CATEGORIES
Categorías
உச்சவிருது பெற்றுள்ள முதல் தமிழ் நடிகை!
இந்தியத் திரைத் துறையில் உச்ச விருதாக போற்றப்படும் 'தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது' ஆண்டு தோறும் ஒருவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான விருதுக்கு மூத்த நடிகையும், திரை ஆளுமையுமான வஹீதா ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பப்பா... மம்மா... குக்கூ!
மும்பை சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது..
ஆன்லைன் தள்ளுபடி விற்பனை...உண்மையா?
பண்டிகை காலம் இதோ வந்துவிட்டது. அதற்கு முன்பே எங்கு பார்த்தாலும் ஆடை, டிவி, பிரிட்ஜ், கார் உள்ளிட்டவைகளுக்கான ரகம் ரகமான விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
எனக்கான இடத்தை பிடிச்சிருக்கேன்!
இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் என தமிழ் படங்களில் நடித்த நடிகை ராஷி கண்ணா, மற்ற தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இந்தி படங்களில் பிஸியாக இருக்கும் அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது தான் என் நோக்கம்!
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'ஆஹா கல்யாணம்' படம் மூலம் தென்னக திரையுலகிற்கு அறிமுகமான வாணி கபூர், திரையுலகில் கால் பதித்து 10 ஆண்டுகள் ஆகிறது.
பொழுதுபோக்கு, செயலிகள்... பாதிக்கப்படும் -குழந்தைகள்!
இன்றைய நவீன உலகில் மொபைல் போனின் பயன்பாடும் இணையத்தின் பயன்பாடும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
என்னை மாற்றிய அனுபவங்கள்! அவந்திகா மிஸ்ரா
தெலுங்கு படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் அவந்திகா மிஸ்ரா. தமிழில்‘என்ன சொல்லப் போகிறாய்', 'டி-ப்ளாக்' ஆகிய படங்களில் நடித்திருப்பவர், தற்போது மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறார். நல்ல கேரக்டர்களில் நடிக்க விரும்புவதாக சொல்லும் அவந்திகாவின் மனம் திறந்த பேட்டி இதோ.
முன்று மனம்!
இன்னிக்கு மழை அதிகம்\" என்றார் மாமா. நான் பதில் பேசவில்லை காரின் வைப்பரை நிறுத்தினேன். ஆவேசத்துடன் முன்பக்கக் கண்ணாடியைத் தாக்கிய பெருந்துளிகள், கண்ணாடியை உடைக்க முடியாமல் தோற்று, சிறு சிறு துளிகளாக உடைந்து தற்கொலை செய்தன. கடந்துசென்ற ஒரு சரக்கு லாரியின் ஓட்டுநர் சில விநாடிகள் எங்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் கவனமானார்.
பரிதாப நிலையில் பா.ஜ.க. மாநிலங்கள்!
இந்தியாவில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில் 10 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனையில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் சிண்டே, முதல்வராக இருந்தபோதிலும் அவரை பா.ஜ.க.தான் ஆட்டிப்படைத்து வருகிறது.
ராங்காக வழிகாட்டும் கூகுள் மேப்!
நாலா இடங்களுக்கும் போய்ப் புழங்க வேண்டியவர்கள் மனிதர்கள். பயணத்துக்கு வழிகாட்டி முக்கியம்.
ரத்தம்!
சமூகத்தில் வெறுப்பைத் தூண்டி கொலை செய்யும் கூலிப்படை கும்பலின் பின்னணியை கண்டறியும் பத்திரிக்கை ரிப்போர்டரின் தேடல் தான் ரத்தம்.
தனிப்பட்ட வாழ்வில் சினிமா நுழைவதில்லை! -ஹன்சிகா
ஹன்சிகா... என்றாலே பப்ளி தோற்றத்தில் அவரது புன்னகைதான் நினைவுக்கு வரும். திருமணம் முடிந்து செட்டிலானாலும் திரை உலகில் இருந்து விலகாமல் கலை சேவை செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவருடன் ஒருபேட்டி.
இறுகுப்பற்று
விவகாரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கும் சைக்காட்ரிக்ட் டாக்டர் மித்ரா (ஷ்ரத்தா), தன் கணவன் மனோ (விக்ரம் பிரபு)வின் விருப்பு வெறுப்புகளை பக்காவாக ஹேண்டில் செய்கிறேன் என அவருக்கும் கூட தன்னை அறியாமல் கவுன்சிலிங் கொடுத்து வெறுப்பேற்றுகிறார்.
தமிழ் உணர்வூட்டிய ஆசான்!
அய்யா பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை அக்டோபர் 16
முத்துமாலையைக் கழற்றிக் கொடுத்த ராஜா! - அகிலாண்ட பாரதி
ஊரெங்கும் மகளிர் உரிமைத்தொகை பற்றிய பேச்சாகவே இருக்கிறது. எனக்கு வந்துவிட்டது, உனக்கு வந்திருக்கிறதா என்பதில் தொடங்கி, அவசியமா அவசியம் அற்றதா, பெண்களுக்கு எந்தெந்த விதங்களில் அது பயனளிக்கும், நாட்டின் பொருளாதார நிலைமைக்கு இந்தத் திட்டத்தால் என்ன தீங்கு வரும் என்பது வரை பல விவாதங்கள் நடைபெறுகின்றன.
