CATEGORIES
Categorías
நீட் ரத்து, மதுக் கடைகளை மூட வேண்டும்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்தில் மதுக் கடைகளை காலநிர்ணயம் செய்து மூட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 26 தீர்மானங்கள் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பிரிட்டன்: கன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் கருப்பின பெண் தலைவர்
பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக, நைஜீரியாவைப் பூர்வமாகக் கொண்ட கெமி பேடெனாக் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செர்பியா: ரயில் நிலைய கூரை இடிந்து 14 பேர் உயிரிழப்பு
நோவி சாட் நகர ரயில் நிலைய வாயில் கூரை இடிந்து விழுந்த பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகள்.
ஜூலை-செப்.:30 நகரங்களில் வீடுகளின் விற்பனை குறைந்தது
கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.
இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி!
அயதுல்லா கமேனி சூளுரை
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480 கோடி டாலராக சரிவு
கடந்த மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480.5 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரர்கள்
தங்களின் எல்லையை யொட்டிய ரஷிய பகுதிகளில் 7,000 வட கொரிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
கல்லறைத் திருநாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
கல்லறைத் திருநாளையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
யுபி யோதாஸை வென்றது பாட்னா பைரேட்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற, யுபி 22 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.
இறுதிச்சுற்றில் ஸ்வெரெவ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு, முதல் வீரராக ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் சனிக்கிழமை முன்னேறினார்.
பேட்டிங்கில் கில், பந்த்; பௌலிங்கில் ஜடேஜா, அஸ்வின் அசத்தல்
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் நியூஸிலாந்தின் 2-ஆவது இன்னிங்ஸில் அந்த அணியை 171 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழக்கச் செய்து, ஆட்டத்தில் தனது கட்டுப்பாட்டை மீட்டு வருகிறது.
பருவநிலை மாற்றத்தால் இந்தியா 25% ஜிடிபி இழக்கும் அபாயம்!
பருவநிலை மாற்றத்தால் வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 24.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இழக்கும் எனவும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம் 16.9 சதவீத இழப்பைச் சந்திக்கும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.
சென்னையில் நாளை தொடங்குகிறது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்
சீனியர் ஆடவர்களுக்கான 14-ஆவது தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் திங்கள்கிழமை (நவ. 4) தொடங்கி, வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் இலவசக் காப்பீடு: தேவஸ்வம் அமைச்சர் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் எதிர்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் அனைத்து பக்தர்களுக்கும் ரூ.5 லட்சத்துக்கான இலவசக் காப்பீடு வழங்கப்படவுள்ளது என்று மாநில தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன் சனிக்கிழமை தெரிவித்தார்.
திருப்பதியில் ஹிந்து பணியாளர்கள்; வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோர்
அசாதுதீன் ஒவைசி விமர்சனம்
பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் இருந்து வரும் சீக்கிய பக்தர்களுக்கு இலவச விசா: பாகிஸ்தான்
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு இணையவழியில் இலவச விசா வழங்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்தார்.
கிரீஸ் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடியை கிரீஸ் பிரதமர் கிரி யாகோஸ் மிட்சோடாகிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா-கிரேக்கம் இடையிலான இருதரப்பு உறவு குறித்து பேசினார்.
பண்டிகை காலம்: தில்லியில் புதிதாக 86 ஆயிரம் வாகனங்கள் பதிவு
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு 86,000-க்கும் அதிகமான வாகனங்கள் தில்லி போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
மகாராஷ்டிரம்: ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு நிதி உதவி?
பவார் புகாரை மறுத்த ஃபட்னவீஸ்
இரு தரப்பு ஒத்துழைப்பு: தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
இந்தியா வந்துள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியம் போங்ஸாவுடன் இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிராந்திய மேம்பாடு குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இடஒதுக்கீடு உரிமையை பறிப்போர் பிறருக்குப் பாடம் எடுக்கின்றனர்
காங்கிரஸ் தலைவர் கார்கே
அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு நாடு கடத்த மும்பை காவல் துறை கோரிக்கை
தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் பரிந்துரையை மத்திய உள்துறைக்கு மும்பை காவல் துறை அனுப்பியுள்ளது.
8 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம்
ஆஸ்துமா, காச நோய், கண்நீர் அழுத்த நோய் உள்பட 8 நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு குறித்து பொய் தகவல்களைப் பரப்பும் காங்கிரஸ்
கார்கேவுக்கு ஹர்தீப் சிங் புரி பதிலடி
ஜம்மு-காஷ்மீரில் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை தேவை
ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.
தனியார் நிறுவனத்தின் ரூ. 195 கோடி சொத்துகள் முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை
கோவா எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் நிராகரிப்பு: உயர்நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் முடிவு
கோவாவில் ஆளும் பாஜகவில் இணைந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுவை பேரவைத் தலைவர் ரமேஷ் தாவத்கர் நிராகரித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
குரூப் 4 தேர்வு: ஜாதிச் சான்றுகள் அளிக்க யாருக்கெல்லாம் தகுதி?
டிஎன்பிஎஸ்சி விளக்கம்