CATEGORIES
فئات
செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்
செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.
அமித் ஷா பேச்சு: நாடாளுமன்றத்தில் அமளி
சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய அரசு தகவல்
இணைய (சைபர்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
2 காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழப்புக்கு ராகுல் கண்டனம்
அஸ்ஸாம், உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் போலீஸார் தடியடி நடத்தியதாலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாலும் தொண்டர்கள் இருவர் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
துணைவேந்தர் தேடுதல் குழு: அறிவிக்கையை திரும்பப் பெற ஆளுநர் அறிவுறுத்தல்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம் பெறாததால், அக்குழு தொடர்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை!
பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?
‘கலைஞரின் கனவு இல்லம்' திட்டம்: மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு
மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் மது விலக்குப் பிரிவு என்ன செய்கிறது?
கள்ளச்சாராய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
சீன துணை அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு
எல்லையில் அமைதியைப் பராமரிக்க சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் பேச்சு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எப்போது?
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
மீண்டும் வேண்டும் கூட்டுக் குடும்பங்கள்!
நகரத்துக்கு சென்று ஏதேனும் ஒரு வேலை செய்து கொள்ளலாம் என்று புறப்பட்ட கதைதான் நகர்மயமாதல். நகர்மயமாதலால் மட்டுமல்லாமல், வயதானவர்களைப் பேண முடியாமை, தன் குழந்தை, தன் மனைவி, தன் கணவன், தன் பிள்ளைகள் என்ற சுயநலப் போக்கு மிகுந்தபோது கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து போயின.
அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவோம்!
அவசரமான இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
சவுக்கு சங்கருக்கு நாளை வரை நீதிமன்றக் காவல்
நீதிமன்ற பிடி ஆணைப்படி சென்னையில் கைது செய்யப்பட்ட சமூக ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை வெள்ளிக்கிழமை (டிச. 20) வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
டிச.28-இல் பாமக பொதுக்குழு கூட்டம்
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கு திமுக என்றென்றும் அரண்
சிறுபான்மையினருக்கு திமுக என்றென்றும் அரணாகத் திகழும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்
பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்
தமிழக காவல் துறையில் 26 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து
தமிழக காவல் துறையில் 26 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
கோவை மத்திய சிறையில் மோதிக்கொண்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
கோவை மத்திய சிறையில் மோதிக்கொண்ட இரு காவலர்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு கிடைத்திருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவு: பிரேமலதா கண்டனம்
தமிழக எல்லையில் கேரளம் மருத்துவக் கழிவைக் கொட்டுவதாகக் கூறி, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்
துரை வைகோ வலியுறுத்தல்
லஞ்சம்: ஜிஎஸ்டி துணை ஆணையர் உள்பட மூவர் கைது
மதுரையில் லாரி போக்குவரத்து நிறுவன உரிமையாளரிடம் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்காக ரூ. 3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி துணை ஆணையர், இரு கண்காணிப்பாளர்களை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி உயர்வு
தமிழக அரசு உத்தரவு
அஸ்வினின் பங்களிப்பு: முதல்வர் பாராட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள தமிழக வீரர் அஸ்வினின் பங்களிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
இதய உள்ளறைக்குள் கட்டி: நுண் துளை சிகிச்சை மூலம் அகற்றம்
பெண்ணின் இதய உள்ளறைக்குள் உருவான கட்டியை நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார் கைது
அதானி முறை கேடு விவகாரத்தைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த கார்: மாயமான ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரம்
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த காரிலிருந்த ஓட்டுநரை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அரசு கட்டடங்களில் மின்தூக்கிகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
அரசு கட்டடங்களில் மின்தூக்கிகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
‘ஏஐ' மூலம் பள்ளிகளில் முக அங்கீகார வருகைப் பதிவேடு
தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமை செயலர் தகவல்