CATEGORIES
Kategoriler
பிற மாநில தொகுதிப் பங்கீட்டில் திணறும் காங்கிரஸ்
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் திணறி வருகிறது.
29.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீடு இழப்பீடு
தமிழக அரசு தகவல்
2026-இல் முழு செயல்பாட்டில் மதுரை எய்ம்ஸ்!
மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் சிறப்புப் பேட்டி
கொலீஜியத்தில் குறைபாடு இல்லை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
கொலீஜியம் அமைப்பில் அடிப்படையிலேயே குறைபாடு இருப்பதாக முடிவுக்கு வரக்கூடாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
7,979 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியில் உள்ள 7,979 ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
வாழ்க்கையை எளிதாக்குவோம்
குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்தல் என்றவகையிலான 'மினிமலிஸம்' எனப்படும் வாழ்வியலை, இப்போது ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பி வருகிறார்கள்.
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்பட உள்ளது.
மேய்ச்சல் நிலங்களைக் காத்தல் வேண்டும்
வீட்டை விட்டு வெளியில் செல்லுபவர்கள் திரும்பவும் வீடு வந்து சேருவதற்குத்தான் எத்தனை எத்தனை கண்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது! குண்டும் குழியுமான சாலைகள், சாலையோரப் பள்ளங்கள், போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள், திடீரென்று துரத்துகின்ற தெருநாய்கள், மேம்பாலம், பாதாள சாக்கடை போன்ற பணிகளுக்காகத் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாத பள்ளங்கள்... இந்த வரிசையில் இனி சாலைகளில் திரியும் கால்நடைகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் போல இருக்கிறது.
20 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா: அரசியல் தலைவர்கள் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 223-ஆவது குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினர்.
மன நல காப்பக மேம்பாட்டுக்கு பிரத்யேக அரசு நிறுவனம்
மக்கள் நல்வாழ்வு செயலர் அறிவுறுத்தல்
சாலை விபத்துகளில் தலைகவினர் மூவர் உயிரிழப்பு
17 பேர் காயம்
இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டதே திராவிட இயக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இளைஞா்களால் இளைஞா்களுக்காகத் தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்துக்கு வாருங்கள் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.
ஆசிய சாதனை படைத்த புற்றுநோய் விழிப்புணர்வு வாகனப் பேரணி
மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக்காக 250 பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
வேன் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு அரசு நிதி
பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் முறை அறிமுகம்: எம்டிசி
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் வசதி நவம்பர் 1-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழக (எம்டிசி) மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ஊதிய ஒப்பந்தம்; அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ஆன்லைனில் கார் பரிசு ஆசை காட்டி பெண்ணிடம் ரூ.89,000 மோசடி
ஆன்லைனில் கார் பரிசாக விழுந்திருப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.89,000 மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர், வேளாங்கண்ணி கடற்கரைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மரப் பாதை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
காஞ்சிபுரம் கோயில்களில் சிருங்கேரி சங்கராசாரியர் தரிசனம்
சிருங்கேரி சங்கராசாரியர் விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தார்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்க பயிற்சிக் கல்லூரி - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கிண்டியில் ஓராண்டு படிப்புடன் கூடிய பயிற்சிக் கல்லூரி நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளதாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
சென்னை பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி தொடக்கம்
சென்னை மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த 400 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைப் பிரிவு
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்துக்களால் தீக்காயங்கள் நேரிட வாய்ப்புள்ளதால், அரசு மருத்துவமனைகளில் அதற்கென பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்விச் சான்றிதழை எண்ம முறையில் பாதுகாக்க தரவு அமைப்பு
பல்கலைக்கழக மற்றும் கல்லுரி மாணவா்கள் நலனுக்காக, அவா்களின் கல்விச் சான்றிதழை பாதுகாக்க ‘ஒரே தேசம் ஒரே டேட்டா’ என்ற தரவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய அங்கீகார வாரிய தலைவா்அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தாா்.
ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களைச் சேர்ந்த 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நாகை மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
தீபாவளி: இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள்
சென்னை, அக்.27: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பிளவு அரசியல், திராவிட மாடல்- இரு எதிரிகள்
‘பிளவு அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்கிற பெயரில் மக்கள்வி ரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற ஊழல் சக்திகளும்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு எதிரிகள்’ என்று அக்கட்சித் தலைவர் விஜய் கூறினார்.
நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு விரிவான திட்டம்
அமைச்சர் கே.என். நேரு