CATEGORIES
فئات
கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
தமிழக கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ எடையுள்ள தங்கத்தை வங்கியில் முதலீடு செய்து, ஆண்டுக்கு ரூ.12 கோடி வட்டியாகப் பெற இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
நவம்பரில் சரிந்த நவரத்தின ஏற்றுமதி
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 12.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
மேலும் இறுகியது 'கரடி'யின் பிடி: சென்செக்ஸ் 1,176 புள்ளிகள் வீழ்ச்சி
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் கரடியின் பிடி மேலும் இறுகியது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,176 புள்ளிகளை இழந்தது.
ஹோண்டா கார்கள் விலை உயரும்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ், தனது தயாரிப்புகளின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
எம்ஹெச்370 விமானம்: புதிய தேடுதல் வேட்டைக்கு மலேசியா ஒப்புதல்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம் ஹெச்370 விமானத்தைத் தேடும் பணிக்கு மலேசிய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
முடங்கும் அபாயத்தில் அமெரிக்க அரசுத் துறைகள்
நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் புறக்கணிப்பு
குரோஷியா பள்ளியில் கத்திக்குத்து: சிறுமி உயிரிழப்பு
தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தார்.
ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா (89) காலமானார்
ஹரியாணா முதல்வராக 5 முறை பதவி வகித்தவர், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா, மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மாற்றம் நேதன் மெக்ஸ்வீனி நீக்கம்; சாம் கான்ஸ்டஸ் சேர்ப்பு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய வீரர் அஸ்வின், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின்போது பேட் செய்ய வருவதாக விராட் கோலிக்கு புதிய பதிலை வழங்கியுள்ளார்.
டி20 தொடர்: வங்கதேசத்துக்கு முழுமையான வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை, அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் மோதல்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு-19) மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நேதன் மெக்ஸ்வீனி நீக்கம்; சாம் கான்ஸ்டஸ் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்காக, ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெண் எம்.பி.க்களுக்கு உரிய பாதுகாப்பு: தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ரூ.7,628 கோடியில் வஜ்ரா பீரங்கிகள் கொள்முதல்: எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இந்திய ராணுவத்துக்கு கே9 வஜ்ரா பீரங்கிகளை கொள்முதல் செய்ய லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனத்துடன் ரூ.7,628 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டது.
இன்று 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (டிச.21) நடைபெற உள்ளது.
மசூதி-கோயில் விவகாரங்களை கிளப்புவது ஏற்புடையதல்ல
'அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டியதையடுத்து, அதேபோல் பிற பகுதிகளிலும் மசூதிகள்-கோயில்கள் இடையே மோதலை கிளப்பி ஹிந்துத்துவா தலைவர்களாக உருவவெடுக்கலாம் என சிலர் எண்ணுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
சி.டி.ரவியை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக பாஜக எம்எல்சி சி.டி.ரவியை கைது செய்துள்ளதைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவரை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு பரிசீலனை?
தேசிய மனித உரிமைகள் ஆணையத் (என்ஹெச்ஆர்சி) தலைவர் பதவிக்கான பரிசீலனையில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் பெயர் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
எரிவாயு லாரி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு
35 பேர் காயம், 37 வாகனங்கள் சேதம்
ராகுலுக்கு எதிரான வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றம்
நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் இடையிலான தள்ளுமுள்ளு சம்பவத்தில், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை குற்றப் பிரிவுக்கு மாற்றி தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
எஸ்சி பிரிவில் உள்ஒதுக்கீடு: இதுவரை செயல்படுத்தப்படவில்லை
மத்திய அரசு
'1984' பையை பிரியங்காவுக்கு பரிசளித்த பாஜக எம்.பி.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு '1984' என்று எழுதப்பட்டிருந்த பையை பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி வெள்ளிக்கிழமை பரிசாக அளித்தார்.
ராகுலுக்கு எதிரான வழக்கு விரக்தியின் அடையாளம்
மத்திய அரசு மீது பிரியங்கா சாடல்
நாடாளுமன்ற மோதல்: தொடர்ந்து ஐசியு பிரிவில் எம்.பி.க்கள்
நாடாளுமன்ற மோதலில் தலையில் காயமடைந்த இரண்டு பாஜக எம்.பி.க்களின் நிலைமை சீராக உள்ளது; அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) கண்காணிப்பில் உள்ளனர் என மருத்துவமனை சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அமித் ஷா விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக தில்லியின் விஜய் சௌக் பகுதியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளிர்கால கூட்டத்தொடர்: மக்களவை 54.5%, மாநிலங்களவை 40% ஆக்கபூர்வமாக செயல்பட்டன
குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை 54.5 சதவீதமும், மாநிலங்களவை 40 சதவீதமும் ஆக்கபூர்வமாக செயல்பட்டுள்ளன.
விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக இருக்கும் வழக்குகளின் விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
எண்ணூர் திட்டத்தால் மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: தமிழக அரசு
எண்ணூரில் அமையவுள்ள திட்டத்தால், மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம் பெறாததால், அந்தக் குழு தொடர்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளார்.