CATEGORIES
Kategoriler
இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ்: உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் வாதம்
இந்தியாவில் இரும்பு கம்பிகள், சிமெண்ட் போன்ற இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது தொடர்பான பிரச்னையை உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா திங்கள்கிழமை எழுப்பினார்.
தலைவர்கள் கண்டனம்
கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளை நீக்க உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தொடர்புடையோர் கைது செய்யப்படுவர்: அமைச்சர் உறுதி
புதுக்கோட்டை அருகே சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பிரத்யேக சிகிச்சைக்கான ஆராய்ச்சி மையம்: அப்பல்லோ பல்கலை.யில் தொடக்கம்
பிரத்யேக மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஆராய்ச்சிக்காக எண்ம மருத்துவம் மற்றும் துல்லிய மருந்தக மையத்தை அப்பல்லோ மருத்துவக்குழுமம் தொடங்கியுள்ளது.
![மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/7gosRhn5MQPjxyPjhNusys/1737350698390.jpg)
மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை
மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினார்.
![திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/afExhpGOfV3iwY9BMkXsys/1737349532547.jpg)
திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ஆவடி அருகே சேதமடைந்து காணப்படும் திருமுல்லைவாயல், பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
![வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/CIxXs4sc2KeXRc79BQ8sys/1737350090449.jpg)
வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு
டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவ பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட 'விவசாயி' சின்னம்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
![காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச் காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/tIlQvvJyKIgBE2yJ8mhsys/1737348706182.jpg)
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.
![ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம் ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/7ZWFqMUk2LRjsDE88nGsys/1737351484870.jpg)
ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை அந்த நாட்டை ஆளும் தலிபான் அமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் (படம்) விமர்சித்துள்ளார்.
![மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார் மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/zQjT6UsgvNrrAcDUKq8sys/1737351129031.jpg)
மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார்
பொதுமக்களிடையே நற்பெயரை இழந்த எவருக்கும் கட்சியில் இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான அஜீத் பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை
திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.
![முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/rXfT22bZYSUf6b3L2Z7sys/1737351390014.jpg)
முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி
முல்தான், ஜன. 19: மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
![யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/revLFwNqsfoIXh4bRrKsys/1737351446527.jpg)
யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை ஞாயிற்றுக் கிழமை வென்றது.
அனைத்துத் துறைகளிலும் கணித அறிவாற்றல் முக்கிய பங்கு - இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன்
ராம்பரம், ஜன. 19: அனைத்து அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் கணித அறிவாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன் கூறினார்.
சிஎன்ஜி பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு
சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
![பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது - அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது - அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/JYQKBvqaerchZVcam5bsys/1737351234093.jpg)
பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது - அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் எனும் 'புற்றுநோய்' இப்போது அந்த நாட்டின் சொந்த அரசியலையே அழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விமர்சித்தார்.
![சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம் சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/xHvHsMFb4EYvsbxkjVWsys/1737350856633.jpg)
சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
![அமெரிக்காவில் சேவையை நிறுத்தியது டிக்டாக் அமெரிக்காவில் சேவையை நிறுத்தியது டிக்டாக்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/mLrJBIzJVCbyiAq2g7Qsys/1737351515978.jpg)
அமெரிக்காவில் சேவையை நிறுத்தியது டிக்டாக்
அமெரிக்காவில் பிரபல விடியோ பகிர்வுச் செயலியான டிக்டாக்குக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வருவதற்கு முன்னரே, அந்தச் செயலி தனது சேவைகளை நிறுத்தியது.
![ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/W4pS40o9UysOKgb7imasys/1737350603661.jpg)
ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
![105 வயது பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய பேரப் பிள்ளைகள்! 105 வயது பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய பேரப் பிள்ளைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/EcZNhZkF2BRBfypANY7sys/1737349567839.jpg)
105 வயது பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய பேரப் பிள்ளைகள்!
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த நாவலூர் பகுதியைச் சேர்ந்த 105 வயதான கண்ணம்மா பாட்டிக்கு அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.
![அரசு குறைவாகவே கடன் பெற்றுள்ளது - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு குறைவாகவே கடன் பெற்றுள்ளது - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/wdpGaPOeSi9ZXDaQEWKsys/1737350033011.jpg)
அரசு குறைவாகவே கடன் பெற்றுள்ளது - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர், ஜன. 19: மாநில நிதிக் குழு பரிந்துரைத்ததை விட குறைவாகவே தமிழக அரசு கடன் பெற்றுள்ளது என நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
![திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/qxEaUgyTqe0Cs0q7Y8Lsys/1737351579464.jpg)
திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
![வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா தொடக்கம் வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/ApV9gJNs695N4CfMZcasys/1737348288658.jpg)
வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா தொடக்கம்
ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு
![இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/C2HCHrVKCGP1e83apLAsys/1737348243051.jpg)
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்
15 மாதங்களுக்குப் பிறகு வீடுகளுக்கு திரும்பிய காஸா மக்கள்
![ராகுல் வரலாறு அறியாதவர்: ஜெ.பி.நட்டா விமர்சனம் ராகுல் வரலாறு அறியாதவர்: ஜெ.பி.நட்டா விமர்சனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/tUEGnjdj8BJ5S52RaSqsys/1737348343375.jpg)
ராகுல் வரலாறு அறியாதவர்: ஜெ.பி.நட்டா விமர்சனம்
'நாட்டின் அரசியல் சட்டத்துக்கு குந்தக சமைப்புச் சட்டத்தை சிதைக்க தனது தந்தை, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை; அவர் வரலாறு அறியாதவர்' என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.
![50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவர் தல்லேவால் 50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவர் தல்லேவால்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/i31mqswfFYff8YUQNsqsys/1737348390916.jpg)
50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவர் தல்லேவால்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் 50 நாள்களுக்கு மேலாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) ஞாயிற்றுக்கிழமை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
வேளச்சேரியில் பசுமை பூங்கா பணி விரைவில் தொடக்கம்
வேளச்சேரியில் பசுமை பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
![விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்! விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1966960/v8PWiLHxPpvaLcaZgTCsys/1737348309015.jpg)
விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!
இந்தியாவைப் பொருத்தவரை முன்னேற்றமடைந்து உள்ள ஏனைய நாடுகளுடன் நம் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை ஒப்பிட்டு, சிலர் வினா எழுப்பலாம். நமது வழிமுறையில் தடுமாற்றம் ஏதுமில்லை. பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல - சந்திரனையோ வேறு கிரகங்களையோ சென்றடைவதில் அந்நாடுகளுடன் போட்டியிடவோ, மனிதர்களைச் சுமந்து செல்லும் விண்வெளிப் பயணங்கள் புரியவோ நாம் கனவு காணவில்லை.