CATEGORIES
فئات
நூதன இணையவழி கைது
திட்டம் போட்டு நாடகமாடும் மோசடி கும்பல், எப்படி தங்கள் கோர வலையில் சிக்க வைக்கிறார்கள் என்பது ஆச்சரியம்! படித்த குற்றவாளிகள், காவல் நடைமுறை தெரிந்தவர்கள். உளவியல் ரீதியாக மனிதர்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைக்கும் முறைகளில் பயிற்சி பெற்றவர்களாக உள்ளார்கள்.
பலிக்கக் கூடாத ஜோதிடப் பலன்!
து வருடம் என்றாலே புத்தாண்டு சபதங்கள் குறித்த எண்ணங்கள் வந்து, புத்தாண்டு பிறந்த சில நாட்களில் சபதங்கள் மறந்து போகின்றன.
பெண் குழந்தைகளுக்கு பாஜக சார்பில் திருமண வைப்பு நிதி
முன்னாள் பிரதமர் வாய்பாயின் நூற்றாண்டு விழாவையொட்டி, பெண் குழந்தைகளுக்கு பாஜக சார்பில் திருமண வைப்பு நிதி வழங்கப்படவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை மக்கள் ஏற்கமாட்டார்கள்: காங்கிரஸ்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அறுபடை வீடு இரண்டாம் கட்ட பயணம்: பழனியில் இன்று தொடக்கம்
சென்னை, டிச. 16: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.17) தொடங்குகிறது எனத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வேளாண், உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
எம்.பி. கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதில்
சட்டப்பேரவையின் 6-ஆவது கூட்டத் தொடர் முடித்துவைப்பு
ஆளுநர் உத்தரவு
அரசு மருத்துவமனை அருகே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் பெண் உள்பட இருவர் கைது
சென்னை, டிச. 16: சென்னையில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் வைத்திருந்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகே ஒரு கும்பல் போதைப் பொருள் கடத்துவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸார் அங்கு திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை வழிமறித்து நடத்திய சோதனையில் அதிலிருந்த 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கார் பழுது நீக்கும் மையத்தில் தீ விபத்து
சென்னை, டிச. 16: செங்குன்றம் அருகே கார் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கார்கள் சேதமடைந்தன.
ரௌடி அப்புவின் கூட்டாளிகள் கைது: துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
சென்னையில் ரௌடி அப்புவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
'அம்மா' உணவகம் உள்பட 30 கடைகளுக்கு 'சீல்'
திருவொற்றியூரில் அம்மா உணவகம் உள்ளிட்ட 30 கடைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
ரூ.30 லட்சத்தில் மடிக்கணினி, ஒளிப்படக்காட்டி கருவிகள் அளிப்பு
மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி
'சென்னை சங்கமம்'- 4 நாள்கள் திருவிழா
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி, டிச.16: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு
பொது சுகாதாரத் துறை தகவல்
ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூர வேண்டும்
சென்னை, டிச.16: ராணுவ வீரர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை அனைவரும் நினைவுகூர வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
மீனவர் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு
புது தில்லி, டிச.16: மீனவர்கள் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தீர்வை எட்ட முடியும் என்று பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனர்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையால் பேரவைத் தேர்தல்கள் முக்கியத்துவம் இழக்கும்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையால், சட்டப் பேரவைத் தேர்தல்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி
ஸ்ரீவாஞ்சியம் கோயில் குப்தகங்கை தீர்த்தத்தில் அஸ்திர தேவருக்கு நடைபெற்ற தீர்த்தவாரி.
முல்லைப் பெரியாறு அணைக்கு 2 லாரிகளில் கட்டுமானப் பொருள்கள்: கேரளம் அனுமதி
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி வழங்கியதையடுத்து, 2 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.
அச்சன்கோவிலில் திருஆபரணப் பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு
கேரள மாநிலம் அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த ஸ்ரீஅருணாசலேஸ்வரர்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மயோட் தீவை தாக்கிய 'சீடோ' புயல்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரான்ஸ் பிராந்தியமான மயோட்டில் 'சீடோ' புயலால் ஏற்பட்ட கனமழையில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க ஐ.நா. தூதர் வலியுறுத்தல்
சிரியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கியெர் பெடர்சன் வலியுறுத்தினார்.
ஹசீனா ஆட்சியில் 3,500 பேர் மாயம்
வங்கதேச விசாரணை ஆணையம் அறிக்கை
யு-19 மகளிர் ஆசிய கோப்பை டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பத்தொன்பது வயதுக்குட்பட்ட (யு-19) மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா பலம்
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 2-ஆம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் சேர்த்திருக்கிறது.
மகளிர் டி20: மே.தீவுகளை வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
கோப்பையை தக்கவைத்தது இந்தியா
ஓமனில் நடைபெற்ற 9-ஆவது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்திய நடப்பு சாம்பியன் இந்தியா, கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தது இந்தியா
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியா குறைத்தது.