எதுவும் நிரந்தரம் கிடையாது! - நிமிஷா சஜயன்
மலையாளத்தில் தி கிரேட் இண்டியன் கிச்சன், தெக்கன் தள்ளு கேஸ், நயாட்டு, மாலிக் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நிமிஷா சஜயன்.
மக்களுக்கு ‘பல்பு’ கொடுக்கும் ‘ஜிகுஜிகு' மோடி அரசு!
ஒரு நாட்டின் குடிமக்கள் எப்படி அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமோ, அப்படி அரசும் மக்களுக்கு நம்பகமாக இருக்க வேண்டும். ஆனால், நடந்து கொண்டிருக்கும் பாஜக ஆட்சியில் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மணமும் சுவையும் சத்தும் நிறைந்த யாக் பால்!
யாக் பால் செரிமானத்துக்கு உதவுகிறது. நீரிழிவை தணிக்கிறது. இது உறக்கமின்மைக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மிகை ரத்த அழுத்தத்தை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.
விஷமாகும் பிரீசர் சிக்கன்.. உஷார்!
'ஷவர்மா சாப்பிட்டதால் சிறுமி உயிரிழப்பு!' 'பர்க்கர் சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதி', 'சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் 26 பேர் மருத்துவமனையில் அனுமதி' போன்ற செய்திகளைத் தற்சமயம் அதிகம் பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன்பாக கேரளத்தில் அதிகம் காணப்பட்ட இத்தகைய செய்திகள் இப்பொழுது தமிழ்நாட்டின் பல நகரங்களில் பார்க்க முடிகிறது.
குறையொன்றுமில்லை...
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' அருகிலுள்ள கோவிலில் இருந்து இசைத்தட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மனமுருகி பாடிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டதும் வழக்கம் போல் மீராவுக்கு விழிப்பு வந்து விட்டது.
தென்மாநிலங்களில் குறையும் குழந்தை பேறு...
கருவுறாமை என்பது இன்று உலகளவில் பெரும் கவலையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி உலகளவில் சுமார் 48 மில்லியன் தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 15 சதவீத தம்பதிகளை கருவுறாமை பாதிக்கிறது.
பறிபோகும் இளம் தளிர்கள்.. காரணம் என்ன?
இளமையில் வறுமை கொடியது என்பார்கள். அதைவிட கொடுமையானது சிறுவயது மரணம். உணவும் உறவும் இல்லாமல் ஆயிரக்கணக்கான இள உயிர்கள் வீதியில் பிரிகின்றன. ஆனால், போதுமான வாழ்க்கை, தேவையான வசதி, ஆதரவான உறவு, அரவணைக்கும் சுற்றம் என யாவும் இருந்தும் ஆவியை போக்கிக்கொள்ளும் குழந்தைகள் நிலைதான் புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது.
நான பார்ட்டி பொண்ண இல்லை! -அனு இம்மானுவேல்
தமிழில் நம்ம வீட்டு பிள்ளை, துப்பறிவாளன் என ஒரு சில படங்களில் தலைகாட்டிய நடிகை அனு இம்மானுவேல், தெலுங்கு பட உலகில் பிரபல நாயகியாக வலம் வருகிறார்.
ஊழலுக்கு வித்திடும் உழைப்பு சுரண்டல்!
அண்மையில் பேராசிரியை ஒருவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட அதைக் குறித்து அவரிடம் விளக்கினேன். இதற்கு எவ்வளவு செலவாகும், எப்போது சமையல் செய்யலாம், எத்தனை நாள் விடுமுறை தேவைப்படும் என்று பல சந்தேகங்கள் கேட்டவர் மீண்டும் மீண்டும் சிகிச்சைக்காக ஆகும் தொகை பற்றியே கேட்டார்.
திறமைகளை தூண்டும் வாய்ப்புகள்!
தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள ரியா சுமன் இளம் பருவத்திலிருந்து சினிமா நடிகையாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர்.
அன்னிய இனங்கள்!
இன்று தமிழகத்தில் பரவிக் கிடக்கும் பார்த்தீனியம் செடி, கருவேலம், ஒட்டுண்ணி, தாவர வகைகள் சூழலுக்கும் ஆபத்தை உண்டாக்கி வருகின்றன
மாறும் கூட்டணி?
மாறுதல் ஒன்றே மாறாதது என்பதை அரசியல் களம் அடிக்கடி மெய்பித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் தருணத்தில் அரசியல் அணி மாற்றம் தொடர்பான நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. இதன் மைய விசையாக ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசத் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது அமைந்துவிட்டது.
செரிமானச் சிக்கலை தீர்க்கும் மஞ்சள்!
சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண, பல நூற்றாண்டு களாக மஞ்சள் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நிராகரிப்புகள் தந்த பாடம்!
தமிழில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்த நரேன், ஒரு இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம் படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார். இது தவிர, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது திரையுலக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
நெஞ்சில் மோதிய அலைகள்...
இறையனார் மேலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. அன்று சுதந்திரத் திருநாள். கிழக்குநோக்கி திடலின் மத்தியில் தேசியக்கொடி பறந்தது. அப்போதுதான் கொடி ஏற்றியிருந்தார்.