CATEGORIES
Categorías
ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னெள
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம்
மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவர்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
அஜீத் பவார் வெற்றியை ஏற்பதில் எந்தக் கவலையும் இல்லை: சரத் பவார்
'மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் அஜீத் பவார் கட்சி அதிக இடங்கள் வென்றதை ஏற்றுக் கொள்வதில் எந்த கவலையும் இல்லை' என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) பிரிவு தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தெற்குலகுக்கு 30,000 கோடி டாலர் பருவநிலை நிதி போதாது - ஐ.நா. மாநாட்டில் இந்தியா ஆட்சேபம்
அஜர்பைஜானில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தெற்குலகுக்கான வருடாந்திர 30,000 கோடி டாலர் பருவநிலை நிதி தொகுப்பு மிகக் குறைவு என்று இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.
மகாராஷ்டிர புதிய முதல்வர் யார்? நீடிக்கும் எதிர்பார்ப்பு
மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், புதிய முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி நீடித்து வருகிறது.
வைஷ்ணவ தேவி கோயில் ரோப் கார் திட்டத்துக்கு எதிராக மூன்றாவது நாளாக போராட்டம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்வதற்கான ரோப் கார் திட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.
வங்கதேசம்: அதானி குழும மின்சக்தி ஒப்பந்தங்கள் மறுஆய்வு
இந்தியாவின் அதானி குழுமம் உள்பட 7 மின் உற்பத்தி நிறுவனங்களுடன் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா செய்துகொண்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வங்கதேச இடைக்கால அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
இந்திய, இத்தாலிய பாய்மரக் கப்பல் கூட்டுப் பயிற்சி
கொச்சி கடற்கரையில் இத்தாலிய பாய்மரக் கப்பலுடன் கூட்டுப் பயிற்சியில் சனிக்கிழமை ஈடுபட்ட இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணி.
உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: தண்டவாளத்தில் 25 அடி நீள இரும்புக் குழாய்
உத்தர பிரதேசத்தில் ரயிலைக் கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் 25 அடி நீள இரும்புக் குழாயை வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதானிக்கு நேரடியாக நோட்டீஸ் : அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை
மோசடி குற்றச்சாட்டில் தொழிலதிபர் கெளதம் அதானிக்கம் அவரது உறவினர் சாகர் அதானிக்கம் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) நேரடியாக நோட்டீஸ் அனுப்ப சட்டபூர்வ அதிகாரமில்லை; முறையான தூதரக வழியிலேயே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜார்க்கண்ட் முதல்வராக நவ. 28-இல் ஹேமந்த் சோரன் பதவியேற்பு
ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரனுக்கு மாநில ஆளுநர் சந்தோஷ் கங்வார் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நவ. 28-ஆம் தேதி முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்கிறார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்; தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நிறைவு
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக வார இறுதி நாள்களில் நடந்த நான்கு சிறப்பு முகாம்கள் நிறைவடைந்தன.
பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை உற்பத்திப் பணி தீவிரம்-அமைச்சர் ஆர்.காந்தி
பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
நுகர்வோர் குறைதீர்க்க 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஹெல்ப்லைன் இணைப்பு
மத்திய நுகர்வோர் அமைச்சகம் தகவல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்
தில்லியில் ஜன. 11, 12-இல் 'வளர்ந்த பாரதத்தின் இளம் தலைவர்கள் மாநாடு'
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் அறிவிப்பு
ஒழியட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை
இந்தியா திருமணத்தை ஒரு புனிதமான, சமூக நிறுவனமாகப் பார்க்கிறது. பல ஆண்கள் தங்கள் மனைவிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் துன்பகரமான இன்பத்தை அனுபவிப்பதாக உளவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மணிப்பூர் கலவரம் - ஏன் இந்த நிலைமை?
மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது. வன்முறைச் சம்பவங்கள் நிகழத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
நாளை அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நாகூர் தர்கா கந்தூரி விழா பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்
வானதி சீனிவாசன் கோரிக்கை
விசாரணையின்போது இளைஞர் உயிரிழப்பு: நீதித் துறை நடுவர் நேரில் விசாரணை
புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் இளைஞர்கள் போதை ஊசி உள்ளிட்ட போதைப்பொருள்களை பயன்படுத்திக்கொண்டிருப்பது குறித்த ரகசியத் தகவலின்பேரில், தனிப்படை போலீஸார் அவர்கள் இருந்த வீட்டை வெள்ளிக்கிழமை இரவு சுற்றி வளைத்தனர்.
தடை செய்யப்பட்ட வலைகளுடன் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளுடன் மீன்பிடித்த தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 23 பேரை சாயல்குடி மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனர்.
அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது
எடப்பாடி பழனிசாமி
2026-இல் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு தேவை
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
‘இளம் பருவத்தில் மகப்பேறு சிரமங்கள் குறித்த விழிப்புணர்வு தேவை’
பெண்கள் இளம் பருவத்தில் மகப்பேறு அடைவதால், அவர்கள் எதிர்கொள்ளும் உடல், மனம், சமூக மற்றும் பொருளாதார சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளம்பருவ மகளிர் நலன் அமைப்பின் தலைவர் சம்பத் குமாரி வலியுறுத்தினார்.
ரௌடி கொலை: போலீஸார் விசாரணை
எண்ணூரில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், 4 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
312 ஊர்க்காவல் படையினருக்கு அங்காடி அட்டை
ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் வழங்கினார்
ஏழைகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க பங்களித்தவர் டாக்டர் பத்ரிநாத்
ஏழை - எளிய மக்களுக்கு உயர்தரமான கண் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்காக டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அளித்த பங்களிப்பு அளப்பரியது என மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள் சாமி புகழாரம் சூட்டினார்.
கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கான கண்காணிப்பு அலுவலர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது.