CATEGORIES
Kategoriler
சென்னை துறைமுகத்தில் முறைகேடு; 3 இடங்களில் சிபிஐ சோதனை
சென்னை துறைமுகத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துச் செயலர் உறுதி
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி உறுதியளித்தார்.
இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை: சட்டப்படி நடவடிக்கை
பாடகி இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றத்துக் கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் தொடர் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி செல்வதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு
‘சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான அரசு நிா்வாகம்-நாடாளுமன்றம்-நீதித் துறையின் பொறுப்பு’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகிக்காது
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகித்துக்கொள்ளாது என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்
உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வர்த்தக அணி வலியுறுத்தியுள்ளது.
சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
டெல்டா மாவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செள்ளை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'
சென்னை, நவ. 25: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை, நெதர்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு
குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு
80,000-மீண்டும் எட்டிய சென்செக்ஸ்
அந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. இதனால் முதன்மை நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்தது.
கார் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் கார்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது.
ரஷிய ஆதரவாளர் 'அதிர்ச்சி' முன்னிலை
புகரெஸ்ட், நவ. 25: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜார்ஜெஸ்கு எதிர்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தார்.
இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினர் பேரணி
இஸ்லாமாபாத், நவ. 25: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்றனர்.
6 சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்’
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞர் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
'விரைவில் லெபனான் போர் நிறுத்தம்'
லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹெஸாக் (படம்) தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
டெஹ்ரான், நவ. 25: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்ததற்குப் பதிலாக, அவருக்கு மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று ஈரான் தலைமை மத குரு அயதுல்லா கமேனி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் ஹிஸ்புல்லா ஏவுகணை மழை
பெய்ரூட், நவ.25: இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதப் படையினர் சுமார் 250 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.
ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா
சென்னை, நவ. 25: ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
பும்ராவிடம் பணிந்தது ஆஸ்திரேலியா
பெர்த் டெஸ்ட்டில் இந்தியா சாதனை வெற்றி
அரசமைப்பு முகப்புரையிலுள்ள 'சமதர்மம், 'மதச்சார்பின்மை'-க்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள 'சமதர்மம்', 'மதச்சார்பின்மை' ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
கொல்கத்தா மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை
புது தில்லி, நவ.25: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை காவல் துறை சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ் ஐடி) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு ஆசியாவில் போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு
ரோம், நவ. 25: மேற்கு ஆசியாவில் உடனடி போர் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இரு தனி நாடு தீர்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மதிப்பதில்லை
மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில்லை என்றும் மிக முக்கியப் பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மறுக்கிறார்கள் என்றும் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினார்.
ஆயுள் காப்பீடு மூலம் ரூ.8,135 கோடி ஜிஎஸ்டி: மத்திய அரசு
கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ஆயுள் காப்பீடு மூலம் ரூ.8,135 கோடி, மருத்துவக் காப்பீடு மூலம் ரூ.8,263 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்ததாக மத்திய அரசு தெரிவித்தது.