CATEGORIES
Categorías
தடைசெய்யப்பட்ட ‘நிமெசலைட்' மருந்து உற்பத்தி: கண்காணிக்க அறிவுறுத்தல்
வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் 'நிமெசலைட்' மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அதன் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மத்திய மருந்து தரக்கட்டுப் பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வாழும் காலத்தில் சௌகரியமாக வாழ...
மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று, நவதிருப்பதியில் இரண்டாவது தலம், சந்திரனுக்கு உரியது.. என்றெல்லாம் புகழப்படுவது வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோயில் என்ற அருள்மிகு பரமபதநாதன் கோயிலாகும்.
மெய்த்தன்மையை அறிதல் நன்று!
நம் நாட்டிலேயே உரிய வேலைவாய்ப்புகள் இருந்தும் அதிகமான சம்பளம் என்கிற தூண்டுதலால் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் நம் நாட்டு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2,642 மருத்துவர்களுக்கு பிப்.26-இல் பணி ஆணை
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வரும் 26-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மொழிப் பிரச்னையில் தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம்
மூன்றாவது மொழியாக ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக தவறாகப் பிரசாரம் செய்துவரும் திமுக, அதன் கூட்டணி கட்சித் தலைவர்களின் இரட்டை வேடத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது
கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு
தில்லியின் 9- ஆவது முதல்வராக ரேகா குப்தா மற்றும் அவரது அமைச்சரவையில் ஆறு பேர் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் வருகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறார்.

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்
இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொருள் ரேடியோக்களை கொள்முதல் செய்வதற்கான ரூ. 1,220.12 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

கில், ஷமி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
வங்கதேசத்தை வீழ்த்தியது

அமெரிக்கா மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்துங்கள்
தங்கள் நாட்டின் மீது முன்வைக்கும் விமர்சனங்களை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி மட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் எச்சரித்துள்ளார்.
புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்று சிகிச்சை
குடல்வால் அழற்சி சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்தனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் தொடர் போராட்டம்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

ஆவடி அருகே ரசாயன ஆலையில் தீ
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் ரசாயன ஆலை, மரப் பேட்டன்ஸ் நிறுவனம் ஆகியவை வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மார்ச்சில் நிறைவு பெறும்
பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் ரூ. 51 லட்சத்தில் புதிய கட்டடங்கள்
அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி
\"இந்தியா விதிக்கும் அதிக வரிகளை எதிர்கொள்ளும் வகையில், அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை\" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம்: காங்கிரஸ் எம்.பி. மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அஸ்ஸாம் மாநிலம் துப்ரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ரகிபுல் ஹுசைன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: வங்கதேச விமானம் நாகபுரியில் அவசர தரையிறக்கம்
வங்கதேசத்தில் இருந்து துபை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னை ஃபார்முலா - 4 கார் பந்தய செலவு
சென்னை ஃபார்முலா - 4 கார் பந்தயத்துக்கு செய்யப்பட்ட செலவுத் தொகையான ரூ. 42 கோடியை தமிழக அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

யுஜிசி வரைவு நெறிமுறைகளை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்
கேரள முதல்வர் பினராயி விஜயன்
சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி பிப். 28-இல் தொடக்கம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
அமெரிக்கா நாடு கடத்திய இந்தியர்கள் பனாமா வருகை
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் சிலர் பனாமாவுக்கு வந்தடைந்துள்ளதாகவும், அவர்களின் நலனை உறுதி செய்ய பனாமா அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

வரும் பேரவைத் தேர்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி
பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவர்கள் உறுதிபூண்டனர்.

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வர் அதிஷி வியாழக்கிழமை கேட்டுக்கொண்டார்.

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல்: அயோத்தி, மதுரா வளர்ச்சிக்கு ரூ.275 கோடி
வரும் நிதியாண்டிற்கான (2025-26) உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவை தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளராக விஜேந்தர் குப்தா போட்டி
தில்லி சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளராக ரோஹிணி எம்.எல்.ஏ விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
அவதூறு கருத்து: அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.