CATEGORIES
فئات
தமிழர் தலைவர் பயணக்கூட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செந்துறை ஒன்றிய கலந்துரையாடலில் தீர்மானம்
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் செந்துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில்3.4.2022 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
இந்தியாவில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு - தவறான தகவல் என சுகாதாரத்துறை விளக்கம்
புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்ததகவல் மறுக்கப்பட்டுள்ளது.
விண்ணில் மிதக்கும் தங்கச் சுரங்கம்
சூரிய மண்டலம் உருவான போது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கிரகங்களிலிருந்து பிரிந்து உருவாகி மிதக்கத் தொடங்கின.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோயைக் கண்டறிய எறும்புகள்
புற்றுநோய் செல்கள், நம் உடலின் சாதாரண செல்களிலிருந்து மாறுபட்டவை. ஓயாது மாறும் தன்மை கொண்ட கரிமச் சேர்மங்களை உற்பத்தி செய்யும் திறன் அந்த செல்களுக்கு உண்டு.
தமிழ்நாடு கடற்கரைகளை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி தேவை: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்
புதமிழ்நாடு கடற்கரைகளை மேம்படுத்த ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்
கல்விக்காக வசூலிக்கப்பட்ட ரூ.94 ஆயிரம் கோடியை செலவிடாதது ஏன்? - திமுக எம்.பி. கனிமொழி என்விஎன்.சோமு கேள்வி
கல்விக்கான மேல் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.94 ஆயிரம் கோடியை செலவிடாதது ஏன் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன்.சோமு கேள்வி எழுப்பினார்.
எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இறுதிக் கட்ட சென்டாக் கலந்தாய்வு: 2 ஆம் தேதி நடக்கிறது
புதுச்சேரி சென்டாக்கன்வீனர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ். இடங்களுக்கு கடந்த 28 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இறுதிகட்ட(மாப்அப்) சென்டாக் கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திருடப்பட்ட விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நோட்டுகள் திரும்பக்கிடைத்தன....
சார்லஸ் டார்வினின் நோட்டுகள்
எகிறுது எகிறுது பெட்ரோல், டீசல் விலை : 14ஆவது நாளாக உயர்வு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. நேற்றும் 14ஆவது நாளாக அதன் விலை லிட்டருக்கு 76 காசு அதிகரித்திருந்தது.
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி முதலிடம் - அதானி இரண்டாம் இடம்
வளர்ச்சி யாருக்கு?
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்புச் சலுகை ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கி உள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக 35 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டில் நேற்று(31.3.2022) புதிதாக 19 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 35 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூரியனில் தோன்றி வரும் கரும்புள்ளிகளால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - விஞ்ஞானிகள் தகவல்
சூரியனில் தோன்றி வரும் கரும்புள்ளிகளால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானியல் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவு உணவு பங்கீட்டு கடைகளுக்கு ரூ.302 கோடி மானியம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தீன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: கூட்டுறவுத் துறை நடத்தும் நலிவுற்ற உணவு பங்கீட்டுக் கடைகளுக்கான 2019-2020ஆம் ஆண்டுக்கான மானியத் தொகையின் முன் பணம் ரூ.150 கோடியை அனுமதிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடந்த 2020ஆம் ஆண்டில் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆதார்-பான் இணைக்காதவருக்கு அபராதம் வருமான வரித்துறை அறிவிப்பு
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி ஆகும். இவ்விதம் இணைக்காதவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
அய்.நா. பாதுகாப்பு சபையில் உக்ரைன் அதிபர் உரையாற்றுகிறார்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 42ஆவது நாளை எட்டி உள்ளது.
உணவகங்களை மிரட்டும் ஜொமேட்டோ, சுவிக்கி நிறுவனங்கள்- விசாரணை நடத்த உத்தரவு
கரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஸ்விக்கி, ஜோமெட்டோ உள்ளிட்ட உணவு வாங்கல் செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் பதவி விலகல்
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெயீத் யூசுப் பதவி விலகினார்.
பெட்ரோலியம் நிறுவனத்தில் வாய்ப்பு
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மின்சாரக் கார்கள் விற்பனை அதிகரிப்பு
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
30 நாட்கள் வேலிடிட்டி. - ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோனும் அறிவிப்பு
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28ஆக குறைக்கப்பட்டன.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன ஊ வக்கமருந்து பரிசோதனைக் கருவி
தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய் வகத்தின் சாதனையாக, ஆறு புதிய வகை மேற்கோள் பொருட்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.4,800 கோடி நகை கடன் தள்ளுபடி
அமைச்சர் அய்.பெரியசாமி தகவல்
தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கரோனா பாதிப்பு..!
தமிழ்நாட்டில் நேற்று (4.4.2022) 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (3.4.2022) வெளியிட்ட அறிக்கை: தமிழ் நாட்டில் நேற்று 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடும் கட்டுப்பாடுகளையும் மீறி சீனாவை உலுக்கும் கரோனா ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு தொற்று
உலகில் முதன் முதலாக கரோனா கண்டறியப்பட்ட நாடு சீனா. கடந்த 2019ஆம் ஆண்டு கரோனா சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை ஒரு கை பார்த்தது. ஆனால், மிகச்சிறப்பாக கையாண்டு கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்தது.
ஆளுநருக்கு கால வரம்பு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தனி நபர் மசோதா தாக்கல்
சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் தர கால நிர்ணயம் வகுக்கும் வகையில் அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.