CATEGORIES
Kategoriler
போதைப்பொருள் பாவனை தடுப்பு பதாகைகள் திறந்து வைப்பு
சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி சம்பந்தமான முறைப்பாடுகள் மற்றும் அதன் பாதிப்பிற்கான உளவளத்துனை, சிகிச்சை, புனர்வாழ்வு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளவேண்டிய நிறுவனங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களைக் காட்சிப்படுத்தும் பதாகைகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.முரளிதரனால் திங்கட்கிழமை (09) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஆளுநரை சந்தித்தது தேர்தல் கண்காணிப்பு குழு
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
"பாதுகாப்பு சவால்களை சந்திக்கும்”
13ஆவது திருத்தம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டால்
ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு
'மஹபொல' அதிகரிப்பு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 'மஹபொல' மற்றும் மாணவர் உதவுதொகை தவணைக் கட்டணங்கள் 2015 தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை.
தரம் 5 வகுப்புகளுக்குத் தடை
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் அல்லது மேலதிக, பிரத்தியேக வகுப்புகளை நடத்துவது புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
திருமணமாகாத பெண்ணும், பக்கத்து வீட்டு தந்தையும் கைது
ஓட்டோவில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு:
"செய்திகள் பொய்யானவை”
ஜனாதிபதி ஊடகப்பிரவு அறிக்கை
விபத்தில் இளைஞனின் பாதம் துண்டிப்பு
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞனின் பாதம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க கோரிக்கை
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளை தமிழ் வேட்பாளர் பெறுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.1,350
“வழக்குகள் வாபஸ்\"
தேவையற்ற அச்சத்தை தடுக்க நடவடிக்கை
\"குரங்கு அம்மை தொற்று குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை தடுக்க வேண்டியது அவசியம்\" என மாநில அரசிற்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஹசீனாவை நாடு கடத்த ஏற்பாடு
பங்களாதேசில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
கைகோர்க்கும் இந்தியா
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா, சீனா உடன் இணைந்து இந்தியா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக சிலம்பம் போட்டியில் இலங்கை மாணவிகள் மூவர்
இந்தியாவின் கேரளாவில் நடக்கவிருக்கும் உலக சிலம்பம் போட்டியில் கண்டி, தெல்தோட்டை மலைமகள் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான செல்வி எம்.இந்துஷா மற்றும் அக்கல்லூரியில் கல்வி பயிலும் ஐ.சௌஜன்யா, கண்டி, கலஹா ராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பழைய மாணவி பிரியங்கா கல்யாணி ஆகிய மூன்று மாணவிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இங்கிலாந்தை தோற்கடித்த இலங்கை
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டை இலங்கை வென்றது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து வென்று ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிய நிலையில், ஓவலில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பித்து திங்கட்கிழமை (09) முடிவுக்குவந்த இப்போட்டியை வென்றதன் மூலம் தொடரை 1-2 என்ற ரீதியில் இலங்கை முடித்துக்கொண்டது.
விபத்தில் இளைஞன் படுகாயம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (08) இரவு இடம்பெற்ற விபத்தில் அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேநாதிரம் கஜேந்திரன் (வயது 29) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
“தோல்வியை உணர்ந்து விட்டார்”
ரணில் விக்ரமசிங்க, தோல்வியை உணர்ந்து விட்டார். அதனால்தான், தென்பகுதியில் நடைபெற வேண்டிய கூட்டங்களை இரத்து செய்து விட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
வாக்காளர் அட்டை தடையாக இருக்காது
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.15 பில். பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சுமார் 15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு வெடித்ததில் ஆறு பொலிஸார் காயம்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை திங்கட்கிழமை (09) பிற்பகல் வெடித்ததில் ஆறு பொலிஸார் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பமாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்களை கண்காணிக்க போலாந்துக்கு விஜயம்
கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர்.
நட்டஈட்டை செலுத்தினார் பூஜித் ஜயசுந்தர
2019ஆம் ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் செலுத்துமாறு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
“மீனவர்களை மீட்க உறுதியான தூதரக முயற்சிகள் அவசியம்"
வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் சேவையில் மாற்றம்
தமிழ் நாட்டின் நாகபட்டிணத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு புதிய வழிகாட்டல்
விடுமுறை பெற்று வெளிநாடு சென்ற நிலையில், நாடு திரும்பும் அரச ஊழியர்களுக்கான புதிய வழிகாட்டல்களை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
நெல்லின் விலை உயர்வு
நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் நெல் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
“இனவாதத்தை விதைக்க முயற்சிக்க வேண்டாம்"
ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு சென்று தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகக் கூறுகிறார் |அரசியல் மேடையில் திரிபுபடுத்தி பொய் பிரசாரம் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும்
532 நாட்கள் விடுமுறை எடுத்ததால் - சர்ச்சையில் சிக்கிய பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.