CATEGORIES
فئات
போலி மாணவர் சேர்க்கை: 29 பள்ளிகளில் சிபிஎஸ்இ குழு திடீர் ஆய்வு
போலி மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பள்ளிகளை மீது நடவடிக்கை எடுக்க தில்லி, பெங்களூரு, வாரணாசி, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 29 பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) குழு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை
'சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரை அவ மதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தார்.
இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்
தமிழகத்தில் 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தாய்மார்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் குழந்தைகளைக் காக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
காஞ்சிபுரம் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: 394 மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கம்
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் 750 படுக்கைகளுடன் கூடிய ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 394 மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிப்பு
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் பதவி நீக்கக் கோரி அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸை நிராகரித்து, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுஷ் மருத்துவத் திட்டங்கள்: தமிழகத்துக்கு மத்திய அரசு பாராட்டு
ஆயுஷ் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
18 மாவட்டங்களில் 34 உயர்நிலைப் பாலங்கள்
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 34 உயர்நிலைப் பாலங்கள் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
'மக்களைத் தேடி மருத்துவம்': பயனாளிகள் எண்ணிக்கை 2 கோடி
வீட்டுக்குச் சென்று மருந்துப் பெட்டகம் வழங்கினார் முதல்வர்
ஊழல் என்னும் நச்சுமரம்!
ஊழல் இல்லாத இடமே இல்லை. உலகளாவிய ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் மூலம் ஊழலின் அளவு வெளியிடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் உலகம் மீளட்டும்!
அது அமெரிக்காவின் கடைவீதி. ஒரு கடைகளுக்குள்ளும் நுழைகிறார். தாம் தேடும் பொருள் கிடைக்காத மனநிலையோடு அடுத்தடுத்த கடைகளுக்கும் செல்கிறார்.
தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு மையம் அமைக்கப்படும்
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடற்கரையில் கடல் சாகச விளையாட்டு மையம் விரைவில் அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டுப் பாலம்: டிச.30-இல் முதல்வர் திறந்து வைக்கிறார்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச.30-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
ஆந்திரம் சென்றது புயல் சின்னம்: தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் வியாழக்கிழமை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டி நிலை கொண்டிருந்தது. இது மேலும் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியில் உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் உறவினர்கள் மறியல்
திருச்சியில் மின் சாரம் பாய்ந்து உயிரிழந்த இரு மின்வாரிய ஊழியர்களின் சடலங்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கும் - ஆளுநருக்கும் மோதல் கூடாது
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும்: கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றி மீண்டும் கேரளத்துக்கே கொண்டுசெல்ல வேண்டும்; கேரள அரசே பொறுப்பேற்று 3 நாள்களுக்குள் அகற்றி அது தொடர்பான அறிக்கையை டிச. 23-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அமித் ஷாவை கண்டித்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடன் வாங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலம்
கடன் வாங்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளது திமுக அரசு என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலம் 600 கோடி முறை மகளிர் பயணம்
தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலமாக பேருந்துகளில் 600 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தொட்டி கவிழ்ந்து விபத்து
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 50 அடி உயர நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயமடைந்தனர்.
தனியார் வங்கியில் மேலாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது
சென்னை தியாகராய நகரில் தனியார் வங்கிக்குள் புகுந்து மேலாளரை அரிவாளால் வெட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடலுக்குள் கார் விழுந்த விபத்தில் ஓட்டுநர் சடலமாக மீட்பு
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் கார் விழுந்த விபத்தில், மாயமான ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது.
கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாதெமியில் டிச.22 முதல் இலவச தேர்வு பயிற்சி
சென்னைகிங்மேக்கர் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச தேர்வு பயிற்சி வகுப்பு டிச.22-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதய வால்வு மாற்ற சிகிச்சையில் அதிநவீன நுட்பம் அறிமுகம்
இதய பெருநாடி வால்வு மாற்ற சிகிச்சையில் அதிநவீன நுட்பத்திலான சிகிச்சை முறை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வர் படைப்பகம்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நூலகங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவில் விதிமீறல் இல்லை
ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்
ரயில்வே செயலியில் 'ஆர் வேலட்' மூலம் பயணச்சீட்டு பெறுவோருக்கு 3% தள்ளுபடி
ரயில்வே செயலியில் உள்ள 'ஆர் வேலட்' மூலம் பயணச்சீட்டு பெறுவோருக்கு பயணச்சீட்டு தொகையிலிருந்து 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (டிச.20) வெளியிடப்படவுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அகத்தியர் குறித்த ஆய்வுகள்
இந்திய அறிவு மரபுகள் திட்டத்தின் கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் அகத்தியர் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்தார்.