CATEGORIES
Kategoriler
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
ஐசிசி 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆக்கபூர்வமான ‘நீட்' விவாதம்: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
நீட் தோ்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகள் என அனைவரும் ஆக்கபூா்வமான விவாதம் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என பிரதமா் மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் பிரேமலதா மனு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆளுநா் ஆா்.என் ரவியிடம் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
சென்னை உள்பட மூன்று நகரங்களில் ரூ.1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை உள்பட மூன்று நகரங்களில் ரூ.1,146 கோடியில் 28 ஆயிரத்து 643 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுவிப்பு
நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண கைதான மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
வெளியுறவுத் துறை புதிய செயலர் விக்ரம் மிஸ்ரி
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா் விக்ரம் மிஸ்ரி வெளியுறவுத் துறைச் செயலராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
4 புதிய மாநகராட்சிகள் உருவாகின்றன
திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
'நீட்' விவகாரம்: மக்களவை முடங்கியது
‘நீட்’ தோ்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) கடும் அமளியில் ஈடுபட்டன.
பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு
பொலிவியாவில் அதிபா் லூயிஸ் ஆா்சேவின் ஆட்சியைக் கவிழ்க்கும் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா
டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.
அவசரநிலை குறித்த கருத்து: மக்களவைத் தலைவரிடம் ராகுல் அதிருப்தி
‘அவசரநிலை அமல்படுத்தப்பட்டது குறித்து அவையில் குறிப்பிட்டதைத் தவிா்த்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடனான சந்திப்பின்போது எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தாா்.
நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கில் புல்லட் ரயில் திட்ட ஆய்வுகள்
நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கு பகுதியில் புல்லட் ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
‘7,000 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி’
நிகழாண்டில் 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.100 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
'ரூ.66 கோடியில் 22 தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்கள்'
வேலூா், கும்பகோணம் உள்பட 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.66 கோடியில் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
பேரவையில் நாளை புதிய சட்டத் திருத்தம்
நகா்ப்புற உள்ளாட்சிகளை தரம் உயா்த்துவதற்கு நிா்ணயிக்கப்பட்ட அளவீடுகள் தொடா்பான சட்டத் திருத்தம் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) கொண்டுவரப்படவுள்ளது.
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 3 மாதங்களில் கருவிழி சரிபார்ப்பு முறை
மூன்று மாதங்களில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி சரிபாா்ப்பு முறை தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி அறிவித்தாா்.
கள்ளச்சாராய மரணம்: அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தைக் கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
75,000 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: ஐசிஎஃப் புதிய சாதனை
பெரம்பூா் ஐசிஃஎப் தொழிற்சாலை தொடங்கி 68 ஆண்டுகளில் 75,000 ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
நோக்கியாவுடன் விஐடி பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு கூட்டு ஆராய்ச்சி தொடா்பாக நோக்கியா நிறுவனத்துடன் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சாலையில் திரியும் மாடுகளுக்கு ‘மைக்ரோசிப்’
சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அடையாளப்படுத்த ‘மைக்ரோசிப்’ பொருத்தப்படவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.
ரூ. 1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்டம்
தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் உலக வங்கி உதவியுடன் ரூ.1,185 கோடியில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
போக்ஸோ வழக்கு: எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
போக்சோ வழக்கில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு: 2 பேர் கைது
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பிகாா் மாநிலம், பாட்னாவில் இருவரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது.
வினாத்தாள் கசிவு: கடும் தண்டனை
போட்டித் தோ்வுகளுக்கான வினாத்தாள் கசிந்த சம்பவங்கள் குறித்து நோ்மையான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
கென்யா: சர்ச்சைக்குரிய வரி விதிப்பு மசோதா வாபஸ்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பொதுமக்களின் கடுமையான எதிா்ப்பு காரணமாக புதிய வரி விதிப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக அதிபா் வில்லியம் ரூட்டோ புதன்கிழமை அறிவித்தாா்.
இறுதிக்காக இங்கிலாந்துடன் மோதும் இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
வாக்கெடுப்பு நடத்தாதது அரசுக்கு பெரும்பான்மை இல்லாததைக் காட்டுகிறது
‘பதினெட்டாவது மக்களவை தலைவா் பதவி தோ்தலில் வாக்கெடுப்பு நடத்தாதது ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததையே காட்டுகிறது’ என்று திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்தது.
சாலை மோசமாக இருந்தால் சுங்கச் சாவடியில் கட்டணம் கூடாது
சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல், மோசமாக இருக்கும் இடங்களில் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளாா்.