில் அதிகபட்சமாக ரூ.1500 நிர்ணயம்
புது தில்லி, மே 11 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலையை அதிகபட்சமாக விற்பனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கோவிட் தொற்று ஊரடங்கால் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, மே 11 பொது முடக்க காலத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதமின்றி செலுத்த, 31ம் தேதி வரை, தமிழக மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசும் பயன்படுத்தலாம்: நிதியமைச்சகம்
புது தில்லி, மே 11 கோவிட் தடுப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடி நிதியை மாநிலங்களுக்கான பகிர்வு என்ற தலைப்பின் கீழ் மத்திய அரசு பயன்படுத்துவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட்டை சமாளிக்க ரூ.7,500 கோடி அமெரிக்கா இந்தியாவுக்கு மருத்துவ உதவி
புது தில்லி, மே 11 இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து மருத்துவ உதவிகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்தியாவில் உருமாறிய கோவிட் பரவல் உலக சுகாதார அமைப்பு கவலை
நியூயார்க், மே 11 இந்தியாவில் பரவிவரும் பி-1617 வகை உருமாற்ற கோவிட் தொற்று கவலையளிப்பதாக என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் கோவிட் 2வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
120 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் ஜவகர்லால் நேரு மற்றும் மங்களூர் துறைமுகம் கையாண்டன
இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகமான ஜவகர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகம், நான்கு மருத்துவ தரத்திலான ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 80 மெட்ரிக் டன் மொத்த கொள்ளளவுடன் கூடிய கிரையோஜெனிக் களன்களை கையாண்டது. ஒவ்வொரு கொள்களனிலும் தலா 20 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்டில் நிரப்பப்பட்ட இந்த ஆக்சிஜன் கொள்கலன்கள் திங்கள்கிழமை இந்தியாவை வந்தடைந்தன.
நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.15,662 கோடிக்கு மருந்து விற்பனை
புது தில்லி, மே 10 நாட்டில் கோவிட் தொற்றின் 2ம் அலை மிகவும் மோசமான தாக்கியுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் இந்தியாவில் மருந்து விற்பனை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தில்லியில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை அமைத்தது இஎஸ்ஐசி
புது தில்லி, மே 10 மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இஎஸ்ஐசி, தில்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள தனது இரு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. நிமிடத்துக்கு 440 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலை, பரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் அதிகரிப்பால் மாருதி சுசூகி ஆலை தற்காலிகமாக மூடல்
புது தில்லி, மே 10 நாட்டில் கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால் மாருதி சுசூகி ஆலை வரும் 16-ம் தேதி வரை மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
17 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலகளவில் சாதனை
புது தில்லி, மே 10 நம் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 17 கோடியைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2டிஜி தடுப்பு மருந்து நாட்டில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்: டிஆர்டிஓ தகவல்
புது தில்லி, மே 10 கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக்கூடிய, 2டிஜி என்ற மருந்து, ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
10 பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை: டபிள்யூஎச்ஓ கவலை
ஜெனீவா, மே 10 முன்னேறிய நாடுகளில் கோவிட் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (பிள்யூ எச்ஓ கவலை தெரிவித்துள்ளது.
சீன தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
சீனா தயாரித்துள்ள கோவிட் தடுப்பூசியான சினோ பார்மை , அவசரகாலத் தேவைகளுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளது.
மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஆர்பிஐ வலியுறுத்தல்
தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங் கள், இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்குக் கடனளிக் கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
நாடு முழுவதும் 4,700 படுக்கைகளுடன் கோவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் தயார்: ரயில்வே
நாடு முழுவதும் 17 ரயில் நிலையங் களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப்பெட்டிகள் பயன்பாட் டில் உள்ளதாக ரயில் வேத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு விமான பயணியர் வருகை சரிவு: இக்ரா
கடந்த ஏப்ரலில் மாதத்தில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை காரண மாக, உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, இக்ரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஊழியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் மத்திய அரசு கடைப்பிடிக்க உத்தரவு
ஊழியர்களின் வருகைப் பதிவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து துறைச் செயலர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய பணியாளர் நலன்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி நம்பகமானது ரஷ்ய அதிபர் புடின் விளக்கம்
புது தில்லி, மே 7 கோவிட் தொற்றுக்கு எதிராகப் போராடக்கூடிய ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டின் தயாரிப்பான கோவிட் தொற்றுக்கு எதிராக 79.4 சத செயல் திறனைக் கொண்ட ஸ்புட்னிக் லைட் ஒற்றை தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது.
முதல்வரானார் மு.க.ஸ்டாலின்
புதிய தலைமைச் செயலர் இறையன்புசிறப்புத் திட்டத்திற்கு ஷில்பா பிரபாகர்களநிலவரத்தை மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நாட்டின் கோவிட் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக விண்வெளி துறை முன்வந்துள்ளது: ஜிதேந்திர சிங்
புது தில்லி, மே 7 கோவிட் தொடர்பான ஆதரவை, குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜனை, வழங்க விண்வெளிதுறை முன்வந்துள்ளது என்று அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை
புது தில்லி, மே 7 சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் சுமார் 23 கோடி பேர் தினசரி வருமானம் ரூ.375 ஈட்டுகின்றனர்: ஆய்வு
புது தில்லி, மே 7 கோவிட் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியா அதிலிருந்து மீள்வது சவாலான காரியமாக எழுந்துள்ள நிலையில், அதற்குள் அடுத்த சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.