CATEGORIES
Categorías
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் தொடர் கனமழை
ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது
6 மாநிலங்களவை இடங்களுக்கு டிச.20-இல் இடைத்தேர்தல்
அந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தென் பெண்ணையாறு நீர்ப் பங்கீடு; நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தென் பெண்ணையாறு நீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக தனித் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நிலவர அறிக்கையை இரண்டு வாரங்களில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
முதல்வர் தலைமையில் முகப்புரை வாசிப்பு
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, அதன் முகப்புரையிலுள்ள வாசகங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாசிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு பேரிடர் நிதி ரூ.50 கோடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்து தணிப்புகளுக்காக ரூ. 1,000 கோடியை முன்மொழிந்து ஒப்புதல் அளித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொது வாழ்வில் உள்ளவர் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்
பொது வாழ்வில் உள்ளவர் நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.
வேதங்கள் ஏன் அவசியமானவை?
கண்ணுக்குப் புலப்படாமல் மறைவாக இருந்தாலும் பெருமரத்தைத் தாங்குவது வேர். அதே போல வேதம் இந்த மண்ணின் அறிவுச் செல்வமாக நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நமது முன்னோர்களின் அனுபவப் பேரறிவு 'மறை' என வேதங்களுக்குப் பெயர் கொடுத்தது.
வங்கக் கடலில் இன்று உருவாகிறது 'ஃபென்ஜால்' புயல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகா்கிறது. இருப்பினும், இது மேலும் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும்.
காவல் ஆய்வாளர் மீதான துறை நடவடிக்கை ரத்து
காவல் ஆய்வாளரிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்ட நிலையில், அவர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
தமிழகத்தில் ரூ. 27 கோடியில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு
தமிழகத்தில் ரூ. 27.34 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பள்ளி மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து
பள்ளியில் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிக் குழந்தைகளிடம் துணிச்சலை வளர்ப்பதே ஆசிரியர்களின் முதல் பணி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஜப்பானில் நவ. 30-இல் பாரதி விழா
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஜப்பானில் நவ. 30-ஆம் தேதி பாரதி விழா நடைபெறுகிறது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ஆவது அலகின் மின் உற்பத்திக்கான பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவர்களுடன் மக்கள் நல்வாழ்வுச் செயலர் பேச்சு
உயரதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவர் சங்கத்தினருடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை துறைமுகத்தில் முறைகேடு; 3 இடங்களில் சிபிஐ சோதனை
சென்னை துறைமுகத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துச் செயலர் உறுதி
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி உறுதியளித்தார்.
இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை: சட்டப்படி நடவடிக்கை
பாடகி இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றத்துக் கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் தொடர் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி செல்வதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு
‘சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான அரசு நிா்வாகம்-நாடாளுமன்றம்-நீதித் துறையின் பொறுப்பு’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகிக்காது
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகித்துக்கொள்ளாது என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்
உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வர்த்தக அணி வலியுறுத்தியுள்ளது.
சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
டெல்டா மாவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செள்ளை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'
சென்னை, நவ. 25: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை, நெதர்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.