CATEGORIES
Kategoriler
மத்திய குழுத் தீர்மானமே “இறுதி முடிவு"
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசியத்தில் சாதிக்கும் சிலாபம் மாணவர்
சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் பாடசாலைக்கான சிறந்ததொரு விளையாட்டு மைதானம் இல்லாமையினாலும் கூட இப்பாடசாலை மாணவர் அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை நிலை நாட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: தோற்றது லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை(14) நடைபெற்ற நொட்டிங்ஹாம் பொரெஸ்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்றது.
“2 நாட்களில் இராஜினாமா”
\"அடுத்த 2 நாட்களில் புதுடெல்லி முதல்வர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறேன்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் சுட்டதில், 14 பேர் கொல்லப்பட்டனர்.
விவசாய நிபுணர்களின் அமர்வை ஷமுன்னெடுக்கிறது பவர்
விவசாயத்தில் நைதரசன் பாவனையினால் ஏற்படும் சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் கண்டறியப்பட்ட விடயங்களின் பிரகாரம், நிலைபேறான வகையில் நைதரசன் முகாமைத்துவத்துக்கான அவசர தேவை என்பது இலங்கைக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
'பைசா'வுக்கு இறுதி சடங்கு
மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
கைத்துப்பாக்கியை காண்பித்து கொள்ளை
புத்தளம்-மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை(15) அதிகாலை இடம்பெற்றதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவரின் சடலம் மீட்பு
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹாகொட ஜயந்தி வீதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபரொருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (15) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர் மட்டக்களப்புக்கு விஜயம்
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகச் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஆலோசகரும், தென்கிழக்காசிய நாடுகளுக்கான சுதந்திர தேர்தல் ஆலோசகருமான பிரித்தானியாவைச் சேர்ந்த ஜகே பர்க்கர், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சனிக்கிழமை (14) மாலை விஜயத்தை மேற்கொண்டார்.
டின்சின் த.வி. அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல்
பொசுவந்தலாவைடின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொள். பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
"ரணிலின் வெற்றி உறுதி
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.
“கிழக்கில் தமிழர்கள் அழிந்து போகும் ஆபத்து”
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாது அழிந்து போகக் கூடிய ஆபத்து இருக்கிறது ஆகவே இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால், தமிழர் தேசம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் தெரிவித்தார்.
சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வரும் காலம் நெருங்குகிறது
இந்த நாட்டில் இனியும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம மந்திரியாக வர முடியாது என்ற கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் இறைவன் உதவியால் எங்கள் அரசியல் சரித்திரத்தில் சாதித்துக் காட்டுவோம்.
தக்காளிச்சாறு நிறுவன உரிமையாளருக்கு சிறை
தக்காளிப்பழ சாறு கலவையில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறி மனித சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பென்சோயிக்கமிலம், செயற்கை நிறமூட்டி கொண்டு தயாரிக்கப்பட்ட கலவையைப் பாவித்த சிற்றுண்டிச் சாலை உரிமையாளர், விநியோகித்தர் மற்றும் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக சுகாதார பரிசோதகரால் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
109 ஆண்டுகளுக்குப் பிறகு ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
கடந்த 109 வருடங்களுக்கு முன்னர், பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணையின் பின்னர் கொல்லப்பட்ட கெப்டன் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
"மாற்றங்களுக்காக பலிக்கடாக்களாக்காதீர்"
பொருளாதாரத்தை மீதப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாகக் கூறும் தேசிய மக்கள் சக்தி, தங்களது அரசியல் மேடைகளுக்காகக் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நல்லடக்கமா? எரிப்பா? நாமே எதிர்த்தோம்
முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமியக் கலாசாரம் மற்றும் மத உரிமைக்காக அன்று ஐக்கிய மக்கள் சக்தியே முன்னின்றது.
“பெருந்தோட்ட மக்களை நிச்சயம் மேம்படுத்துவோம்”
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம். அவர்களுக்குரிய காணி உரிமை நிச்சயம் வழங்கப்படும்.
அனுர, சஜித் அணியில் இருவர் ரணிலுக்கு ஆதரவு
வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இருவரும், வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒருவரும், சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
"பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை"
ஜூலி கொசெக் தெரிவிப்பு
"இரட்டை கோபுரத் தாக்குதல்’ விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா
அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அதிநவீன தொழிநுட்ப முறையில் மருத்துவர்கள் புதிய சாதனை ப
அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஆஸி. அமைச்சரவையில் முதல் இந்திய நபர்
அவுஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியதையடுத்து, அந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
நண்பர்களின் சமரில், தெல்லிப்பளை அணி வென்றது
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் அணிக்கும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணிக்குமிடையிலான நண்பர்களின் சமர் என வர்ணிக்கப்படும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி வென்றது.
இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சௌதாம்டனில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் விவாதத்தில் ல் வெற்றி யாருக்கு?
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடந்த ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பறக்கும் கப்பல் சேவை
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் பறக்கும் கப்பல் (Air-Ship) சேவையை ஆரம்பிப்பதற்குக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கல்லடிப்பட்ட சிறுவனை தேடிச்சென்ற ஷிரந்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“எமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை”
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.