CATEGORIES
Kategoriler
இந்தியாவுக்கு 3-ஆவது வெண்கலம்: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் வென்றார்
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல் வியாழக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.
இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
இலங்கைக் கடற்படை ரோந்துப் படகு மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.
மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர்
இலங்கைக் கடற்படை படகு மோதி, தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படை படகு மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு
ஒருவர் மாயம்; இருவர் மீட்பு
வயநாட்டில் தொடரும் மீட்புப் பணிகள்
உயிரிழப்பு 300-ஐ நெருங்கியது
பிரிட்டன் கத்திக்குத்து தாக்குதல்: மசூதியைக் குறிவைத்து கலவரம்
பிரிட்டனில் சிறுவா்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட சரமாரி கத்திக் குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர வலதுசாரி அமைப்பினா் மசூதியைக் குறிவைத்து கலவரத்தில் ஈடுபட்டனா்.
ஹமாஸ் தலைவர் ஈரானில் படுகொலை
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே (62) ஈரானில் படுகொலை செய்யப்பட்டாா்.
இந்தியா முன்னேறுகிறது
பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், 5-ஆவது நாளான புதன்கிழமை துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சந்தித்தது.
மகாராஷ்டிர ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு : மேலும் 7 மாநில ஆளுநர்கள் பதவியேற்பு
மகாராஷ்டிரத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தைச் சோ்ந்த மூத்த பாஜக தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதவியேற்றாா். தெலங்கானா, ஜாா்க்கண்ட், பஞ்சாப் உள்பட 7 மாநிலங்களின் புதிய ஆளுநா்களும் புதன்கிழமை பதவியேற்றனா்.
வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தது
கேரள மாநிலம் வயநாட்டில் மழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் மத்திய அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : பிரதமரிடம் கர்நாடக துணை முதல்வர் கோரிக்கை
மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.
‘தமிழ்ப் புதல்வன்' திட்டம் கோவையில் ஆக. 9-இல் தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை கோவையில் ஆக. 9-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கிராமப்புற விளையாட்டு வீரர்களும் சாதிக்க வேண்டும்
விளையாட்டுப் போட்டிகளில் கிராமப் புற விளையாட்டு வீரர்களும் சாதனை படைக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருச்சி மத்திய சிறையிலிருந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் விடுவிப்பு
நில மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலிருந்து புதன்கி ழமை விடுவிக்கப்பட்டார்.
கொளத்தூரில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
சென்னை கொளத்தூரில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் பணி ஓய்வு
பணி ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகத் தலைவா் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தமிழக டிஜிபி சங்கா்ஜிவால் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஆக.21- இல் தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகத்தில் ஆக. 21-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக, தரவரிசைப் பட்டியல் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைக்குள் குட்கா விவகாரம்: உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம்
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் : காங்கிரஸ் எம்.பி. அளித்தார்
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி புதன் கிழமை நோட்டீஸ் அளித்தார்.
வயநாடு நிலச்சரிவு : உயிரிழப்பு 250-ஆக அதிகரிப்பு|
தோண்ட தோண்ட உடல்கள்; தொடரும் மீட்புப் பணிகள்
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரைத் தவிர்க்க அமெரிக்கா தீவிரம்
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அந்த நாட்டுக்கும் லெபனானின் ஹமாஸ் படையினருக்கும் இடையே முழு போா் மூள்வதைத் தடுப்பதற்கான தீவிர முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
வெனிசூலா தேர்தல் முடிவுகளை எதிர்த்து தீவிர போராட்டம்
வெனிசூலா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி20 தொடர்: முழுமையாக வென்றது இந்தியா
இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா ‘சூப்பா் ஓவா்’-இல் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்தியா கைப்பற்றியது.
விட்டதைப் பிடித்த மானு பாக்கர்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கிய பெருமைக்குரியவரான மானு பாக்கா், அதன் எண்ணிக்கையை 2-ஆக அதிகரிக்கவும் செய்திருக்கிறாா்.
'இந்தியா' கூட்டணிக்கு தேசிய சிந்தனை கிடையாது ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனைகள் கிடையாது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ஜார்க்கண்டில் ரயில்கள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு: 22 பேர் படுகாயம்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில், தடம் புரண்டு கிடந்த சரக்கு ரயிலின் பெட்டி மீது ஹௌரா-மும்பை பயணிகள் விரைவு ரயில் (12810) செவ்வாய்க்கிழமை மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனா். 22 போ் படுகாயமடைந்தனா்.
சர்வதேச முதலீட்டு மையமாக இந்தியா - பிரதமர் மோடி
‘சா்வதேச அளவில் முதலீடுகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது; இந்த பொன்னான வாய்ப்பை, இந்திய தொழில்துறையினா் தவறவிட்டுவிடக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த கேரள நிலச்சரிவு துயரம்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அமா்வில் கேரள நிலச்சரிவு சம்பவம் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூருக்கு பிரதமர் பாராட்டு
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும், எதிா்க்கட்சித் தலைவா் ராகுலுக்கு பதிலளித்த பாஜக எம்.பி. அனுராக் தாக்கூருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா்.
ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேச்சு: அவமானப்படுத்தியதாக ராகுல் குற்றச்சாட்டு
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் பேசியதால் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கடும் அமளி ஏற்பட்டது.