CATEGORIES
Kategorien
உறுப்பு தானம் உயிர் தானம்!
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம்
மாஸ்டர் ஹெல்த் செக்கப்...எப்போ...யாருக்கு..எப்படி?
உயர் ரத்தப் பிரச்னை இருப்பது, சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு வித்திடும் என்பதால், இந்த அடிப்படைப் பரிசோதனையும் இன்றியமையாததே.
சீனாவில் பரவும் மற்றோர் வைரஸ்...
கொரோனா குழப்பமே இன்னும் முடிந்தபாடில்லை. பல நாடுகள் லாக்டவுன், தடுப்பு மருந்து முயற்சி என்று எண்ணற்ற சிரமங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து மீண்டும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புபோனிக் பிளேக் என்ற புதிய வைரஸ் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தரமற்ற கிருமிநாசினிகளால் வரும் தர்மசங்கடம்!
“கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இப்போது நிறைய கிருமிநாசினிகள் விற்பனையாகி வருகின்றன, அடிக்கடி கை கழுவும் பழக்கம் தற்போது மக்களிடையே அதிகரித்திருக்கிறது, இந்த தருணத்தில் கிருமிநாசினி பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” என்று எச்சரிக்கிறார் சரும நல மருத்துவர் கார்டிலியா பபிதா.
கொரோனா வார்டில் என்ன நடக்கிறது?!
கொரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் உயிரை பணயம் வைத்து 24 மணிநேரமும் வேலை செய்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் தற்போது அதிக எண்ணிக்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதித்துவருவது சற்று கவலை அளிப்பதாகவே உள்ளது.
தரமான மருத்துவ உபகரணங்களுக்கு....
ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் திருப்பூர் வோல்ரஸ் நிறுவனம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பிலும் தற்போது கவனம் ஈர்க்கிறது. ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருக்கும் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவும் விதத்திலும் இந்த மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயாராகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
மூளையை தாக்குமா கொரோனா வைரஸ்?!
கொரோனா வைரஸ் மனித குலத்தையே காதற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடி பேருக்குமேல் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாப்பா ஹெல்த்தியா இருக்கணுமா..
கர்ப்பகாலம் என்றாலே ஒவ்வொரு செயலையும் யோசித்துத்தான் செய்வோம். ஒவ்வோர் உணவையும் குழந்தையின் நலன் கருதி பார்த்துப் பார்த்துத்தான் உண்போம்.
பெண்களுக்குப் பேராபத்து
பொதுவாகவே புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும், பெண்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அச்சம் தவிர்!
அந்தப் பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அம்மாவுடன் என்னைப் பார்க்க வந்திருந்தாள். அவர்கள் இருவரும் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் கள்தான். அன்று இருவரின் முகத்திலும் வழக்கமான புன்னகை இல்லை. இனம் புரியாதகலக்கம் அதில் குடி கொண்டிருந்தது. 'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அம்மாதான் ஆரம்பித்தார்...
கண் அழற்சி ஏன் வருகிறது?!
கண்களில் நீர் வடிதல் குறித்து அடிக்கடி இந்தத் தொடரில் பேசி வந்திருக்கிறோம். கண்களில் நீர் வடிதல் அறிகுறியுடன் சேர்த்து கண்களில் அதீத சிவப்பு, வெளிச்சம் பார்க்கும்போது கண்கள் கூசுதல், லேசான பார்வைக் குறைபாடு இவையும் சேர்ந்து தோன்றினால் அதனையே அழற்சியாக{Inflammation) வரையறுக்கிறோம்.
கொரோனா எப்போது முடியும்?!
உலகம் முழுவதும் பரவி இதுவரையில் லட்சக்கணக்கான நபர்களை உயிர்பலி வாங்கி இருப்பதோடு, இன்னும் தன் கொடூர ஆட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது கொரோனா. இந்த நோய்க்கொடுமை எப்போதுதான் முடிவுக்கு வரும் என்று தொற்றுநோய் மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதனிடம் கேட்டோம்....
