CATEGORIES
Kategoriler
கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்
கடன் வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று-நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதிச் சேவை செயலாளர் எம். நாகராஜு தெரிவித்தார்.
உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள் (படம்) பயன்படுத்தப்பட உள்ளன.
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் மீது விவாதம்
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடத்த வலியுறுத்தி, இரு அவைகளின் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
வயநாடு மக்களின் மறுவாழ்வு: மத்திய அரசு பாராமுகம்
கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான மாநில அரசின் நிதித் தேவைகள் மீது மத்திய அரசு தொடர்ந்து பாராமுகமாக உள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்ற கூட்டுக் குழு
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு புதன்கிழமை (நவ.27) மீண்டும் கூடுகிறது.
நாட்டின் சிறந்த மாற்றத்துக்கு உதவிய அரசமைப்புச் சட்டம்
'இந்தியா இன்று துடிப்பான ஜனநாயக நாடாகவும், புவிசார் அரசியல் தலைமையாக உருவெடுத்துள்ளது. இந்த மாற்றத்துக்கு அரசமைப்புச் சட்டமே உதவியது' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
கேரள விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரத்தில் இருந்த கூடாரத்திற்குள் சரக்கு வாகனம் புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
அசோக் கெலாட்டின் உதவியாளரை காவலில் வைத்து விசாரிக்க முடிவு
தில்லி காவல்துறையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் முன்னாள் சிறப்புப் பணி அலுவலர் லோகேஷ் சர்மாவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
2022-க்கு முந்தைய ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைகளுக்கு வங்கி உத்தரவாதம் அவசியமில்லை: மத்திய அரசு
2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஏலங்களில் வாங்கப்பட்ட அலைக்கற்றை கட்டணங்களுக்கு வங்கி உத்தரவாதங்களை சமர்ப்பிக்கவேண்டியதில்லை என்று மத்திய அமைச்சரவை விலக்கு அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: பேரவை எதிர்க்கட்சித் தலைவருடன் பெற்றோர் சந்திப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியை அந்த மருத்துவரின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
விரைவில் நிரப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் (எஸ்ஐசி) காலியாகவுள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவர் கைது
சிறையில் அடைக்கப்பட்டதால் போராட்டம் - வன்முறை
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா
மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுவாரஸ்ய நிமிஷங்கள்...
அரசமைப்பு தினத்தையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றும் முன்பு மைய மண்டபத்தில் சுவாரஸ்யமான சில சந்திப்புகளைக் காண முடிந்தது.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் தொடர் கனமழை
ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது
6 மாநிலங்களவை இடங்களுக்கு டிச.20-இல் இடைத்தேர்தல்
அந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தென் பெண்ணையாறு நீர்ப் பங்கீடு; நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தென் பெண்ணையாறு நீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக தனித் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நிலவர அறிக்கையை இரண்டு வாரங்களில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
முதல்வர் தலைமையில் முகப்புரை வாசிப்பு
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, அதன் முகப்புரையிலுள்ள வாசகங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாசிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு பேரிடர் நிதி ரூ.50 கோடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்து தணிப்புகளுக்காக ரூ. 1,000 கோடியை முன்மொழிந்து ஒப்புதல் அளித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொது வாழ்வில் உள்ளவர் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்
பொது வாழ்வில் உள்ளவர் நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.
வேதங்கள் ஏன் அவசியமானவை?
கண்ணுக்குப் புலப்படாமல் மறைவாக இருந்தாலும் பெருமரத்தைத் தாங்குவது வேர். அதே போல வேதம் இந்த மண்ணின் அறிவுச் செல்வமாக நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நமது முன்னோர்களின் அனுபவப் பேரறிவு 'மறை' என வேதங்களுக்குப் பெயர் கொடுத்தது.
வங்கக் கடலில் இன்று உருவாகிறது 'ஃபென்ஜால்' புயல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகா்கிறது. இருப்பினும், இது மேலும் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும்.
காவல் ஆய்வாளர் மீதான துறை நடவடிக்கை ரத்து
காவல் ஆய்வாளரிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்ட நிலையில், அவர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
தமிழகத்தில் ரூ. 27 கோடியில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு
தமிழகத்தில் ரூ. 27.34 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பள்ளி மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து
பள்ளியில் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிக் குழந்தைகளிடம் துணிச்சலை வளர்ப்பதே ஆசிரியர்களின் முதல் பணி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஜப்பானில் நவ. 30-இல் பாரதி விழா
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஜப்பானில் நவ. 30-ஆம் தேதி பாரதி விழா நடைபெறுகிறது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ஆவது அலகின் மின் உற்பத்திக்கான பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவர்களுடன் மக்கள் நல்வாழ்வுச் செயலர் பேச்சு
உயரதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவர் சங்கத்தினருடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு பேச்சுவார்த்தை நடத்தினார்.