CATEGORIES
فئات
பாஜக வின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கி பரப்புரை
ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது. நீட், புதிய கல்விக்கொள்கை என்று மாணவர்களின் எதிர் காலத்தையே பாழாக்கி வருகின்றது.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்பாம்!
இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை என இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.
நீதித்துறையில் பெண் வழக்குரைஞர்கள் தேவை அதிகரிக்கும் - உச்சநீதிமன்ற நீதிபதி
நீதித்துறையில் பெண் வழக்குரைஞர்கள் தேவை வரும் காலத்தில் அதிகரிக்கும் என சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி பேசினார்.
மசோதாக்களை அனுப்பாத ஆளுநர் செயல் தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதாகும்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கரோனாவின் தீவிரத்தை தவிர்க்க சமூக விலகலும், முகக் கவசமும் கட்டாயம் தேவை
நிபுணர்கள் கருத்து
இடைத்தேர்தல் முடிவுகள்: திரிணாமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் வெற்றி : பா.ஜ.க. படுதோல்வி
பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ஆர்ஜேடியும், மகாராட்டிரா மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் கரோனா காலத்தில் உயிரிழப்பு மோடி உண்மையை பேசுவதில்லை : ராகுல் காந்தி சாடல்
உலகளாவிய கரோனா இறப்பு எண்ணிக்கையைப் பகிரங்கப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது' என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை சுட்டிக்காட்டி, காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பு: தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் 76 லட்சம்பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 25 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.யை பிரிக்கும் திட்டம் இல்லை
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தகவல்
தடுப்பூசி சான்றிதழில் திருத்தம் செய்து கொள்ள கோ-வின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம்
தடுப்பூசி சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய கோ-வின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அந்தவகையில் பயனாளி களே திருத்திக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் பல்கலைக் கழக மானியக் குழு அனுமதி
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் அறி வித்தார்.
வன்முறையே, உன் பெயர்தான் ஆர்.எஸ்.எஸா? பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் வீடுகள் தீக்கிரை குஜராத், மேற்கு வங்கத்திலும் ராமநவமி பெயரால் வன்முறை வெறியாட்டம்!
வடமாநிலங்களில் ராமநவமி என்பதன் பெயரால் மதவெறி ஊர்வலத்தை நடத்தி வன்முறை கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள். மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் ராமநவமி பெயரால் நடந்த வன்முறை பத்தில் 10 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.
தமிழர் தலைவர் ஆசிரியரின் முயற்சி ஒருபோதும் வீணாகாது; வெற்றி பெறும் நாமும் துணை நிற்போம்! பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமாகிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசியதாவது
ராஜகோபாலாச்சாரியின் குலக்கல்வித்திட்டம்தான் புதிய தேசிய கல்விக்கொள்கை - ம.தி.மு.க.துணைப் பொதுச்செயலாளர் மல்லை.சத்யா
ம.தி.மு.க.துணைப் பொதுச்செயலாளர் மல்லை.சத்யா தனது உரையில், மானமிகு ஆசிரியர் தலைமையில் கூடிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் வடிவம்தான் இந்த நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம்.
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை பேருந்து நிலையம் இடையே ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை - சட்டசபையில் பொதுப் பணி துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
தேனாம்பேட்டை சைதாப்பேட்டை பேருந்துநிலையம் இடையே ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சென்னை அயோத்தியா மண்டப விவகாரம் பா.ஜனதா முயற்சி நடக்கவே நடக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
அயோத்தியா மண்டப விவகாரத்தில் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் 'புனித வெள்ளி' ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை நாளாக இருந்து வருகிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காக பள்ளிக் கட்டடங்கள், விடுதிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் ரூ.18 கோடியில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளிகட்டடங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் நடமாடும் சிகிச்சை மய்யம்
சென்னை மணலியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் நடமாடும் சிகிச்சை மய்யம் ஏ.எம். அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
கல்வியைப் பறிக்கும் பாஜக அரசை தூக்கி எறிய போர்க்குணத்துடன் இயங்கவேண்டும் - புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி
புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி பேசியதாவது: மாநில அரசுகளை ஒன்றிய அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருக்க வைக்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நோக்கமாக உள்ளது.
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரோபாட்டிக் கருவி மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை - மா.சுப்பிரமணியன் தகவல்
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரோபாட்டிக் கருவி மூலம், புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திராவிட மாணவர் கழகம் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் -I
டில்லி மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி.யின் தாக்குதலுக்கு கண்டனம்
பெங்களூருவில் தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த 93 ஆண்டு பழைமையான தமிழ்ப்பள்ளி நூலகமாக மாறுகிறது
பெங்களூருவில், , தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த 93ஆண்டு பழைமையான தமிழ்ப்பள்ளி, நூலகமாக மாறுகிறது. இப்பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு 21,000 படுக்கைகள் வழங்கும் திட்டம் - ஏப். 14இல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ.360 கோடியில், 21,000 படுக்கைகள் வழங்கும் திட்டத்தை ஏப்.14ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சமூகப்புரட்சியின் முதல் விதை
இந்திய சமூகப்புரட்சியின் விதை 2500 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம புத்தரால் போடப்பட்டது, பிற்காலத்தில் சனாதன சக்திகளின் ஆதிக்கத்தால் சமூகப்புரட்சியின் விதை மிக ஆழத்திற்குள் புதைந்து போனது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு கல்வியறிவின் மூலம் மீண்டும் அந்த விதை பெருமரமாக வெளிப்படத்துவங்கியது, அம்மரத்தில் முதல் விழுதாக புறப்பட்டவர் ஜோதி ராவ் புலே. அவரின் பிறந்தநாள் (11.04.1827) இன்று.
'பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திடுக; ஒன்றிய அரசினை வலியுறுத்தி முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம்: சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றம்
மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என சட்டப்பேரவையில் இன்று (11.4.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது.
"ஹாங் பு" நிறுவனத்துடன் ரூ.1000 கோடி முதலீடு ஒப்பந்தம்
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
'மெட்' இந்தியா மருத்துவமனையில் வளர்சிதை மாற்ற நோய் கண்டறியும் சோதனை
மருத்துவ நிபுணர் டாக்டர் டி. எஸ். சந்திரசேகர் தகவல்
4-ஜி சேவை: நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவும் பி.எஸ்.என்.எல்...!!
4ஜி சேவைக்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை பி.எஸ்.என்.எல்.நிறுவுகிறது என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.