கொரோனாவைத் தடுக்கும் உணவுப்பழக்கம்!
இதயநோய்க்கும் உணவுக்கும் இடையிலான தொடர்பு அதிகமாக பேசப்படுவது போல, நுரையீரல் நோய்க்கும் உணவுக்குமான தொடர்பு அதிக கவனத்தைப் பெறுவதில்லை. இதற்கான காரணத்தை நாம் உற்று நோக்கும்போது, நுரையீரல் நோய்கள் வருவதற்கான காரணங்களாக கூறப்படுபவை புகைப்பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை அதிகமாக சுவாசிப்பது ஆகும்.
கல்யாண முருங்கையின் மகத்துவம் தெரியுமா?!
Ifera என்ற தாவரம். இந்த முருங்கையின் காய், கீரையே நமக்கு நன்கு அறிமுகமானதும் கூட. இதேபோல், கல்யாண முருங்கை என்ற தாவரமும் மிகுந்த மருத்துவப் பலன்களைக்கொண்டது.
அழகியல் சிகிச்சைகள் அவசியம்தானா?!
அழகியல் சிகிச்சைகள் குறித்து நிறைய குழப்பங்களும், அச்சங்களும் இருக்கின்றன. அதற்கேற்றார்போல் சில நேரங்களில் அவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவையாகவும் மாறுவது குறித்து சில செய்திகளையும் பார்க்கிறோம். மாடலிங், சினிமா போன்ற பிரபலமான துறையினர் அழகு சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிற செய்திகள் அவ்வப்போது நமக்குள்ளும் ஆசைகளை உண்டாக்குகிறது. நிறைய பணம் தேவைப்படும் காஸ்ட்லியான சிகிச்சைகள் அவை என்ற எண்ணமும் பரவலாக உண்டு.
மகிழ்ச்சியாய் இருப்பதன் ரகசியம்!
'ஒரு பொய்யாவது சொல் கண்ணே' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா... அதுபோல் மகிழ்ச்சியாய் இருப்பதற்கான சிம்பிள் வழி ஒன்றை உளவியல் நிபுணர்கள் தற்போது பரிந்துரைக்கிறார்கள். உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும், வெளித்தோற்றத்தில் புன்னகைத்துப் பழகுங்கள். அது காலப்போக்கில் நிஜமாகவே உங்கள் உள்ளத்திலும் மகிழ்வை உண்டாக்கிவிடும்' என்பதுதான் அந்த சிம்பிள் டெக்னிக்...
வேலை இழப்பு... பொருளாதார சிக்கல்... நோய் அச்சம்... நெஞ்சே எழு!
'சிவாவுக்கு அன்றைய சூரியன் எழ மறுத்து இருள் சூழ்ந்தது போல இருந்தது அந்த செய்தி. இதயம் உடைந்து சிதறியதாய் உணர்ந்தான். கண்களில் மழை மேகம்.
மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு என்ன வழி?!
"நாம் ஏன் மதுவை ருசித்தோம்.... பின் அது நம் உணர்வோடும் விருப்பங்களோடும் நீக்கமற நிறைந்தது எப்படி? இப்படிப் பல கேள்விகளை உங்களுக்குள்ளாகவே நீங்கள் கேட்டுப் பாருங்கள். மதுவுக்கு அடிமை என்ற நிலையில் இருந்து உங்களை மீட்பதற்கான காரணங்கள் உங்களுக்கே புலப்படும்'' என்கிற கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் ஹரிக்குமார், மதுப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான மருத்துவ வழிமுறைகளையும் விளக்குகிறார்.
பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தலாமா?!
தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பலர் எந்தவித மூச்சுத் திணறல் அறிகுறிகள் இல்லாமல், அதே வேளையில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தும், நுரையீரலில் திட்டுக்கள் படிந்தும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவர்களை பல்ஸ் ஆக்ஸி மீட்டர்(Pulse Oximeter) மூலம் சரியான நேரத்தில் அடையாளம் காண முடியும் என்றும், ஆக்ஸிஜன் மோசமாகக் குறைவதற்கு முன்பேசிகிச்சை அளித்தால் எளிதாகக் காப்பாற்றலாம் என்றும் சொல்கிறார்கள். பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் தேவை, அது கொரோனா சிகிச்சையில் எவ்விதம் பங்களிக்கிறது போன்ற விவரங்களை நுரையீரல் நிபுணர் சுரேஷ் சகாதேவனிடம் கேட்டோம்...
பக்கவாதத்திற்கு பின்னால்...
பக்கவாதம் ஒருவரைத் தாக்கிவிடுகிறது. உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் விடுகிறார். அனைத்துவிதமான சிகிச்சைமுறைகளும் அவருக்காக மேற்கொள்ளப்படுகிறது. நோயாளியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்தபிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? நோயாளியின் உடன் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?!
நடைப்பயிற்சி தியானம்
உடற்பயிற்சிகளிலேயே மிகவும் எளிமையானது நடைப்பயிற்சி. சிரமங்கள் அதிகமின்றி மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரக்கூடியதும் நடைப்பயிற்சிதான்.
தூக்கமே சிறந்த மருந்துதான்!
நம்முடைய வாழ்வில் உறக்கம் மற்றும் உடல், மன இயக்க கடிகாரம்(Circadian rhythm) ஆகிய இரண்டு காரணிகள் பெறுகிற இடத்தைப் பற்றி யாராவது, என்றைக்காவது வியப்பு மேலிட எண்ணிப் பார்த்து உள்ளோமா?! ஏனென்றால் இவை இரண்டும் மெலட்டோனின் என்ற ஹார்மோனை பின்னணியாக கொண்டு சுழன்று வருகின்றன.
தொடரும் கட்டண குழப்பத்துக்கு என்ன தீர்வு?!
அண்மை காலமாக கொரோனாத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக் குறை அதிகம் தேவைப்படுகிறது. படுக்கைகள் கிடைக்காதது ஒரு புறம் இருக்க, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த வரை அனுமதித்தால் அதிக கட்டணம் வசூலிப்பதால் பொது மக்கள் மத்தியில் அதிக கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளரான மகப்பேறு மருத்துவர் சாந்தியிடம் பேசினோம்....
சித்த மருத்துவத்தில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா?!
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் சித்த மருத்துவத்தின் மீது மத்திய மாநில அரசுகளுக்கு நம்பிக்கை இல்லையா என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நோய்களின் தலைவன்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைவிடக் குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். ஊரடங்கில் கூட மது விற்பனை அமோகமாக நடக்கிறது என்பதே இதற்கு சான்று.
காட்டு எலுமிச்சை
எலுமிச்சையின் மகிமை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சிட்ரஸ் அமிலம் நிறைந்தது, ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் கொண்டது, எடை குறைப்புக்கு உதவுவது என்று அதன் நன்மைகள் கணக்கிலடங்காதது. இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சையை அடிக்கடி பயன்படுத்தச் சொல்கிறார்கள். இந்த எலுமிச்சையில் காட்டு எலுமிச்சை என ஒன்றும் பலருக்குத் தெரியாத ஒருவகை இருக்கிறது.
ஆரோக்கியரீதியான சில சவால்கள்!
Work From home...
ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!
"ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது” என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள் குறித்து மேலும் விளக்கமாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
100வது நாள்
கண் அழுத்த நோய்க்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் கண்ணில் ஏற்படும் வேறு சில பிரச்னைகளும் காரணமாக அமையலாம். உதாரணமாக ‘100 டே க்ளூக்கோமா' என்னும் பிரச்னையை எடுத்துக் கொள்வோம். இது கண் அழுத்த நோயை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.
சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்
சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே 'சர்க்கரைக் கொல்லி' என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறு குறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம்...